Published:Updated:

எல்லோரும் நலம் வாழ...

கோவை ஜி.ஹெச். ரவுண்ட்அப்

எல்லோரும் நலம் வாழ...

கோவை ஜி.ஹெச். ரவுண்ட்அப்

Published:Updated:
எல்லோரும் நலம் வாழ...

ரோக்கியத்தின் ஆலயம்... மருத்துவமனை. கோவை அரசு மருத்துவமனையின் உள்ளே நுழையும்போதே 'தலைக் கவசம் உயிர்க் கவசம்’ என்று அறிவுறுத்தும் வாசகம் கண்ணில் படுகிறது. ஆய்வு மையத்தின் முகப்பில், காசநோய்க்கான இலவச மாத்திரையை ஏந்தியபடி நடிகர் சூர்யாவின் போஸ்டர். 'காசநோயா... கவலை வேண்டாம்’ என்று சிக்ஸ் பேக் 'சிங்கம்’ சொல்ல... பக்கத்திலேயே டி.பி-யால் நெஞ்சுக் குழி வற்றிப்போன இளைஞர் ஒருவர் நிற்கிறார். இருபுறங்களிலும் சுவர்களில், 'கண்ணீர் அஞ்சலி’யில் ஆரம்பித்து 'வாழ்க நீ பல்லாண்டு’  வரை வாழ்வைப் பேசும் ரகம் ரகமான போஸ்டர்கள்!

'முழு உடல் பரிசோதனை - ரூ.250 மட்டுமே’ என்று அழைக்கிறது 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ மையம். கடந்து நடந்தால், 'விபத்து மற்றும் காய சிகிச்சைப் பிரிவு’. அதன் முன்னே குவிந்துகிடக்கிறார்கள் மக்கள். கண்ணீரும் கதறலுமாக ஒரு குடும்பம். இன்னொரு குடும்பம் நலம் விசாரிக்க வந்தவர்கள் தந்த ஆரஞ்சு சுளைகளுடன் மும்முரமாக இருக்கிறது. இரண்டு கால்களிலும் கட்டு போடப்பட்ட நிலையில், மனைவியின் தோளில் சாய்ந்து கிடக்கிறார் ஒருவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லோரும் நலம் வாழ...

காயம் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்கும் பகுதிக்குள் எட்டிப்பார்த்தால் வாழ்வின் நிதர்சனமற்ற தன்மை பொளேரென அறைகிறது. முகம் எல்லாம் காயம்பட்டுக் கிடக்கும் கணவனின் காதில் செல்போனை வைத்து, ''அழாத கண்ணு... அப்பா நல்லாத்தான் இருக்கேன்...'' என்று குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்ட வைக்கிறார்  ஒரு மனைவி. தனது டிஃபன் பாக்ஸில் இருந்து இரண்டு துண்டு இட்லிகளைப் பிட்டு எடுத்து, கைகளில் டிரெஸ்ஸிங் செய்யப்படும் சிறுமியின் வாயில் ஊட்டுகிறார் ஈரம் மிகுந்த மருத்துவர் ஒருவர்.

திருவிழாக் கூட்டத்தை நினைவூட்டுகிறது 'மகப்பேறுக்குப் பிந்தைய சிகிச்சைப் பகுதி’. பிரசவத்துக்குப் பின்னும் வயிறு குறையாத பெண்கள் கலர் மங்கிய நைட்டியில் அங்குமிங்குமாக நடை பயில்கிறார்கள். ''ச்சும்மா ச்சும்மா எந்திருச்சு வராதேன்னு உனக்கு எத்தன வாட்டி சொல்றதும்மா? டாக்டரம்மா வந்தா எங்களுக்குத்தான் திட்டு விழும்'' என்று ஒரு பெண்ணிடம் கடிந்துகொள்கிறார் சீனியர் சிஸ்டர். அவரது அரட்டலில் வீல் என்று அலறுகிறது திட்டு வாங்கிய பெண்ணின் இடுப்பில் இருக்கும் மூத்தக் குழந்தை.

எல்லோரும் நலம் வாழ...

'புற நோயாளிகள் பிரிவு’க் கட்டடத்தைக் கடந்தால், மரங்கள் நெருக்கமாக சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கிறது 'தோல் மற்றும் பால்வினை நோயாளிகள் பகுதி’. தவிர குழந்தைகளுக்கான அறுவைச் சிகிச்சை வசதி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை வழங்குவதற்கான ஏ.ஆர்.டி. மையம், பச்சிளம் குழந்தைகளுக்கான அதிநவீன தீவிர சிகிச்சைப் பகுதி, உயர்தர வசதியுடன் கூடிய நரம்பியல் மருத்துவப் பிரிவு, நரம்பியல் அறுவைச் சிகிச்சை என மருத்துவமனையின் அங்கங்கள் நீள்கின்றன.

பிரத்யேக இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு விரைவில் இங்கே தொடங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி முதலில் தொடங்கப்பட்டது இந்த மருத்துவமனையில்தான்.

ரேடியோ தெரபி, கீமோ தெரபி போன்ற சிகிச்சைகள் செய்யப்படும் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவின் முகப்பில் கூட்டம் பொங்கி வழிகிறது. நோய்க்கான தீவிர சிகிச்சையில் இருப்பதால், முடிகள் உதிர்ந்துபோன தலையைத் தடவிக்கொண்டு வெறுத்துப்போய் வானத்தைப் பார்க்கிறார் ஓர் இளம்பெண். அவருக்குப் பக்கமாக அமர்ந்து தனது கூந்தலுக்கு ஒரு ரூபாய் பாக்கெட் தேங்காய் எண்ணெயைத் தடவுகிறார் அவரது அம்மா. நோய் ஏற்படுத்திய இந்த முரண்பாட்டுக் காட்சிகளை எல்லாம் கவனிக்க அவகாசம் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறது கூட்டம்.

மருத்துவமனையின் நிர்வாகக் கட்டடங்களைத் தாண்டி கேட்டை நோக்கி நடந்தால், சவாரிக்காகக் காத்திருக்கும் ஆட்டோ டிரைவரின் மொபைல் எஃப்.எம்.மில்... 'நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்’என்று கசிந்து உருகுகிறார் எஸ்.பி.பி.!

எல்லோரும் நலம் வாழ...
எல்லோரும் நலம் வாழ...
எல்லோரும் நலம் வாழ...
எல்லோரும் நலம் வாழ...
எல்லோரும் நலம் வாழ...
எல்லோரும் நலம் வாழ...

 1909 ஜூலை 14-ம் தேதி கோவை அரசு மருத்துவமனை திறக்கப்பட்டது. 2008 ஜூலை 14-ம் தேதி நூற்றாண்டைக் கொண்டாடியது.

எல்லோரும் நலம் வாழ...

 1998-ல் கோவையில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தபோது படுகாயம் அடைந்தவர்களைக் காப்பாற்றவும் இறந்தவர்களை உரிய பரிசோதனைகள் முடித்து ஒப்படைக்கவும் இந்த மருத்துவமனைதான் பெரும் பங்காற்றியது. மருத்துவர்களும் செவிலியர்களும் காயம்பட்டவர்களைக் காப்பாற்றப் போராடிய வேளையில் மருத்துவமனைக்குள்ளும் குண்டு வெடித்தது. உதவியவர்களும் கருகிப்போன கோரம் அது. கோவை மருத்துவமனை குறித்து நினைக்கும்போது எல்லாம் மறக்க முடியாத துயரம் அது!

எல்லோரும் நலம் வாழ...

 நீலகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்ட ஏழை மக்கள் உயிர் காக்க ஓடி வருவது இங்கேதான்.  பாலக்காடு, மன்னார்காடு, திருச்சூர், கொச்சின் போன்ற கேரள மாநிலப் பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கே வருகிறார்கள். பன்றிக்காய்ச்சல் நோய் பரவியபோது தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக நோயாளிகளைக் கையாண்டது இந்த மருத்துவமனைதான்.

கிடைத்தது தீர்வு!

கடந்த இதழில் வெளியான 'பிரச்னைகளும் பிரார்த்தனைகளும்’ பகுதியில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், ரூ. 28 கோடியில் கட்டப்பட்ட புதிய விரிவாக்கக் கட்டடம் செயல்படாமல் இருப்பதுபற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இப்போது அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

'விரிவாக்கக் கட்டடத்தை இந்த மாத இறுதிக்குள் முழு அளவில் செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். ஏற்கெனவே அங்கு 150 படுக்கைகளுடன் எலும்பு சிகிச்சைப் பிரிவு செயல்படுகிறது. தற்போது, தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி கொடுத்திருக்கிறது. அதோடு, ராஜாஜி அரசினர் மருத்துவமனை நிதியில் இருந்து ஒரு தொகையைச் சேர்த்து முக்கிய மருத்துவக் கருவிகள் வாங்கப்பட உள்ளன. எனவே, மேற்கொண்டு 150 படுக்கைகள் கொண்டுவரப்பட்டு, விபத்து சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. அறுவைச் சிகிச்சை அரங்கைத் தயார்செய்யும் பணிகள்தான் பாக்கி. ஜனவரி மாத இறுதியில் நிச்சயமாக விரிவாக்கக் கட்டடத்தை முழுமையாகச் செயல்படுத்திவிடுவோம் என்கிற நல்ல செய்தியை டாக்டர் விகடன் மூலம் மதுரை மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதன்மையர் எட்வின் ஜோ.

- கே.கே.மகேஷ்

எல்லோரும் நலம் வாழ...
எல்லோரும் நலம் வாழ...
எல்லோரும் நலம் வாழ...
எல்லோரும் நலம் வாழ...

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரையில் மக்கள் முகம் சுளிக்கும் மிக முக்கியமான விஷயம் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குப்பைகள். மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ.வான டாக்டர் சிவபிரகாசத்திடம் இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டபோது, ''தினமும் குறைஞ்சது 5,000 பேராவது இங்கே வந்து போறாங்க. அவங்க போடுற குப்பைகள் மிகப்பெரிய அளவில் குவிகின்றன. இவ்வளவு பெரிய வளாகத்தைச் சுத்தம் செய்யும் அளவுக்கு போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. ஆனாலும், இனி தினமும் இன்னும் கவனமாத் துப்புரவுப் பணியைப் பண்ணச் சொல்றேன்'' என்றார். நம் கண் முன்பாக அதற்கான பணிகளும் நடந்தன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism