Published:Updated:

ஜனவரி 25 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

ஜனவரி 25 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

'தூர விரட்டப்பட வேண்டியது தொழுநோய் தானே தவிர... நோயாளிகள் அல்ல!' என்ற காரணத்தால்தான், 1954ல் இருந்து, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தொழுநோய் ஒழிப்பு விழிப்புஉணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தொழுநோயாளிகள் இல்லாத உலகம் என்ற கருத்தில், விழிப்புஉணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் வரையரையின்படி, 10 ஆயிரத்தில்் ஒருவருக்குப் பாதிப்பு இருப்பதுதான், ஒரு நாட்டில் தொழுநோய் குறைந்துவிட்டதற்கான குறைந்தபட்ச மதிப்பீடு. இதன்படி பார்த்தால் 2006ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு விகிதம் 10 ஆயிரம் பேரில் 0.84 சதவிகிதம்தான். இதனால் இந்தியாவில் தொழுநோய் ஒழிந்துவிட்டதாகக் கருதப்பட்டாலும், உலகளவில் உள்ள தொழுநோயாளிகளில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள்.  நோயைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததும், இங்குள்ள வறுமையும், சுகாதாரமற்ற மோசமான வாழ்க்கைமுறையும்தான் இந்த நிலைமைக்குக் காரணம்.

ஜனவரி 25 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொழுநோயாளிகள் இல்லாத உலகம் உருவாக்க...

நமைச்சல், தேமல் என தோலில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், கை, கால்கள் அடிக்கடி உணர்ச்சிகளற்று மரத்துப்போனாலும், உடனடியாக மருத்துவரை சந்தித்துப் பரிசோதனை செய்யவேண்டும்.

நோயின் தன்மைக்கேற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

காசநோயைப் போன்று இதுவும் இருமல், தும்மல் மூலமாகப் பரவக்கூடிய நோய் என்பதால், பிறருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க, இருமல் மற்றும் தும்மலின்போது, கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நோயாளிகளுக்கு உடலளவில் ஏற்படும் பாதிப்புகளைவிட, தனிமைப்படுத்தப்படுவதால் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். எனவே, அவர்களை வெறுத்து ஒதுக்காமல், மனிதத்தன்மையுடன் இருப்பது மிக முக்கியம்.

க.தனலட்சுமி