Published:Updated:

இது டாக்டர் ஃபேமிலி

இது டாக்டர் ஃபேமிலி

'சோதனைக் குழாய் குழந்தை’ என்றதும்  நினைவுக்கு வரும் பெயர் டாக்டர் கமலா செல்வராஜ். நடிகர் ஜெமினி கணேசனின் மகள். இவரது கணவர் டாக்டர் செல்வராஜ், இதய நோய் சிகிச்சை நிபுணர். மகள் டாக்டர் பிரியா செல்வராஜ், அம்மாவைப் போலவே செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவத்தில் நிபுணர். மகன் டாக்டர் தீபு செல்வராஜ், குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர்.

இது டாக்டர் ஃபேமிலி

எங்க வீட்டு டாக்டர்ஸோட ஹெல்த் பத்தி பேசலாமே...''  ஆர்வமாகப் பேசத் தொடங்கினார் டாக்டர் கமலா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் அப்பாவுக்கு ஹெல்த் அண்ட் ஃபிட்னெஸில் ரொம்ப அக்கறை. ஷூட்டிங் இல்லாதப்போ, கையில் ராக்கெட்டோடு டென்னிஸ் விளையாடக் கிளம்பிடுவார். அம்மா பாப்ஜிக்கு, வீட்டு வேலைதான் எக்ஸர்சைஸ். எப்போதும் ஒரே மாதிரியான உடல்வாகு. எந்த பியூட்டி பார்லரும் போனது இல்லை. ஆனா, வழுவழுன்னு தோல்... பளபளன்னு முகம். எப்போதும் ரெண்டு கன்னமும் குழிவிழும் சிரிப்பு. நீளமான முடி. என் மகள் பிரியாவுக்கும் எங்க அம்மா மாதிரியே நீள முடி. அப்பா அம்மாவை அப்படியே பார்த்து வளர்ந்ததால், எங்க எல்லோருக்குமே சின்ன வயசிலருந்தே ஆரோக்கியம் ப்ளஸ் அழகில் ரொம்ப அக்கறை!''

எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியா இருக்கீங்க. உங்க ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?''

கொஞ்சம் வருஷம் முன்னாடி வரை நானும் ஜிம்முக்கு போய் வொர்க்அவுட்ஸ் பண்ணிட்டிருந்தேன். இப்போ, அதுக்கு நேரம் கிடைக்கறது இல்லை. பாடி மசாஜ், நீச்சல் இது ரெண்டுமே என்னை ரொம்ப ரிலாக்ஸா வைச்சிருக்கு. வாரத்துல ஒருநாள், வீட்டிலேயே க்ரீம் மசாஜ் பண்ணிக்கிறேன். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை, கேரள ஆயுர்வேத மசாஜ் போறேன். வலியெல்லாம் போய், உடம்பு லேசான மாதிரி இருக்கும். வீட்டுல காய்கறி நறுக்கும் வேலைதான் என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டர். எதாவது டென்ஷன் வந்தா, பீன்ஸ், கொத்தவரங்காயை வேகமாக நறுக்க ஆரம்பிச்சிடுவேன். டென்ஷன் போயே போயிடும்!'

சாப்பாட்டு விஷயத்தில் உங்க குடும்பம் ரொம்ப ஸ்ட்ரிக்டா?''

ஒருமுறை சாப்பிட்ட சாப்பாடு, நல்லா ஜீரணமான பிறகு அடுத்த சாப்பாட்டை சாப்பிட்டால்,  மருத்துவரே அவசியம் இல்லைனு திருவள்ளுவர் சொல்லியிருக்கார். நல்லா பசிச்ச பின்தான் சாப்பிடுவேன். குழந்தைங்க சாப்பிடடுற மாதிரி, கொஞ்சம் கொஞ்சமா அதிக வேளை பிரிச்சு சாப்பிடுவேன்.

இட்லி, தோசை, சப்பாத்தினு டிஃபன் எதுவா இருந்தாலும் ரெண்டுக்கு மேல தொட மாட்டேன். மதியத்துக்கு கலர் குடமிளகாய், மாதுளை, பனீர் கலந்து உப்பு, மிளகு சேர்த்த சாலட்... அதோடு ஒரு ஜூஸ் மட்டும்தான். வாரத்துல ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் சாதம். ஃபங்‌ஷனுக்குப் போனா மட்டும், சாதம், சாம்பார், ரசம், மோர்க்குழம்பு பாயாசம்னு ஃபுல் கட்டு கட்டிடுவேன்!''

'ஒரு டாக்டரா, உணவு விஷயத்தில் உங்க அட்வைஸ் என்ன?''

'சாப்பிட உட்கார்ந்ததும், சாப்பிட்ட உடனேயும் தண்ணி குடிக்கக் கூடாது. ஏன்னா, காலியாக இருக்கிற வயித்துல செரிமானத்துக்கான

இது டாக்டர் ஃபேமிலி

டைஜஸ்டிவ் ஜூஸ்’ சுரந்திருக்கும். அந்த சமயத்தில்  சாப்பிடும் உணவு நல்லா செரிச்சுடும். தண்ணி குடிச்சா, அந்த அமிலங்கள் தண்ணியில் கரைஞ்சு நீர்த்துப்போய், செரிமானம் தாமதம் ஆகும். சாப்பிடுறதுக்கு ஒரு மணி நேரம் முன்போ அல்லது பின்போ தண்ணி குடிக்கலாம். அதேபோல, பழங்களையும் சாப்பிடுறதுக்கு முன்பு அல்லது வெறும் வயிற்றில் சாப்பிட்டா, சீக்கிரம் ஜீரணம் ஆகி, சத்துக்கள் உடனே ரத்தத்தில் கலந்துடும். சாப்பாட்டுக்குப் பின் பழங்கள் சாப்பிட்டா, வயிறு உப்புசமாக இருக்கிற மாதிரி ஆயிடும். ஜீரணம் தாமதமாகும்.

வயிற்றை க்ளீன் பண்றதும் ஆரோக்கியத்துக்கு ரொம்ப அவசியம். கேரளாவில் நானும் என் அக்காவும் ரெண்டு வாரம் ஆயுர்வேத இயற்கை மருத்துவ நிலையத்தில் தங்கினோம். வயித்தை சுத்தம் செய்ய, பேதிக்கு மருந்து கொடுத்துடுவாங்க... ரெண்டு வாரத்துக்கு, காலை உணவே கிடையாது. எண்ணெய், காரம் இல்லாம வெறும் பச்சைக் காய்கறிகள் மட்டும்தான். நான் ஏழெட்டு கிலோ எடை குறைஞ்சேன். மலச்சிக்கல் பிரச்னைக்கு அங்கே தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் கொடுக்கிறாங்க. கழிவுகளை வெளியேத்த அருமையான மருந்து. இப்போ, நானும் அதை ஃபாலோ பண்றேன். ஒரு நெல்லிக்காய், ஐந்து ஆரஞ்சுகளுக்கு சமம்.'

இது டாக்டர் ஃபேமிலி

'உங்க கணவர் எப்படி?'

'வாழ்க்கையை நல்லா அனுபவிச்சு என்ஜாய் பண்ணனும்னு நினைக்கிறவர். காலையில் பத்தரை மணிக்கு நல்லா நெய் விட்டு ஃபுல் மீல்ஸ் சாப்பிடுவார். என்ன பிடிக்குதோ, அதை எப்போ வேணாலும் சாப்பிடுவார். உடற்பயிற்சியும் ரொம்பச் செய்றது இல்லை. ஹாஸ்பிடலுக்குள் வாக்கிங் போவார். எனக்கும் அவருக்கும் இந்த ஹெல்த், டயட் விஷயத்தில் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் அவர் சந்தோஷமா, ஆரோக்கியமா இருக்கார்.'

'உங்களுக்கு ஹெல்த் சரி இல்லாதபோது, உங்க டாக்டர் யார்?

'முதல்ல எனக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தது. டாக்டர் லக்ஷ்மிகிட்டே காண்பிச்சு, முறையா சிகிச்சை எடுத்துக்கிட்டதால், அமர்நாத், மானசரோவர், பெரு மாதிரியான உயரமான மலைப்பகுதிகளுக்குக்கூட போக முடிஞ்சது. இன்னும் நிறைய யாத்திரைகள் பாக்கி இருக்கு' என்று சிரிக்கிறார் கமலா செல்வராஜ்.

அந்த நேரத்தில், உள்ளே நுழைந்த டாக்டர் பிரியா செல்வராஜை, அடுத்து ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைவதற்குள் பிடித்தோம். இவரது கணவர் சஞ்சய் வாசுதேவன், மலேசியாவில் கார் தயாரிப்பு நிறுவன அதிகாரி. குழந்தைகள் நேஹாரிகா, லக் ஷன், சமிக் ஷா.

'பெண்களின் பெரிய பொறுப்பே, குழந்தை வளர்ப்புதான்... உங்க அனுபவம் என்ன பிரியா?'

கணவர் மூணு மாசத்துக்கு ஒரு முறைதான் வருவார். ஸோ, குழந்தைங்களை வளர்க்கிற பொறுப்பு எனக்குத்தான். பசங்களைக் காலையில் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, ஹாஸ்பிட்டல் வருவேன். ஸ்கூல் விட்டதும் அவங்க அப்படியே என் மாமியார் வீட்டுக்குப் போயிடுவாங்க. நாங்க வெஜிடேரியன். பசங்க முட்டை மட்டும் சாப்பிடுவாங்க. குழந்தைங்க ஆசைப்பட்டா, ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பர்கர் என வீட்டிலேயே செய்து கொடுத்திடுவேன். ஃப்ரிட்ஜ்ல வெச்ச கூல்டிரிங்க்ஸ், பி்ரிசர்வேட்டிவ் ஃபுட்ஸ், ஜங்க் ஃபுட்ஸ், சாஃப்ட் டிரிங்க்ஸ் எதுவும் கிடையாது. காலையில் நாலரை மணிக்கே பால்,  எழுந்து பல் தேய்ச்சதும் ஆப்பிள், கேரட் ஜுஸ். அப்புறம் டிஃபன். லன்ச் எடுத்துட்டுப் போயிடுவாங்க. டிஃபனும் லன்ச்சும் நம்ம ஊர் ஸ்டைல். டின்னர் மட்டும், ரொட்டி, சப்பாத்தி, தால்னு நார்த் இண்டியன் ஸ்டைல். டி.வி, மொபைல், சினிமானு ரொம்பப் பார்க்கவிடுறது இல்லை.'

இது டாக்டர் ஃபேமிலி

'உங்களோட ஹெல்த்தியான விஷயங்கள் பற்றி...?

'

இது டாக்டர் ஃபேமிலி

நைட் படுத்தா தூக்கம் வரணும், வேளாவேளைக்கு பசிச்சு சாப்பிடணும் அதுதான் ஆரோக்கியம்’னு அம்மா சொல்வாங்க. வீட்டிலேயே ஜிம் இருக்கு. நான் தினமும் ஜிம் வொர்க்அவுட்ஸ் பண்ணுவேன். யோகாசனம் செய்வேன். இப்போ லேட்டஸ்டா மாரத்தான்ல கலந்துக்கிட்டு ஓடுறேன். வருங்காலம் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லாதான் இருக்கும். எல்லாத் துறையிலுமே அவ்வளவு போட்டிகள். அந்த அழுத்தத்திலிருந்து வெளியே வரணும்னா, உடம்புக்கும் மனசுக்கும் யோகா ஒண்ணுதான் சிறந்த வழி. நம்ம கல்ச்சர்லயே உடல்நலனுக்குத் தேவையான எல்லா நல்ல விஷயங்களும் இருக்கு. அடுத்த தலைமுறைக்கு அதைப் புரியவெச்சுட்டா போதும்!''  அழகாகப் புன்னகைக்கிறார் பிரியா செல்வராஜ்.

டாக்டர் திபு ராஜ்கமல் செல்வராஜ் குடல், இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் / லேப்ரோஸ்கோபிக் நிபுணர்

சுத்த சைவமாக இருக்கும் நான்,

இது டாக்டர் ஃபேமிலி

நீ என்ன சாப்பிடுறியோ, அதுதான் நீ’ என்கிற தத்துவத்தை உண்மையா நம்புகிறேன். நாங்க வீட்டில் சாப்பிடற காய்கறிகள், பழங்கள் எல்லாமே ஆர்கானிக் விவசாயத்தில் விளைஞ்சவை. அதேமாதிரி, ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்ஸை வீட்டில் சுத்தமாத் தவிர்த்திடுவோம்.

என் தாத்தா ஜெமினி கணேசன், சின்ன வயசிலேயே எனக்கு ஃபிட்னெஸின் முக்கியத்துவத்தைப் போதிச்சிருக்கார். எனக்கு டென்னிஸும் யோகாவும் கத்துக்கொடுத்தது அவர்தான். இன்னிக்கும் அஷ்டாங்க யோகாவை தினமும் செய்யறேன். அதோடு, தீவிரமான ஏரோபிக்ஸ் பயிற்சியும் செய்றேன்.

அறுவைசிகிச்சைத் துறையில் ஸ்பெஷலிஸ்ட்டா இருக்கிறதால, உடல், அதோட செயல்பாடுகள் பத்தின சின்னச் சின்ன விஷயங்களை நிறையத் தெரிஞ்சு வெச்சிருக்கேன். ஆனாலும், என் ஹெல்த் சம்பந்தப்பட்ட என்ன விஷயமா இருந்தாலும் உடனே என் சக மருத்துவர்கள்கிட்ட சரண்டர் ஆயிடுவேன்.''

பிரேமா நாராயணன்

டாக்டர் தீபு ராஜ்கமல் செல்வராஜ்