Published:Updated:

கேன்சரை விளாசும் 'யுவராஜ் சிங்'கம்!

கேன்சரை விளாசும் 'யுவராஜ் சிங்'கம்!

கேன்சரை விளாசும் 'யுவராஜ் சிங்'கம்!

கேன்சரை விளாசும் 'யுவராஜ் சிங்'கம்!

Published:Updated:
கேன்சரை விளாசும் 'யுவராஜ் சிங்'கம்!

டந்த 2007-ம் வருடம்... இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் அது... யுவராஜ் சிங் பந்து வீச அழைக்கப்படுகிறார். 4... 6... எனப் பந்துகள் பறக்கின்றன. டி.வி-யில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்த அத்தனை பேரும் யுவராஜைக் கரித்துக் கொட்டுகிறார்கள். அடுத்து இந்தியா பேட்டிங்கை ஆரம்பிக்கிறது... அடித்து நொறுக்குகிறார் யுவராஜ். ஸ்டுவர்ட் பிராடு வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிக்கிறார் யுவராஜ். ஜெயிக்கிறது இந்தியா. திருப்பி அடிக்கும் விஷயத்தில் யுவராஜ் எப்படிப்பட்டவர் என்பதற்கு அந்த நிகழ்வு ஒரு சாட்சி. ஆனால், இன்றைக்கு யுவராஜ் திருப்பி அடிக்க வேண்டியது விளையாட்டில் அல்ல... வாழ்க்கையில்!

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவரான விஜயராகவன் இதுபற்றி பேசுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு விதைப்பைகள் அது இருக்கும் இடத்தில் உருவாவது இல்லை. நுரையீரலுக்கு அருகில், உதரவிதானத்திற்குப் பக்கத்தில் மீடியஸ்தைனம் (Mediastinum) என்ற இடத்தில் உருவாகின்றன. பின்னர், அவை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி, விதைப்பையைச் சென்று அடையும். இந்தச் செயல்பாடு கிட்டத்தட்ட கருவில் இருக்கும்போது நான்கு மாதங்களுக்கு நடைபெறும். இந்த விதைகளை ஜெர்ம் (Germ) செல்கள் உருவாக்கும். குழந்தை பிறப்பதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு இந்தச் செயல்பாடு முடிவுக்கு வரும். அதன் பிறகு அனைத்தையும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கும். அப்போது இந்த ஜெர்ம் செல்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டுவிடும். இரண்டு லட்சத்தில் ஒருவருக்கு இந்த ஜெர்ம் செல்களில் சில தங்கிவிடும். இந்த ஜெர்ம் செல்கள் என்பது பாலியல் சார்ந்த செல்கள் ஆகும்.

பெண்கள் பூப்பெய்வதுபோலவே எல்லா ஆண்களும் 13 முதல் 15 வயதுக்குள்ளாக பூப்பெய்துவார்கள். மூளையில் இருந்து சுரக்கும் ஒரு வகை ஹார்மோன் பூப்பெய்தலைத் தூண்டும். மூளையைப் பொறுத்தவரை பாலியல் செல்கள் உடலில் குறிப்பிட்ட இடத்தைத் தவிர, வேறு இடங்களில் இல்லை. ஆனால், விதைகள் தோன்றிய இடத்தில் ஒட்டிக்கொண்டு உயிரோடு இருக்கும் பாலியல் ஜெர்ம்களுக்கும் அந்த வளர்ச்சி ஹார்மோன் வந்து சேரும்போது, அது வளரத் தொடங்கும்.  யுவராஜ் சிங்குக்கு ஏற்பட்டிருப்பது இந்தப் பிரச்னைதான். இது நுரையீரல் புற்றுநோய் அல்ல. மீடியஸ்தைனம் பகுதியில் ஏற்பட்டுள்ள புற்றுநோய். இது அரிய வகையைச் சேர்ந்தது. யுவராஜ் சிங்குக்குப் புற்றுநோய் வந்ததற்கு, புகையிலையோ, மதுப் பழக்கமோ காரணம் அல்ல. முழுக்க முழுக்க மரபியல் காரணம்தான்.

உலகக் கோப்பைக்குப் பிறகு டெல்லி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோதே ஜெர்ம் செல் பாதிப்புபற்றி அங்கு இருந்த மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் மேற்கிந்தியத் தீவுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றார். தனக்கு இந்த மாதிரியான நோய் எல்லாம் வராது என்று தாங்களாகவே எண்ணிக்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் புறக்கணிப்பது தவறு என்பதற்கு துரதிர்ஷ்டவசமாக யுவராஜ்சிங் ஓர் உதாரணமாகிவிட்டார். புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நம் உடலில் நகம், முடி தவிர உடலில் எந்த ஒரு பகுதியிலும் புற்றுநோய் தோன்றலாம்.

தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் யுவராஜ்சிங்குக்கு கீமோதெரபி அளிக்கப்படுகிறது. அதாவது, ரத்த நாளங்கள் வழியாகப் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளைச் செலுத்தி கட்டியை அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பிறகு நோய்ப் பரவலைப் பொறுத்து அவருக்கு ரேடியேஷன் தெரபி அளிக்கப்படலாம். ஒருவேளை இந்தக் கட்டி கண்டறியப்படாமல் இருந்திருந்தால், நாளடைவில், நன்கு முதிர்ந்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும்.

இன்றைய சூழலில் புற்றுநோயைக் கண்டறிய பல எளிமையான முறைகள் வந்துவிட்டன. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், புற்றுநோயை எளிதாகக் குணப்படுத்திவிடலாம். பாதிக்கப்பட்டவர் அதன் பிறகு இயல்பாக வாழ எந்தத் தடையும் இல்லை'' என்று நம்பிக்கை வார்த்தைகளோடு பேசுகிறார் டாக்டர் விஜயராகவன்.

யுவராஜ் சிங் பூரண நலத்துடன் களத்துக்கு வந்து மீண்டும் கலக்க வேண்டும் என்று  அவரது லட்சக் கணக்கான ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள். ''நான் நன்றாகவே இருக்கிறேன். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்துவிட்டதால், சுலபமாகவே இது குணமாகிவிடும். விரைவிலேயே நான் விளையாட வருவேன்!'' என்கிறார் யுவராஜ் சிங்.

காத்திருக்கிறோம் யுவி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism