ஸ்பெஷல்
Published:Updated:

ஆல் பியூட்டி... தட்ஸ் மை பர்சனாலிட்டி! கானா பாலா

பு.விவேக் ஆனந்த்

   பார்ப்பதற்கு 27 வயது இளைஞராக இருக்கும் கானா பாலாவுக்கு வயது 44. ''வயசுன்னா இன்னாபா... மனசுதான்ப்பா!'   என ஜாலிலோ ஜிம்கானா பாடும் கானா  பாலாவின் ஃபிட்னெஸ் ரகசியங்கள் இங்கே...

ஆல் பியூட்டி... தட்ஸ் மை பர்சனாலிட்டி! கானா பாலா

'ஒல்லியா இருக்கிறதே ஒரு வரம்தான். இதுக்குனு ஒல்லியா இருக்க உணவுக்கட்டுப்பாடோ, தனியா உடற்பயிற்சினோ எதுவும் செய்றதில்லை. சின்ன வயசிலிருந்தே கிடைச்சதை  சாப்பிடுவேன்.  வியர்வை  வழிய வழிய, ஃபுட்பால் ஆடுவேன்... அவ்வளவுதான்.

என் சின்ன வயசுலயே எங்கப்பா தவறிட்டார். என்கூடப் பிறந்தவங்க மொத்தம் ஏழு பேர். எங்கம்மாவோட ஒரே வருமானத்துல மொத்தம் எட்டு பேர் சாப்பிடணும். ஒரு நாளைக்கு ஒரு வேளை வயிறாரச் சாப்பிடுறதே அபூர்வமான விஷயம். அதுவும் காலையில் சாப்பிட்டதே கிடையாது. அதனாலயே எனக்குச் சின்ன வயசுல, சாப்பாட்டு மேல அதிக நாட்டம் இல்லாமப்போயிடுச்சு.

நேரம் காலம் பார்க்காம  ஃபுட்பால்  ஆடிட்டே இருப்பேன். 15 வருஷம் டெய்லி ஃபுட்பால் விளையாடினேன். ஆனா, வருமானத்துக்கே வழியில்லாதப்ப, கால்பந்து ஆசையும் கனவாப்போச்சு. கேரம் விளையாடுறதுல எனக்கு அவ்ளோ இன்ட்ரஸ்ட். எங்க ஏரியாவில கேரம்

போர்டுல நான்தான் பிரபலம். வக்கீலாவும் இருந்தேன். இப்போ, கானா பாட்டுப் பாடறதுதான் முழு வேலை. ஆசையெல்லாம் கனவாப்போயிடுச்சுனு விட்டுட முடியுமா? இப்பவும், வட சென்னைல எதாவது ஒரு ஃபுட்பால் கிரவுண்ட்ல டெய்லி காலைல என்னைப் பார்க்கலாம். வேகம், ஸ்டாமினா, குறி வெச்சு அடிக்கிறது, சமயோசித புத்தி, குழுவா இணைஞ்சு விளையாடற ஒற்றுமை மனப்பான்மை இதெல்லாம் ஃபுட்பால்ல ரொம்பவே முக்கியம். ஆனால், இதுக்குன்னு நான் தனியா பயிற்சி எதுவும் எடுக்கற

தில்லை. நான் விளையாடறதுக்கான உணர்வு, என் உடல் திறன் எல்லாம் ரத்தத்துலயே ஊறிப்போயிருக்கு. ஃபுட்பால்தான் ஆஸ்பத்திரி பக்கமே போகாம என்னைப் பார்த்துக்குதுனு நான் நம்பறேன்.  ஃபுட்பாலால தான் நான் போடுற சட்டை, பேன்ட் வருஷமா பத்தாமப் போனதே இல்லை. அதே சைஸ்... அழகா இருக்கேன்!'

'குரலை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?'

'சூடான, குளிர்ச்சியான, இனிப்பு, புளிப்பு, காரம்னு எனக்குப் பிடிச்ச எல்லாத்தையும் சாப்பிடுவேன். எதனாலயும் என் குரல் பாதிக்காது. காரணம், என்னோட பிழைப்பே, 'மரண கானா’ பாடுவது. அதையே, கொஞ்சம் மாத்தி, சினிமால இப்போ பாடுறேன் அவ்வளவுதான். இதற்கென, சிறப்புப் பயிற்சி, கட்டுப்பாடுனு எல்லாம்  எதுவும் கிடையாது.'

ஆல் பியூட்டி... தட்ஸ் மை பர்சனாலிட்டி! கானா பாலா

'என்னென்ன உணவுகளைச் சாப்பிடுவீர்கள்?'

'எனக்கு டிஃபன், ஃபாஸ்ட் புட் சாப்பாடெல்லாம் ஆகாது. எண்ணெயில் பொரிச்ச சாப்பாட்டைத் தொடக்கூட  மாட்டேன். தண்ணி நிறையக் குடிப்பேன். சில சமயத்துல ஒரு நாளைக்கு நாலு லிட்டருக்கும் அதிகமா தண்ணி குடிப்பேன். சாராயம் குடிக்கிறது, சிகரெட் பிடிக்கிறதுனு எந்தப் பழக்கமும் கிடையாது.  நான்வெஜும் ரொம்ப சாப்பிடறது இல்ல. முன்னாடி எல்லாம் வீட்ல காலையில சாப்பிட ஒண்ணும் இருக்காது, அதனால சாப்பிடறது இல்ல. ஆனா அது ரொம்ப தப்புன்னு தெரிஞ்சதால,  இப்ப காலைல பால், பழம்னு டெய்லி சாப்பிட்டுடறேன்'' சிரிக்கிறார்.

''சின்ன வயசுல டாக்டராகணும்னு ஆசை இருந்திச்சு. ஆனா, அதுக்கு  வசதி இல்லாததால, வக்கீலுக்குப் படிச்சேன். அதனால, இப்போ என் குழந்தையை டாக்டருக்குப் படிக்கவெச்சு, எங்க பகுதியில் இருக்கிற ஏழை ஜனங்களுக்கு இலவசமா சிகிச்சை தரணும்கிறதுதான் இப்போதைக்கு என் ஒரே லட்சியம்.''  கண்களில் நம்பிக்கை மின்னச் சொல்கிறார் பாலா.

40க்கு மேலும் நலமாக வாழ...

ஆல் பியூட்டி... தட்ஸ் மை பர்சனாலிட்டி! கானா பாலா

 உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். உங்களுக்குப் பிடித்த விளையாட்டை தினம் ஒரு அரை மணி நேரம் விளையாடுங்கள். விளையாட்டும் உடற்பயிற்சிதான்.

ஆல் பியூட்டி... தட்ஸ் மை பர்சனாலிட்டி! கானா பாலா

 புகை, மது இரண்டுக்கும் அடிமை ஆகாதீர்கள்.

ஆல் பியூட்டி... தட்ஸ் மை பர்சனாலிட்டி! கானா பாலா

 எப்போது மனசை  மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். மன அழுத்தம் காரணமாகத்தான் பெரும்பாலான நோய்கள் வருகின்றன. கோபம் வரும் சமயங்களில் பிடித்த பாடலையோ, நகைச்சுவைக் காட்சிகளையோ பார்த்து டென்ஷனைக் குறையுங்கள்.

ஆல் பியூட்டி... தட்ஸ் மை பர்சனாலிட்டி! கானா பாலா

 வயதாகிறதே என்று எண்ணாதீர்கள். உங்களைவிட வயது குறைந்தவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல.