ஸ்பெஷல்
Published:Updated:

இது டாக்டர் ஃபேமிலி

இது டாக்டர் ஃபேமிலி

அம்மா டாக்டர் ஜெயம் கண்ணன் (நெருங்கிய வட்டத்திலும் மருத்துவ உலகிலும் செல்லமாக ஜே.கே), மகளிர் மருத்துவத்தில் முன்னோடி. ஜெயம் கண்ணனின் மகள் பிரியா கண்ணன், மகளிர் இனப்பெருக்கம் மற்றும் கருவளர்ச்சித் துறையில் நிபுணர். பிரியாவின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில், அறுவைசிகிச்சை நிபுணர். மகன் டாக்டர் அருண் கண்ணன், எலும்பு மற்றும் மூட்டு மாற்று மருத்துவ நிபுணர். மருமகள் டாக்டர் பிரஷிதா அருண், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்.

இது டாக்டர் ஃபேமிலி

ஒரே வீட்டில் ஐந்து மருத்துவர்கள் இருந்தால், தங்களுக்குள் என்ன பேசிக் கொள்வார்கள்? அவர்களது டைனிங் ஹாலில் அறுவைசிகிச்சையும், நோய்களும் விவாதிக்கப்படுமா?

ஜெயம் கண்ணன் முகத்தில் அத்தனை உற்சாகம். ''தஞ்சாவூர்ல சாதாரணக் குடும்பம் என்னோடது. ஸ்கூலில் ஃபர்ஸ்ட், அதனால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைச்சது. என் கணவர் கண்ணன், சித்தா டாக்டர். எங்க பிள்ளைங்க, பிரியா, அருண் ரெண்டு பேருமே நல்லாப் படிச்சாங்க. பிரியா ப்ளஸ் டூ முடிச்சதும், அவ விரும்பினபடி மெடிக்கல் படிக்கவிட்டோம். அவ   எம்.பி.பி.எஸ் முடிச்சதும்,

இது டாக்டர் ஃபேமிலி

ரீப்ரொடக்்‌ஷன் அண்டு எம்பிரியாலஜி’ துறையில் மேல்படிப்புப் படிக்க, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினேன். நம்ம நாட்டில், அவள்தான் முதல் எம்பிரியாலஜிஸ்ட். 'டாக்டர் ஜே.கேயின் பொண்ணு பிரியா’னு சொன்ன காலம் போய், இப்போ 'டாக்டர் பிரியா கண்ணனின் அம்மா’னு என்னைச் சொல்றாங்கன்னா பார்த்துக்குங்க''  ஜேகேயின் முகத்தில் பெருமிதம் மின்னுகிறது.

அருணுக்கும் சின்ன வயசிலிருந்தே டாக்டருக்குப் படிக்கணும்னுதான் ஆசை. எம்.பி.பி.எஸ் முடிச்ச பிறகு, டில்லி எய்ம்ஸ்ல ஆறு வருஷம், ஆஸ்திரேலியாவில் மூணு வருஷம்னு மேல் படிப்பு... இப்போ அருண், இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சையில் சிறந்த நிபுணர்.  என் மாப்பிள்ளை அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, நோபல் பரிசு வாங்கின அறிஞர்கள் சர். சி.வி. ராமன், சந்திரசேகரன் குடும்பத்திலிருந்து வந்தவர். என் மகனும் மருமகள் பிரஷிதாவும் ஒண்ணா மெடிக்கல் காலேஜ்ல படிச்சாங்க. ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சாங்க. கல்யாணம் பண்ணி வெச்சாச்சு. மருமகளோட அம்மா, திருவண்ணாமலையில் ஃபேமஸ் டாக்டர். சம்பந்தி குடும்பமும் டாக்டர் குடும்பம்தான். எனக்கு மூணு பேரக் குழந்தைங்க.''  சந்தோஷம் மலரச் சொல்கிறார் ஜெயம்.  

இது டாக்டர் ஃபேமிலி

உங்க வீட்டு சமையல்முறை எப்படி? பேஷன்ட்ஸுக்கு அட்வைஸ் பண்றதை நீங்க முதலில் பாஃலோ பண்றீங்களா? என பிரியா கண்ணனிடம் கேட்டோம்.

வாரத்தில் நாலு நாள் சிறுதானியங்கள்தான். கேப்பை (ராகி), வரகு, தினை, சோளம்னு ஏதாவது ஒரு தானியத்தை அரைச்சு, வெரைட்டியா தோசை சுட்டுடுவாங்க அம்மா. அம்மா ஊர்ல இல்லைன்னா, எங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட், கார்ன்ஃப்ளேக்ஸ்தான். குழந்தைகளுக்கு இன்ட்ரெஸ்ட்டிங்கா,  காய்கறி மசிச்சு ஸ்டஃப் பண்ணின சப்பாத்தி, பருப்பு உசிலி, மில்க்‌ஷேக்் இதெல்லாம் கொடுப்போம். குழந்தைகளுக்கு நிச்சயம் புரோட்டீன் தேவை. அதனால தினமும் பருப்பு இருக்கும். அவகேடோ மில்க்‌ஷேக்் குழந்தைகளுக்குப் பிடிச்ச அயிட்டம். எப்பவாச்சும் வெளியே போகும்போது மட்டும் ஆசைக்கு ஜங்க் ஃபுட் சாப்பிட்டா, நாங்க நோ சொல்றது இல்லை.''

உங்க வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லைன்னா... இதனாலதான்’னு காரணம் தெரியும்கிறதால ரொம்ப சாதாரணமா எடுத்துக்குவீங்களா? கைவைத்தியம் எல்லாம் ட்ரை பண்ணுவீங்களா?''

என்னதான் டாக்டர் என்றாலும் எங்களுக்கும் படபடப்பு இருக்கும். ஆனாலும், நாங்க உடலைப் பத்தியும் அதன் செயல்பாடுகளைப் பத்தியும் படிச்சது மனசுல பதிஞ்சு போயிருக்கும்கிறதால, இது இதனாலதான்’னு அறிவுபூர்வமாவும் எண்ணங்கள் ஓடும். குழந்தைகளுக்கு சளின்னா, முதல்ல சுக்கு, திப்பிலி கஷாயம், துளசிச் சாறுன்னு கைவைத்தியம் செய்றது உண்டு. ஆனா, மத்தவங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்னா, கைவைத்தியத்தை நிறுத்திட்டு எப்போ டாக்டர்கிட்ட போகணும்கிற லிமிட் எங்களுக்குத் தெரியும்... அவ்வளவுதான்''  என சிரிக்கிறார்.  

இது டாக்டர் ஃபேமிலி

ஃபேமிலி டாக்டர் கான்செப்ட்டே இப்போ போயிடுச்சே,  உங்க ஃபேமிலிக்குன்னு டாக்டர் இருக்காங்களா?'' என்கிற கேள்விக்கு பதில் சொன்னார் ஜெயம் கண்ணன்.

என் கூடப் படிச்ச சுவாமிநாதன், ஜெனரல் பிசிஷியன். எங்க வீட்டில் யாருக்கு என்ன உடம்புக்கு வந்தாலும் இப்போ வரை அவர்கிட்டதான் போவோம். நண்பர்கள் எல்லாமே, கூடப் படிச்ச டாக்டர்கள் தான். அது மாதிரி பிரியாவுக்கு டெலிவரி பார்த்தது என் தோழி டாக்டர் சாந்தா. எங்க ஆஸ்பத்திரிக்கு வர்ற பீடியாட்ரிஷன் இந்திரா தான், எங்க குழந்தைகளுக்கும் டாக்டர்''

பத்திகைகள்ல வர்ற டாக்டர்ஸ் ஜோக்ஸ் பார்த்தா என்ன தோணும்? என்ஜாய் பண்ணுவீங்களா? எரிச்சலாவீங்களா?''

அது ஜோக்ஸ்தானே. அதனால, பல சமயங்கள்ல ஜாலியா எடுத்துக்கிட்டு, சிரிச்சிட்டுப் போயிடுவோம். ஆனா, எங்க தொழில், மத்த தொழில் மாதிரி இல்ல. உயிரோடு சம்பந்தப்பட்டது. அதனால, அதைக் கிண்டல் செய்றப்போ சில சமயம் சகஜமா எடுத்துக்க முடியாமல், வருத்தமா இருக்கும்''.

மத்தவங்களுக்கு சொல்ற டயட், எக்ஸர்சைஸ் அட்வைஸை உங்க வீட்டில் எல்லோரும் ஃபாலோ பண்றீங்களா?''

கண்டிப்பா... ஃபாலோ பண்ணியே ஆகணும். காலையில் நேரம் கிடைச்சா, பக்கத்தில் பார்க் எங்காவது வாக்கிங் போயிடுவேன். முடியலேன்னா, வீட்டுக்குள்ளேயே 300 , 400 ஸ்கிப்பிங் பண்ணிடுவேன். எந்தக் கோயில் போனாலும் பிள்ளையாருக்கு 25 தோப்புக்கரணம் போடுறது, சுவாமி முன்னால 10 முறை நமஸ்காரம் பண்றது... இதெல்லாமே உடற்பயிற்சிதான். தூக்கம் நாலைந்து மணி நேரம்தான். வயசாக ஆக தூக்கம் குறையும். அதை அக்செப்ட் பண்ணிக்கணும். தூக்கம் வரலேன்னா, எழுந்துடணும். வேற ஏதாவது ஆக்ட்டிவிட்டீஸ்ல மனசைத் திருப்பி, நேரத்தைச் செலவிடணும். அப்போதான், யாரும் என்னைக் கவனிக்கலைனு சுயபச்சாதாபம் வர்றது குறையும்' என்கிறார் ஜே.கே.

''அரை மணி நேரம் ட்ரெட்மில்ல வாக்கிங் போயிடுவேன், முடியலைன்னா நேரம் கிடைக்கிறப்ப நடந்துடுவேன்'' என்கிறார் பிரியா. பிரசவத்துக்கு பிறகு 10 கிலோ எடையை உடற்பயிற்சி மூலம் சமீபத்தில் குறைத்திருக்கிறார் மருமகள் பிரஷிதா.

24 மணிநேரமும் நோய், மருத்துவமனைனு இருக்கிறது போரடிக்காதா?

நிச்சயமா இல்லை. ஒரு டாக்டர் தன் பிராக்டீஸை நிறுத்திட்டா, பிரிஸ்கிரிப்ஷன் எழுதுறதை நிறுத்திட்டா, அவ்வளவுதான்... உயிரே போன மாதிரி இருக்கும். நாம எப்பவோ வைத்தியம் பார்த்திருப்போம். பல வருஷங்களுக்கு அப்புறம்,

இது டாக்டர் ஃபேமிலி

இவங்கதான் அன்னிக்கு என் உயிரைக் காப்பாத்தினாங்க’னு யாரோ ஒருத்தர் கையெடுத்துக் கும்பிடறப்ப ஒரு நிறைவு கிடைக்கும்.'' உணர்ச்சிவசப்படுகிறார் ஜே.கே.

நாங்க எல்லோருமே டாக்டர்கள் ஆனது, பெற்றோர் விருப்பம், எங்க விருப்பம்னு பல காரணம். இனிமேல் எங்க பேரப்பிள்ளைகள், அவங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் படிச்சு வரட்டும். பிரியாவுக்கு பார்த்திவை டாக்டராக்கணும்னு ஆசை. பார்க்கலாம், அவர் விருப்பம் என்னன்னு''  என பேரனை அள்ளிக் கொஞ்சுகிறார் டாக்டர் பாட்டி!

இது டாக்டர் ஃபேமிலி

டாகடர் விகடன் வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மருத்துவத்துக்கு அதிகமா செலவாகிறது.  ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவ காப்பீடு கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவேண்டும்.  வாழ்நாளில் எண்ணிக்காவது அது நமக்கு ஆபத்பாந்தவனா கைக் கொடுக்கும். 30  வயது தொடங்கினாலே, பெண்கள் கண்டிப்பாக வருடம் ஒரு முறை மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவேண்டும்.  நோய்கள் வருமுன் காக்க இது வழிவகுக்கும்.

உடற்பயிற்சி, டயட் என தனியாக நேரம் ஒதுக்குவதோ, ஒரு மாதம் டயட் கடைப்பிடிக்கிறேன் என்று தனியாக நேரம்ஒதுக்குவதோ கூடாது.  உடற்பயிற்சி, உணவு இரண்டு விஷயங்களையும் அன்றாட செயல்களாகவே பின்பற்றிவிடவேண்டும்.  ஆரோக்கியத்துக்கான வழி இது!

பிரேமா நாராயணன்

படங்கள்: எம். உசேன்