Published:Updated:

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

டி.பாரி, தோல் மருத்துவர் , படம்: தி.ஹரிஹரன்

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

டி.பாரி, தோல் மருத்துவர் , படம்: தி.ஹரிஹரன்

Published:Updated:
அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

 நகங்களில் உள்ள  சிஸ்டீன் என்கிற புரதமே, அதன் கடினத்தன்மைக்கு காரணம். கால்சியம், ஜிங்க், இரும்பு போன்ற தாதுஉப்புக்களும் நகத்தில் சிறிதளவு இருக்கின்றன.

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

 உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால், நகம் அதை வெளிக்காட்டிவிடும். எனவே, நகங்கள் பாதிக்கப்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

 நகம் மஞ்சள் நிறத்தில் சொரசொரவென இருந்தால்,       பூஞ்சைளால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். நகம் சிவப்பு வண்ணத்தில் இருந்து, செதில்கள் போல உதிர்ந்தால், சொரியாசிஸ் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!
அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

 விரல் நகங்களில் பாக்டீரியா தாக்கும்போது, நகச்சுத்தி ஏற்படுகிறது. விரலில் கடுமையான வலி இருக்கும். நகச்சுத்தி வந்தவுடன், அந்த விரலில் எலுமிச்சம் பழத்தை மாட்டிவிடுவது கூடாது. மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

 நகத்தை எப்போதும் ஈரமாக வைத்திருக்கக் கூடாது. பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்று ஏற்படாதவாறு நகங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

 நகங்களுக்கு 'நெயில்பாலிஷ்’ போடுவதற்கு முன்பு அசிட்டோன் எனும் கெமிக்கல் கொண்டு விரல் நுனியைக் கழுவுவார்கள். இதனால் நகக் கணுக்களில் அலர்ஜி ஏற்படும். நெயில் பாலிஷில் அக்ரிலேட் எனும் கெமிக்கல் இருப்பதால், நெயில் பாலிஷ் போட்ட கையோடு சாப்பிடுவது தவறு. குழந்தைகளுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்தவே கூடாது.

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

 சர்க்கரை நோயாளிகள் நகப் பராமரிப்பில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். கை நகங்களைப் போலவே கால் நகங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு, நகத்தின் இடுக்குகளில் புண்கள் வர வாய்ப்பு உள்ளது. கை நகங்களை ஒட்ட வெட்ட வேண்டும். இதனால், நகங்களில் கிருமிகள் தங்காது.

              மு.அழகர்பாரதி