
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவன் ஆனந்த், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாகப் பார்வையை இழந்துவிட்ட நிலையிலும் 10-ம் வகுப்பில் 440 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1080 மதிப்பெண்களும் வாங்கியவர். தற்போது எம்.காம். படித்துக்கொண்டு இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் வறுமை - நீரிழிவு நோய் என்ற இரண்டு கொடிய அரக்கன்களுடன் அவர் எப்படிப் போராடிக்கொண்டே படிப்பைத் தொடர்கிறார் என்பதுபற்றி கடந்த இதழில் விவரித்திருந்தோம்.
அதைப் படித்துவிட்டு, அவருக்கு கை கொடுக்க ஏராளமான வாசகர்கள் முன்வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மாணவர் ஆனந்த் சார்பாக உளமார்ந்த நன்றி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனந்தின் மருத்துவச் செலவுக்கு மாதம் 4,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படுவதால், வீட்டில் இருக்கும் சாமான்களை விற்கக்கூடிய நிலைக்கு அவரது குடும்பம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஆனந்தின் மாதாந்திர வைத்தியச் செலவுகளை எமது அறக்கட்டளை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது.