Published:Updated:

பேரனின் விரல் பிடிக்க...

கலா வென்ற கதை!

பேரனின் விரல் பிடிக்க...

கலா வென்ற கதை!

Published:Updated:
பேரனின் விரல் பிடிக்க...

கால்களில் சக்கரத்தைக் கட்டியதுபோல் இயங்குகிறார் 53 வயதாகும் திருமதி கலா ஜெயராஜ். வீடு, வாசல் பெருக்குவதில் ஆரம்பித்து தண்ணீர் எடுப்பது, துணி துவைப்பது, காய்கறி வாங்குவது எனப் பரபரக்கிறார். 'ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத் தலைவிகள் இப்படித்தான் சுழல்கிறார்கள். இதில் கலா மட்டும் என்ன ஆச்சரியம்?’ என்றுதானே கேட்கிறீர்கள்... இருக்கிறது! 

மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில், கலாவின் இடது கால் எலும்புகள் நொறுங்கிவிட்டன. ஆனாலும், மனதளவில் நொறுங்கிப்போகாமல், தன்னம்பிக்கையோடு அவர் போராடி ஜெயித்த தைரியம்தான் எல்லோரையும் ஆச்சர்யத்தோடு பார்க்கவைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேரனின் விரல் பிடிக்க...
##~##

''கடந்த 2008 நவம்பர் மாசம். என் மகனோட கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில், வீடே பரபரப்பா இருந்துச்சு. கல்யாணப் பத்திரிகை வைப்பதற்காக ஆவடிக்கு நானும் என் மகனும் பைக்கில் போனோம். திடீர்னு குறுக்கே ஒரு சைக்கிள் வர, நான் அப்படியே கீழே விழுந்துட்டேன். பின்னால் வந்த லாரி ஒன்று என் இடது கால் மேல ஏறி இறங்கியது. அவ்வளவுதான்... கால் எலும்புகள் உடைந்து, சதைகள் மண்ணோடு மண்ணாக சொத சொதவென ஒட்டிக்கிச்சு. கண்ணை மூடித் திறப்பதற்குள் எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு!'' - நினைவுகளில் மூழ்கும் கலா இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

''கால்ல இருந்து அதிகமான ரத்தம் வெளியேற அப்படியே மயங்கிட்டேன். ஷேர் ஆட்டோ பிடிச்சு அம்பத்தூர்ல இருக்கிற ஒரு ஆஸ்பிட்டலுக்கு வந்தோம். காயத்தைப் பரிசோதிச்ச டாக்டர்கள், எலும்பு நொறுங்கிட்டதாகச் சொல்லி காலை வெட்டி எடுத்தால்தான் உயிர் பிழைக்கவே முடியும்னு சொன்னாங்க. எனக்கு சர்க்கரை வியாதி இருந்ததும் அதற்கு ஒரு காரணம்!

அந்த இக்கட்டிலும் காலை இழப்பதற்கு எனக்கு மனம் இல்லை. 'கடவுளே... எவ்வளவு வலியையும் பொறுத்துக்கிறேன். என்னோட காலை மட்டும் இழந்திடக் கூடாது’னு மனசுக்குள்ளேயே வேண்டினேன்.

அப்போதான் தெய்வாதீனமாக வந்து சேர்ந்தார் நரம்பியல் டாக்டர் ஒருத்தர். எனது இடது கால் சுண்டு விரலில் அசைவு இருப்பதைப் பார்த்து, 'காலை வெட்டாமல், உடைந்த எலும்புகளை ஒட்டவைத்து சரியாக்கலாம்’னு சொன்னார்.

முதல் ஆபரேஷனில், எலும்புகளை ஒட்டவைத்தனர். பிய்ந்துபோன சதைகளுக்கு மாற்றாக, தொடையில் இருந்து சதையை வெட்டி எடுத்து ஒட்டினர். அதற்குள் மகனின் கல்யாண நாளும் வந்துவிட்டது. ஆஸ்பிட்டல் படுக்கையில் நான், சர்ச்சில் மகனின் திருமணம். கால் வலியும் மன வலியும் ஒருசேர அழுத்த, ரொம்பவே நொந்துபோனேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் பெட் ரெஸ்ட்! பிறகு ஒட்டவைக்கப்பட்ட எலும்புகள் நிலைகொள்வதற்காக உலோகக் கம்பிகளைக் காலில் பொருத்தி வீட்டுக்கு அனுப்பினர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு காலில் மாவுக்கட்டு போட்டார்கள். ஆனாலும், வலி தொடர்ந்தபடியே இருந்தது. நடக்கவும் முடியவில்லை. விபத்து நடந்து முடிந்து ஒரு வருடமும் கடந்துவிட்டது. வலி தீராத சமயங்களில், மனம் தளராமல் நம்பிக்கையைக் கொடுத்தவர் எனது கணவர்தான். அருகிலேயே இருந்து சின்ன குழந்தையைக் கவனிப்பதுபோல் என்னைக் கவனித்துக்கொண்டார். அவர் கொடுத்த தைரியம் எனக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது.

இதற்கிடையில், பேரனும் பிறந்துவிட்டான். ஆசை ஆசையாய்த் தூக்கிக் கொஞ்ச வேண்டும். அவனுக்கு நான் நடை பழகக் கற்றுத்தர வேண்டும் என மனதுக்குள் ஆயிரம் ஆசைகள். ஆனால், பேரன் நடை

பேரனின் விரல் பிடிக்க...

பழகும் நேரத்தில், நானும் நடை பழக வேண்டிய சூழல். பாட்டியும் பேரனும் ஒரே நேரத்தில் நடைபயின்றது அநேகமாக எங்கள் வீட்டிலாகத்தான் இருக்கும்.

ஒருகட்டத்தில் வலி பொறுக்காமல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் ஆனேன். ஸ்கேன் செய்து பார்த்தவர்கள் 'விபத்தில் நொறுங்கிய எலும்புச் சிதறல்களை அப்புறப்படுத்தாமல், அப்படியே வைத்து ஆபரேஷன் செய்துவிட்டார்கள்’ என்றார்கள். என் பேரனின் விரல் பிடித்து நடக்கவைக்கும் பாக்கியம் வாய்க்காமல் போய்விடுமோ என உடைந்துபோனேன். ஆனாலும், மனதைத் தேற்றியபடி அங்கேயே மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்துகொண்டேன். உள்ளே இருந்த எலும்புச் சிதறல்கள் வெளியே எடுக்கப்பட்ட பிறகுதான் கால் வலி குறைந்தது.

வாக்கர் வைத்து நடக்க ஆரம்பித்தேன். உடைந்த எலும்புகளை அறுத்தெடுத்து அறுவைச் சிகிச்சை செய்து இருந்ததால் குறிப்பிட்ட அந்தக் கால் மட்டும் கொஞ்சம் குட்டையாகிவிட்டது. அதனால், வலது காலுக்கு இணையாக இடது காலின் அளவையும் கூட்டுவதற்காக மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்தார்கள். நான்கு ஆபரேஷன்களைக் கடந்துதான், இந்தக் காலுக்கு நல்ல காலம் பிறந்தது!'' - மலர்ந்து சிரிக்கிறார் கலா!

கலாவின் மகன் மணி, ''அம்மாவுக்கு இயற்கையிலேயே துணிச்சல் அதிகம். விபத்து நடந்தப்பகூட என்னை அழக் கூடாதுன்னு  அதட்டினாங்க. அவ்வளவு வலியிலும், 'என் பேரனுக்கு நான்தான் நடை பழகச் சொல்லித் தருவேன்’னு அடம்பிடிச்சாங்க. அந்தத் தன்னம்பிக்கையும் தைரியமும்தான் அவங்களை மீண்டும் எழுந்து  நடமாட வெச்சிருக்கு'' என்கிறார் ஆனந்தமாக.

தன் பேரனை அழைத்துக்கொண்டு கையில் கூடையோடு கடைவீதிக்குக் கிளம்புகிறார் கலா பாட்டி. நம்பிக்கையால் மீண்டுவந்த ஒரு பெண்மணியின் கம்பீரமான நடை அது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism