Published:Updated:

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க..

டாக்டர் ரவி சுப்பிரமணியம்

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க..

டாக்டர் ரவி சுப்பிரமணியம்

Published:Updated:

 பள்ளிக் காலங்களில் தப்பு செய்தால் தண்டனையாக, வகுப்பறைக்கு வெளியே வெயிலில் முட்டி போடச்சொல்வார்கள். அதே போல இன்னும் சில வருடங்களில் நம்மில் பலர் தினமும் வெயிலில் ஒரு மணி நேரம் நின்றே ஆக வேண்டும் என்ற தண்டனையை நமக்கு நாமே கொடுக்க வேண்டியதிருக்கும். ஏன் என்கிறீர்களா? வைட்டமின்- டி குறைபாடுதான்.

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க..

நமது உடலில் எலும்புகளின் கட்டுமானம் சரியாக இருந்தால்தான் நாம் நிற்க, நடக்க, ஓட என எந்த வேலையையும் செய்ய முடியும். எலும்புகளின் கட்டுமானம் சரியில்லை என்றால் நம்மால் எழுந்திருக்கக்கூட முடியாது. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியமானது. இந்த கால்சியத்தை எலும்பு கிரகிக்க உதவுவது வைட்டமின்- டி. ஒருவர் உணவின் மூலம் கால்சியம் சத்தை மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால் போதாது. வைட்டமின்- டி இல்லையென்றால் கால்சியம் நமது எலும்புகளில் தங்காமல் வெளியேறிவிடும். இன்சுலின் சுரக்க, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இதய நோய்கள் வராமல் தடுக்க வைட்டமின்- டி கண்டிப்பாகத் தேவை.

நம் உடலில் தினமும் புதிய செல்கள் உற்பத்தியாகும், பழைய செல்கள் அழியும். எலும்பு செல்களிலும் இது நிகழும். இப்படி தினமும் புதுப்புது எலும்பு செல்கள் உற்பத்தியாவதை ஆஸ்டியோபிளாஸ்ட் (Osteoblast) என்றும், அழிவதை ஆஸ்டியோகிளாஸ்ட் (Osteoclast) என்றும் அழைப்பர்.

தினமும் எலும்பு உற்பத்தி ஆவதற்கும், வளர்ச்சிக்கும் வைட்டமின்- டி கட்டாயம் தேவை. வைட்டமின் -டி இல்லாதபோது எலும்பு நலிவடையும். சூரிய ஒளியில் இருந்து வரும் பல்வேறு கதிர்களில் புற ஊதாக் கதிர்-பி என்ற கதிர் நமது தோல் வழியாக உடலுக்குள் செல்கிறது. பிறகு கல்லீரல் வழியாக சிறுநீரகத்துக்குச் சென்று 1,25 டை-ஹைட்ராக்சி வைட்டமின் -டி

(1,25 Dihydroxy Vitamin-D) ஆக மாறுகிறது. இது கால்சியத்தைக் கிரகித்து எலும்பின் கட்டுமானத்துக்கு உதவுகிறது. வைட்டமின் -டி கிடைப்பதற்காக மருந்து, மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள் என எதையும் வாங்கிச் சாப்பிட வேண்டியதது இல்லை. தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளி உடலில் பட்டாலே போதும். காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையிலும் இருக்கும் சூரிய ஒளிதான் உடலுக்கு நல்லது. இந்தத் தருணத்தில் வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகள், அரை மணி நேரம் செய்வதன் மூலம் வைட்டமின்- டி சத்து உடலுக்குக் கிடைப்பதோடு, தசைகள் வலிமை பெறும், எலும்பு உறுதியாகும். உணவில் மீன், முட்டை ஆகிய பொருட்களில் மிகவும் சிறிதளவு வைட்டமின் -டி உள்ளது.

குறைபாடு யாருக்கு வரும்?

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க..

அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலியக் கண்டங்களில் வசிப்பவர்கள் உடலில் சூரியஒளி, போதுமான அளவு படாது. இதனால் அங்கே வைட்டமின் -டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்தியா போன்ற வெப்பம் தகிக்கும் நாட்டில் வைட்டமின்- டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. இரவா, பகலா, வெயிலா, மழையா எனத் தெரியாமல் ஏ.சி அறையில் அமர்ந்து வேலைபார்க்கும் நபர்களுக்குத்தான் அதிக அளவு வைட்டமின் -டி குறைபாடு இருக்கிறது. வயதாகும்போது பலரும் தடுக்கி விழுந்து, படுத்த படுக்கையாகிவிடுவதையும், முதுகில் கூன் விழுவதையும் நாம் பார்க்கிறோம். இதற்கு வைட்டமின் -டி குறைபாடும் முக்கியக் காரணம்.

வைட்டமின்-டி குறைபாடு இருப்பவர்கள் மீள்வது எப்படி?

வைட்டமின் -டி ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் தேவையான வைட்டமின் -டி கிடைக்கும். தினமும் காலை அல்லது மாலை வேளையில் சூரிய ஒளி உடலில்படும்படி குறைந்தபட்சம் அரை மணி நேரம் நிற்க வேண்டும். புகையிலை, ஆல்கஹால், காஃபின், டின் ஜூஸ், புரோட்டீன் ஷேக் போன்ற பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கீரை, பாதாம், வால்நட், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  வெயிலில் போகும்போது சன்ஸ்க்ரீன் க்ரீம்களைத் தோலில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். அழகுக்காகப் பூசப்படும் இத்தகைய க்ரீம்கள், தோலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களைத் தடுப்பது மட்டுமின்றி, தோல் புற்றுநோயையும் ஏற்படுத்துகின்றன.  ஆரோக்கியம் என்பது அறைக்குள் இல்லை. வெளியே வாங்க பாஸ்! 

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க..

வைட்டமின்-டி பரிசோதனை செய்வது எப்படி?

வைட்டமின்-டி பற்றாக்குறை உள்ளதா என்பதை, ரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். நமது உடலில் வைட்டமின்-டி 30 நேனோ கிராம்.மிலி என்ற அளவைவிட அதிகமாக இருக்க வேண்டும். 10 நே.கி/மி.லி  அளவுக்குக் கீழ் இருந்தால், நிலைமை மோசமாகிவிடும். உடல் முழுவதும் வலி இருக்கும். நடக்கவே சிரமப்பட வேண்டியிருக்கும்.

வைட்டமின்-டி குறைபாட்டால் என்ன நிகழும் ?

வைட்டமின் -டி குறைபாட்டால் எலும்பு பலவீனம் அடையும். ஆஸ்டியோமலேசியா, ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய நோய்கள் தாக்கும். குழந்தை
களுக்கு ரிக்கெட்ஸ் என்ற நோய் வரும். இதனால் குழந்தைகள் வளரும்போது எலும்புகள் விநோதமாக நீட்டிக்கொண்டும், சுருண்டுகொண்டும் இருக்கும். இதனால், குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இன்சுலினின் சீரான இயக்கத்துக்குக் காரணமான பான்கிரியாடிக்-பீட்டா எனும் செல், வைட்டமின் -டி குறைபாட்டால் பாதிக்கப்படும். இதனால் இன்சுலின் சுரப்பது குறைந்து, சர்க்கரை நோய் வரும். ரத்தக் குழாய்கள் சுருங்கிப்போகும். எனவே, இதய நோய்கள் வரு
வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் வைட்டமின் -டி குறைபாடு ஒரு காரணம். மேலும் கீல்வாதநோய் (Arthritis) தாக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

 - பு.விவேக் ஆனந்த்