ஸ்பெஷல்
Published:Updated:

நலம் வாழ 4 வழிகள்

தொகுப்பு: அஸ்வின் குரு

1. ஸ்கின் பளபளப்புக்கு தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர்.  வீட்டுக்கு வந்ததும், மேக்கப்பைக் கலைக்கிறதுதான் முதல் வேலை. சினிமா மேக்கப் இல்லாம, முகத்தில் எண்ணெய் வழியற த்ரிஷாவைத்தான் எனக்குப் பிடிக்கும். தலைமுடிக்கு மைல்டு ஷாம்பு. அப்பப்ப, ‘ஸ்பா’ போய் ஆயில் மசாஜ் பண்ணிப்பேன். எப்பவும் ஃப்ரெஷ்ஷா இருக்க இதுவும் ஒரு காரணம்.

2. ப்ளு கிராஸ் மெம்பர் நான்.    என் வீட்டுப் பக்கத்துல இருக்கிற தெரு  நாய்களுக்குச்  சாப்பாடு கொடுத்து, விளையாடுவேன்.   அதுங்களுக்கு ஏதாவது பிரச்னை  வந்தா, உடனடியா டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் குணமானாத்தான் எனக்கு தூக்கமே வரும்.

அமெரிக்கன் சீரியலை ஒண்ணுவிடாம பார்ப்பேன். நெட்ல ஃபேஷன் அப்டேட்ஸ் பார்ப்பேன். ஃப்ரெண்ட்ஸ்தான் என்னோட பூஸ்ட். நேரம் கிடைக்கிறப்பல்லாம் அவங்ககூட அரட்டை. அப்புறம் ஃபேஸ்புக், ட்விட்டர்னு சோசியல் வெப்சைட்ஸ்... இப்படி ஜாலியாப் பொழுதுபோகுது.

3. நான் ஃபுட் லவ்வர். எந்த நாட்டுக்குப் போனாலும், அங்க என்ன ஸ்பெஷல்னு கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன். ‘த்ரிஷா இது போதும். இதுக்கு மேல சாப்பிடாத’்னு மைண்ட்வாய்ஸ் வரும்போதே, சாப்பிடறதை நிறுத்திடுவேன்.

நலம் வாழ 4 வழிகள்

தினசரி டயட்

காலை எழுந்ததும், எலுமிச்சை, தேன் கலந்த பெரிய டம்ளர் வெந்நீர்.

பிரேக்ஃபாஸ்ட் : நிறைய பழங்கள்.

லஞ்ச் : எண்ணெய் இல்லாத எல்லா சாப்பாடும். கூடவே நிறைய வெஜிடபிள்ஸ். அம்மா பண்ற சிக்கன் ஆல்டைம் ஃபேவரிட்.

டிரிங்க் : டெய்லி அஞ்சு கப் கிரீன் டீ, சாத்துக்குடி, தர்பூசணி, அன்னாச்சிப்பழ ஜூஸ், இளநீர் மாறி மாறி எடுத்துப்பேன்.

டயட் : என் உயரத்துக்கு ஏற்ற 60 கிலோ எடையை மெயின்டெய்ன் பண்றேன். கொஞ்சம் வெயிட் போட்டாலும், அரிசி கோதுமை எல்லாம் ஸ்டாப் பண்ணி, சாண்ட்விச், மல்ட்டிகிரெய்ன் ப்ரெட்னு மாறி மறுபடியும் ஃபிட்.

4. வொர்க்அவுட்ஸ் ரெகுலரா பண்றேன். ஜிம் இல்லாத நாள் இருக்காது. ‘டேக் இட் ஈஸி’ டைப், பிரச்னையை மைண்ட்ல ஏத்திக்காம ஜஸ்ட் லைக் தட் எடுத்துப்பேன். பாசிட்டிவ் அப்ரோச் , எப்பவும் சிரிப்பு இதெல்லாம் தான் என் ஹெல்த்தி சீக்ரெட்ஸ்.