Published:Updated:

இன்று ஹிதேந்திரன் குடும்பம்!

இன்று ஹிதேந்திரன் குடும்பம்!

இன்று ஹிதேந்திரன் குடும்பம்!

இன்று ஹிதேந்திரன் குடும்பம்!

Published:Updated:
இன்று ஹிதேந்திரன் குடும்பம்!

ஹிதேந்திரன் - நம் எல்லோரின் இதயங்களையும் நெகிழவைக்கும் பெயர். 2008-ல் நடந்த ஒரு

இன்று ஹிதேந்திரன் குடும்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விபத்தில் ஹிதேந்திரனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. சீராட்டி, பாராட்டி வளர்த்த அன்பு மகனின் நிலையைக் கண்டு கதறித் துடித்த அவனது பெற்றோர், ஒரு கணமௌனத்தில்தான் அந்த முடிவை எடுத்தனர். அது முடிவு அல்ல... ஆரம்பம்! 

மரணத்தின் பிடியில் இருந்து மகனை மீட்க முடியாத நிலையில், மகனின் உடல் உறுப்புகளை ஆறு பேருக்கு தானமாகக் கொடுத்தார்கள். உறுப்பு தானத்தின் உன்னதத்தை அன்றைக்குத்தான் தமிழகம் அறிந்தது. மருத்துவ உலகில் மகத்தான விழிப்பு உணர்வுக்கு விதை போட்ட ஹிதேந்திரனின் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது?  

திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரில் இருக்கிறது ஹிதேந்திரனின் வீடு. ''நேத்திக்குத்தான் நடந்த மாதிரி இருக்கு. மூணு வருஷம் ஆயிடிச்சு. காலங்கள் காயத்தை ஆற்றும்னு சொல்வாங்க. வளர்த்து ஆளாக்கிய மகனை இழந்த புத்திர சோகம் இருக்கே... அது எப்படி மாறும்? அப்பப்ப, பழசை நினைச்சுப் பரிதவிக்குது.

என் மகனோட உடலை ஆறு பேருக்குத் தானமாகக் கொடுத்த நாளில் இருந்து போன் கால்ஸ் நிறைய வந்திட்டே இருந்தது. சேலத்துல ஒருத்தருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி, மூளைச் சாவு ஏற்பட்டதாவும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் கொடுக்க விரும்பறதாவும் சொன்னாங்க. உடனே வழி காட்டினேன். அந்த நபரோட கிட்னி முதல் தோல் வரைக்கும் அத்தனை உறுப்புகளையும் தானமா கொடுத்தாங்க. அதேபோல நிறைய சம்பவங்கள்.

நல்ல உள்ளம்கொண்ட சிலரிடம் இருந்து இரண்டே கால் லட்சம் பணம் வந்தது. உடனே, ஹெச்.பி. ஹிதேந்திரன் மெமோரியல் டிரஸ்ட் ஆரம்பிச்சு, விழிப்பு உணர்வு பிரசாரம் பண்ணிட்டுவர்றோம். 'தலைக் கவசம் தலைமுறையையே காத்திடும்’னு நோட்டீஸ் அடிச்சு, ஸ்கூல், காலேஜ்ல கொடுத்திட்டு இருக்கேன்!'' - மாலையிட்ட மகனின் புகைப்படத்தைப் பார்த்தபடியே சொல்கிறார் அசோகன்.

##~##

''இந்த நான்கு வருஷத்துல, தமிழகம் முழுக்க, 215 பேரோட உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டிருக்கு.  இதுல 35 இதயம், 399 கிட்னி, 190 கல்லீரல் ஆகியவையும் அடக்கம். ஒட்டுமொத்தமா சொல்லணும்னா 1230 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு!'' என அசோகன் சொல்ல, அவரது மனைவி புஷ்பாஞ்சலி தொடர்ந்தார்.

''இந்த உடலும், உயிரும் கடவுளால் கொடுக்கப்பட்டது. நாம போறப்ப என்னத்தைக் கொண்டுபோகப்போறோம்? நம்ம உடம்பு மண்ணோடு மண்ணா மக்கிப்போகாமல், பல உயிர்களைக் காப்பாத்தப் பயன்படணும். எங்க வாழ்க்கையில் கிடைச்ச அனுபவப் பாடம்தான் எங்களுக்குப் பக்குவத்தைக் கொடுத்தது.

வயசுப் பிள்ளைங்களைப் பார்க்கிறப்ப, ஹிதேந்திரன் ஞாபகம் வந்திட்டுப் போகும். அடுத்த நொடியே... டாக்டரா எங்களோட கடமை அழைக்கும். இப்போ பந்த பாசத்துக்கு அடிமை ஆகாமல் ஒரு துறவி போல வாழப் பழகிட்டோம். எல்லோருக்கும் இந்த எண்ணம் வந்தால், அர்ப்பணிப்பு உணர்வு உலகம் முழுக்கப் பெருகிடும்!'' - வலியை மறைத்துக்கொண்டு மகனின் புகைப்படத்தைப் பார்க்கிறார் அந்தத் தாய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism