ஸ்பெஷல்
Published:Updated:

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

டாக்டர் விஷ்வ சசிகலா

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

மழைக்காலம் வந்து விட்டாலே, வீட்டுக்கு அழையா விருந்தாளிகளாக வந்துவிடுகின்றன சளியும் காய்ச்சலும். இதைப் போக்க மிகச் சிறந்த மருந்து, தூதுவளை. இயற்கையிலேயே, பல இடங்களில் அடர்ந்து படர்ந்திருக்கும் கொடி வகையைச் சார்ந்தது இது. முட்களுடன் கூடிய இலைகள், நீல நிறப் பூக்கள், சிவப்பு நிறக் கனிகளுடன் காணப்படும் அரிய வகைக் கீரை. இலையில் இருக்கும் முட்களை நீக்கிவிட்டு, இதை மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  குழந்தைகளுக்கு ஏற்படும் குத்து இருமலுக்கு தூதுவளை இலையை ஆவியில் வேகவைத்துச் சாறு எடுத்து, 10 முதல் 15 மி.லி வரை சிறிது தேனுடன் கலந்து கொடுக்கலாம்.

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  தொண்டையில் ஏற்படும் தொண்டைத் தொற்று, ஆஸ்துமா, அலர்ஜிக்கு, தூதுவளைத் துவையல் நல்லது.

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  குழந்தைகளுக்கு வரும் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் (primary complex) என்னும் கணை நோய்க்கு, தூதுவளையை நெய் சேர்த்து வதக்கி, ஆறு மாதங்கள் தொடர்ந்து கொடுத்துவந்தால், பசியைத் தூண்டி நோயைக் குணமாக்கும். நினைவாற்றலைப் பெருக்கும்.

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

 ஹைப்போ       தைராய்டிசத்தினால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் சோர்வைப் போக்கும்.

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  வாயுத்தொல்லை, மூட்டு வலிக்குச் சிறந்த மருந்து.

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  நாள்தோறும் நான்கு இலைகள் உட்கொண்டு வந்தால் போதும். புற்றுநோய்  வராமல் தடுக்கும். இளமையைத் தக்கவைக்கும்.

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  உடலின் கொழுப்பைக் குறைத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.  

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

சுவையான தூதுவளை ரெசிப்பி!

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  5 தூதுவளை இலைகளுடன், 2 நாட்டுத்தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம், கல் உப்பு, வெல்லம்  சிறிதளவு சேர்த்து 250 மி.லி தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, தாளித்து ரசமாக செய்து சாப்பிடலாம்.  

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  5 தூதுவளை இலையுடன், 4 சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், மிளகு எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிச் சிறிதளவு வெல்லம், புளி சேர்த்து அரைத்து, துவையலாகப் பயன்படுத்தலாம். இது  2, 3 நாட்களானாலும் கெடாமல் இருக்கும்.

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  அரிசியை ஊறவைத்து தூதுவளை இலையை சேர்த்து அரைத்து,  தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து அடையாக தோசைக்கல்லில் வார்த்து எடுக்கலாம்.  

இளமையைத் தக்க வைக்கும் தூதுவளை!

  தூதுவளையை நன்றாகத் தண்ணீரில் அலசி, மிளகு சேர்த்து அரைக்கவும்.  நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, பிறகு புளிக்கரைசலை ஊற்றி, அதில் அரைத்த தூதுவளைக் கலவை, உப்பு , மஞ்சள்தூள் கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும். தூதுவளைக் குழம்பு ரெடி. சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.  

பி. ஆனந்தி