ஸ்பெஷல்
Published:Updated:

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

வண்ணங்களுடன் வாழும் அபர்ணா

விஸ்காம் படிப்பில் டிகிரி. விளம்பரத் துறையில் டிப்ளோமா. ஓவியம் வரைவதில் அபாரத் திறமை. வாழ்க்கை  உற்சாகமாக இருந்தது அபர்ணாவுக்கு.எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது, 23வது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக்  கொண்டாடி முடித்திருந்த சில நாட்களில், 'மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ்’ (Multiple sclerosis) என்ற அரிதான நோய் தாக்கியது. ஆறு வருடங்கள் நோயோடு நடத்திய யுத்தத்தில் இப்போது அபர்ணா  வென்றிருக்கிறார்.

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

அபர்ணாவின் வாழ்க்கை, தடம் மாறிய கதையைப் பகிர்ந்துகொண்டார், அம்மா உஷா வாசுதேவன். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ, ஜ்யோத்ஸ்னா. சின்னவ, அபர்ணா. 2008 செப்டம்பர்  மாசம், வீட்டுக்கு வந்ததும், ரொம்ப சோர்வா இருந்தா.  

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

ரொம்பத் தலைவலி. கால் மரத்துப்போன மாதிரி இருக்கு’ன்னு படுத்துக்கிட்டா. சாதாரணத் தலைவலியா இருக்கும்னு பெரிசா எடுத்துக்கலை. அடுத்த நாள் காலையில, அவளால் வழக்கம் போல எழுந்து உக்கார முடியலை. ரொம்பக் கஷ்டப்பட்டு எழுந்தா. நடை நார்மலா இல்லை. டீ கப்பைக்கூட பிடிக்க முடியலை. எனக்குள்

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

ஏதோ பிரச்னை’ன்னு அலாரம் அடிச்சது. என் கணவரைக் கூப்பிட்டு சொன்னேன். உடனடியா, போர்ட் ட்ரஸ்ட் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போனோம். அடிப்படையான சில பரிசோதனைகள் செஞ்ச டாக்டர், கொஞ்சம் சீரியஸான பிரச்னை’னு, அப்போலோவுக்கு அனுப்பிட்டார். அங்கே அபர்ணாவுக்கு, நரம்பு தொடர்பான எம்.ஆர்.ஐ ஸ்கேன் எல்லாம் எடுத்தாங்க. கடைசியா

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

இது, மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ் ஆக இருக்கலாம்’னு சொல்லி, ஒரு மாசம் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ணாங்க.  அப்பவும் அவளால நடக்கவோ, சாதாரணமா இருக்கவோ முடியலை.

வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே அடுத்த அட்டாக். மீண்டும் எம்.ஆர்.ஐ எடுத்ததில, மல்டிபிள் ஸ்கெலரோசிஸ் இருப்பது உறுதியாச்சு. அடுத்து ஒரு வருஷத்துக்கு ஸ்டீராய்டு ஊசி மருந்தைக் கொடுத்தாங்க. அபர்ணாவுக்கு உடல் எல்லாம் சிவந்து, புண்ணாகி அலர்ஜியானதால், மருந்தை நிறுத்திட்டோம். அதுக்குப் பதிலா, வேற ஊசியைத் தினமும் போடச் சொன்னாங்க. ஒரு மாசத்திலேயே திரும்பவும் அலர்ஜி.  

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

2011ல, அவளோட நினைவுகள் மொத்தமாப் போயிடுச்சு. தனக்கு என்ன நடந்ததுங்கிறது எதுவுமே அவளுக்குத் தெரியலை. மூணு வயசுக் குழந்தை மாதிரி பேச ஆரம்பிச்சிட்டா. பழைய நினைவுகளைத் திரும்பக்கொண்டுவர, படிச்ச ஸ்கூலுக்கு, காலேஜுக்கு எல்லாம் அழைச்சிட்டுப் போனோம். இப்பக்கூட அவளுக்கு காலிங் பெல் சத்தம், ஃபோன் சத்தம், நாம பேசும் சத்தம்னு எந்தச் சின்ன சத்தத்தையும் தாங்கமுடியலை. மருந்துகளால் அலர்ஜி வந்ததால்,  அபர்ணாவுக்கு அலோபதி சிகிச்சையை நிறுத்திட்டு, ஹோமியோபதி சிகிச்சை கொடுக்க ஆரம்பிச்சோம்.

இப்ப கொஞ்சம் முன்னேற்றம் இருக்கு. நல்லா சாப்பிடுறா, தூங்குறா. முன்னவிட இப்ப நல்லாவே நடக்கிறா. வெளியில் போறப்போ மட்டும் யாராவதுகூட வேணும். பெயின்டிங் பண்ணி, ஆன்லைன் சேல் பண்றா. ரெண்டு வருஷமா வீட்டையே ஆர்ட் கேலரியா மாத்திட்டா. முதுகுத்தண்டுக்கான பெல்ட் போட்டிருக்கிறதால, தொடர்ந்து, இரண்டு மணி நேரம்தான் உட்கார முடியும். அதுக்கப்புறம் நாலு மணி நேரமாவது

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

ஃப்ளாட்’டா படுத்தாத்தான், திரும்பவும் கொஞ்சம் எழுந்து நிக்கவோ நடக்கவோ முடியும். இந்த நோய் வந்தா படுத்த படுக்கையாயிடுவாங்களாம். அபர்ணா அவளோட நம்பிக்கையாலதான் இதெல்லாம் பண்றான்னு தோணுது'' என்று சொல்ல, தன் பாதிப்புகளை மறைத்தபடி, கணீர் குரலில் பேசத்தொடங்கினார் அபர்ணா.

டூவீலர்ல வெளியபோய்ட்டு வந்து, தலைவலின்னு படுத்ததுதான் ஞாபகம். அதுக்கப்புறம் நடந்தது அம்மா, அப்பா சொல்லித்தான் தெரியும்.  அவங்களுக்கு அடுத்ததா, என் புரொஃபசருக்குதான் நான் ரொம்ப நன்றி சொல்லணும். அவரோட உதவியாலதான் 15 பேப்பர்ஸ் வீட்டிலேயே தீசிஸ் முடிச்சேன். டெலிபோன்லயே வைவாவை முடிச்சு, எம்.பி.ஏ. பட்டம் வாங்கிட்டேன்.

எனக்கு இப்படித்தான் இருக்கும், இதுக்கான வலியை நான் அனுபவிச்சுத்தான் ஆகணும்கிற

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

அக்செப்டன்ஸ்’ வந்துருச்சு. என் வயசுல எல்லாரும் வெளிய போறாங்க, ஷாப்பிங் பண்றாங்க, லைஃபை என்ஜாய் பண்றாங்க. என்னால முடியலயேனு கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஆனா, என் ஓவியங்களோடும் வண்ணங்களோடும் அனுபவிக்கிற வாய்ப்பையாவது கடவுள் தந்திருக்காரேன்னு நினைச்சா ஆறுதலா இருக்கும். எம்.எஸ் இருக்கிறவங்களுக்கு ஃபேமிலி சப்போர்ட் ரொம்ப முக்கியம். எனக்கு அது நிறையவே கிடைச்சிருக்கே!'' என்று மணி மணியாகப் பேசுகிறார் அபர்ணா.

நோயுடன் போராடியபடியே, ஓவியம், படிப்பு என சாதித்திருக்கும் அபர்ணா, அனைவருக்குமான ஒரு ரோல்மாடல்!

20  40 வயதுள்ளவர்களைத் தாக்கும்!

'மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு நோய், மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ். இது ஒரு 'ஆட்டோ இம்யூன்’ நோய். (நோய் எதிர்ப்பு செல் நம் உடலையே எதிரியாக நினைத்துத் தாக்குவது) நரம்புகளைச் சுற்றி 'மயலின்’ என்ற தோல் மூடியிருக்கும். இந்த மேல் தோல் பாதிக்கப்பட்டு உரியும்போது, நரம்பு கடினமாகி, இறுகிப்போகலாம். இதனால், மூளையில் இருந்து வரும் தகவல்கள் நரம்புகள் வழியாகச் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு, உடல் செயல்பட முடியாமல் போகிறது. கண் நரம்புகள், மூளைத் தண்டு நரம்புகள், சிறுமூளைக்குப் போகும் நரம்புகள், முதுகுத்தண்டில் இருக்கும் நரம்புகள் போன்றவற்றில் அதிகமாகப் பாதிப்பு ஏற்படும்.

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

இதன் விளைவாக, கை, கால் இயக்கங்கள் சரியாக இருக்காது, நடையில் தடுமாற்றம், திடீர் திடீரென கீழே விழுதல், பேச்சுக் குழறுதல், உடலின் ஒரு பக்கம் மட்டும் செயல்திறன் இழத்தல், உணர்ச்சி குறைந்துவிடுதல், குறிப்பாக, கண் நரம்புகளைப் பாதிப்பதால் பார்வைக் குறைபாடு போன்றவை அதிகம் ஏற்படும்.  நரம்புத் தோல் உரிவதால், வீக்கமும் ஏற்படலாம். திரும்பத் திரும்ப பாதிப்பு வரும்போது, நரம்புகளே வீணாகி மூளையின் செல்கள் பாதிக்கப்பட்டு, உதிர ஆரம்பிக்கின்றன. இதனால் நரம்புகளின் செயல்திறன் மட்டுமல்லாமல், மூளையின் செயல்திறனும் குறைவதால் 'டிமென்ஷியா’ (Dementia) போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

திடீரென ஏற்படும் பாதிப்புக்கு சிகிச்சை, ஸ்டீராய்ட் மருந்துகள் மட்டுமே. விலை அதிகமான மருந்துகள் என்பதால், ஒரு மாதத்துக்கு 20 ஆயிரம் வரை செலவாகலாம். குறைந்தது 20 ஆண்டுகள் வரை சிகிச்சை அளிக்கவேண்டும். சிலருக்கு, ஆயுள் முழுவதும் தரவேண்டியிருக்கும். பெரும்பாலும் இந்த நோய், 20 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்களைத்தான் தாக்குகிறது. மரபுரீதியாகவும் இந்த நோய் வரலாம். எனவே, ஒரே ஒருமுறை நரம்பு பாதிப்பு வந்தாலே, உடனடியாகக் கவனித்து, சிகிச்சை எடுப்பதன் மூலம், பெரிய பாதிப்புகளைக் தவிர்க்கலாம்''.

உடல் பாதித்தது... மனம் சாதித்தது!

    பிரேமா நாராயணன்

படங்கள்: ஆ.முத்துக்குமார்