Published:Updated:

இது பொம்மை அல்ல... உண்மை!

இது பொம்மை அல்ல... உண்மை!

இது பொம்மை அல்ல... உண்மை!

இது பொம்மை அல்ல... உண்மை!

Published:Updated:
இது பொம்மை அல்ல... உண்மை!

பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்?

'உலகமே ஒரு பொம்மை’ என நினைக்கிறார்கள் வயதானவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பொம்மைதான் உலகம்’ என நினைக்கிறது குழந்தை.

ம்மாவுக்கு அடுத்து குழந்தைகள் அதிகம் நெருங்கிப் பழகுவது பொம்மைகளிடம்தான். பொம்மைகளைத் தன் தம்பி, தங்கைபோலவே பாவித்து ஒரு தனி உலகத்தில் குழந்தைகள் சஞ்சரிக்கின்றன. வெறும் பொழுதுபோக்கு மட்டும் இன்றி, குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் செயல்திறனைத் தூண்டுகின்ற போதி மரங்களாகவும் செயல்படுவது பொம்மைகள். ஆனால், சில நேரங்களில் பொம்மைகளே குழந்தைகளுக்கு ஆபத்தாகிவிடுவதும் உண்டு. இதுகுறித்து விளக்குகிறார் பெங்களூர் என்.ஆர்.சி.எல்.பி.ஐ (National Referral Centre for  Lead Poisoning in India) ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் துப்பில் வெங்கடேஷ்.

''குழந்தைகள் விளையாடும் பல விளையாட்டுப் பொருட்களில் லெட் எனப்படும் காரீயம் கலந்து இருக்கிறது. அதனால் என்ன என்கிறீர்களா? காரீயம் கலந்து இருக்கும் பெட்ரோலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சொன்னால் எளிதில் விளங்கும்.

இது பொம்மை அல்ல... உண்மை!

கார், பஸ், லாரி ஆகியவை வெளியேற்றும் காரீயம் கலந்த புகையைச் சுவாசிப்பதால், அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். 100 மி.லி ரத்தத்தில் 10 மைக்ரோ கிராமுக்கும் அதிகமாக காரீயம் கலக்கும்போது, குழந்தைகளின் ஐ.க்யூ. திறன் குறையும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ரத்தத்தில் எந்த அளவுக்கு காரீயம் கலந்து இருக்கிறது என்கிற ஆராய்ச்சியை 1996-ம் ஆண்டில் இருந்து 2000 வரை நடத்தினோம். 50 சதவிகிதக் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு இருந்தது

இது பொம்மை அல்ல... உண்மை!

தெரியவந்தது. இதை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். அதன் விளைவாக, 2000-ல், காரீயம் கலக்காத பெட்ரோலை நமது அரசாங்கம் அறிமுகம் செய்தது. இதனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகள் என்ன என்பதை அறிந்துகொள்ள, 2011-ல் மீண்டும் ஓர் ஆய்வினை மேற்கொண்டோம். அதில் 100-ல் 18 குழந்தைகளுக்கு மட்டுமே காரீயம் பாதிப்பு இருப்பது தெரிந்தது. காரீயத்தால் ஏற்படும் பாதிப்புகள் இப்போது ஓரளவுக்குப் புரிந்திருக்கும். சரி, பொம்மைகளுக்கு வருவோம். ஆசையாக விளையாடும் பொம்மைகள் மூலமும் குழந்தைகள் இந்த காரீய பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கண்கவர் நிறங்களில் பொம்மைகள் விற்கப்படுகின்றன. இதில், வண்ணத்தைப் பிரகாசமாகக் காட்ட, அதிக அளவில் காரீயம் கலக்கப்படுகிறது. இந்த பொம்மைகளையே பிறந்த நாள் பரிசாகவும் அழுகையை நிறுத்தும் ஆயுதங்களாகவும் நினைத்து குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கிறோம். காரீயம் பூசப்பட்ட பொம்மைகளை குழந்தைகள் வாயில் வைப்பதாலும் பொம்மைகளை வைத்து விளையாடிய கையைக் கழுவாமல் அப்படியே சாப்பிடுவதாலும் காரீயம் குழந்தைகளின் வயிற்றுக்குச் சென்று ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இது குழந்தைகளிடம் கொஞ்சம்கொஞ்சமாக மந்தத்தன்மையை உருவாக்கி, அவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடித்துவிடும். மேலும், அவர்களுடைய கவனிக்கும் திறன் குறைந்து, எந்த வேலையிலும் அதிக நேரம் ஈடுபட முடியாமல், அதை வெளிப்படுத்தவும் தெரியாமல் குழந்தைகள் தவிக்கத் தொடங்கிவிடும். படிப்பில் அதிக மதிப்பெண் பெற முடியாமலும் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட முடியாமலும் குழந்தைகள் திணறும்.  மேலும் கிட்னி பாதிப்புக்கு உள்ளாகி உடலுக்கு தேவையான தாது உப்புக்கள், புரத சத்துக்களை சேர்த்து வைக்க முடியாமல் அதை வெளியேற்றத் தொடங்கும். காரீயத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வலிப்பு ஏற்பட்டு, மூளையில் வீக்கம் உருவாகும். இதனால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முடியாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் இந்த மாதிரியான பொம்மைகளை,

இது பொம்மை அல்ல... உண்மை!

குழந்தைகளிடம் இருந்து கண்டிப்பாக விலக்கிவைக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் துப்பில் வெங்கடேஷ்.

ஒவ்வொரு குழந்தையும் பள்ளி செல்வதற்கு முன்பு அதற்கான ஆரம்ப அறிவு, பொம்மைகள் மூலமே கற்பிக்கப்படுகிறது. அவர்களுக்கான பொழுதுபோக்கும் சந்தோஷமும் பொம்மைகள் மட்டுமே. இந்தச் சூழ்நிலையில், 'குழந்தைகளிடம் இருந்து பொம்மைகளை எப்படிப் பிரிக்க முடியும்?’ என்கிற கேள்விக்கு வழிகாட்டுகிறார் குழந்தை நல மருத்துவர் தங்கவேலு.

''சின்ன பொம்மை, பெரிய பொம்மை என்று அளவு பிரிக்கவும் பச்சை நிறம், சிவப்பு நிறம் என்று நிறங்களைத் தெரிந்துகொள்ளவும், நாய், புலி என்று இனம் கண்டுகொள்ளவும் குழந்தைகளுக்கு முதலில் உதவி செய்வது பொம்மைகள்தான். ஒரு பந்தினை குழந்தையை நோக்கி உருட்டி விடும்போது, அந்தப் பந்து தன்னை நோக்கி வரும் வரை காத்திருக்க வேண்டும் என்கிற பண்பு நலனையும் இந்தப் பொம்மைகள் மூலம்தான் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். அதனால், ஒரேயடியாக பொம்மைகளே வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது.  'காரீயம் கலக்காதது, குழந்தைகளின் வயது வரம்புக்கு உட்பட்டது’ என்று உத்தரவாதம் அச்சிடப்பட்டு இருக்கிற பொம்மைகளையே பார்த்து வாங்க வேண்டும்'' என்கிறார் அக்கறையோடு.

காரீயத்தைத் தடுப்பதே குழந்தைகள் விஷயத்தில் நாம் மேற்கொள்ளும் முதல் காரியமாக இருக்கட்டும்!

  இது விளையாட்டு அல்ல!

மூன்றரை வயதுக்கு உட்பட்ட எந்தக் குழந்தையின் கையில் ஒரு பொருளைக் கொடுத்தாலும், அதை வாயில் வைத்து சுவைத்துப் பார்க்கும். அதனால், காரீயம் கலந்த வர்ணம் பூசப்பட்ட பொம்மைகள், கையால் தொட்டாலே சாயம் ஒட்டிக்கொள்ளும் பொம்மைகள் மற்றும் பெயின்ட் எளிதில் உரிந்து வரும் நிலையில் இருக்கும் பொம்மைகளை குழந்தைகளிடம் கொடுக்கவே கூடாது. காரீயம், காட்மியம், பாதரசம் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் செய்யப்பட்ட பொம்மை என்றால் 'CE’ என்ற அடையாளக்குறி அதில் அச்சிடப்பட்டிருக்கும். இத்தகைய பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கலாம்.  

கார் டயர் போன்று தனித் தனியாக பிரிந்து வரும் நிலையில் உள்ள பொம்மைகளும் ஆபத்துதான். ஏனெனில், குழந்தைகள் அதில் இருக்கும் சின்ன ஸ்க்ரூ அல்லது பாகங்களை வாயில்போட்டு விழுங்கிவிடும் அபாயம் உள்ளது. அதேபோல கோலி குண்டுகளை குழந்தைகளிடம் கொடுக்கக் கூடாது.

டெலிபோன் ஒயர் மற்றும் கயிறு போன்ற பொம்மைப் பொருட்களை வைத்து விளையாடும்போது, குழந்தைகள் அதைக் கழுத்தில் சுற்றிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

குழந்தைகளின் மனதில் வன்முறையைத் தூண்டும் துப்பாக்கிப் பொம்மைகளையும் தவிர்க்க வேண்டும்.

கூர்மையான முனைகள் இல்லாத பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம்.

வண்ணம் பூசப்படாத பாரம்பரியமான மரப்பாச்சி பொம்மைகள், பனை ஓலைப் பொம்மைகளும் ஓ.கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism