Published:Updated:

எங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்?

எங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்?

எங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்?

எங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்?

Published:Updated:
எங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்?
##~##

ழைய கருப்பு - வெள்ளைப் படங்களில் நீங்கள் அவர்களைப் பார்த்து இருக்கலாம். கையில் பெட்டியுடன் வீட்டுக்கு வந்து செல்லும் டாக்டர்கள். தாத்தா முதல் பேரக்குழந்தை வரை ஒரு வீட்டின் அத்தனை பேரின் உடல்நிலையையும் விரல் நுனியில் வைத்திருந்தவர்கள். வயிற்று வலி என்று போனால், சிரித்துக்கொண்டே ''வீட்டுல பலகாரம் தூள் பறக்குதோ... வயிறு கல்லாட்டம் இருக்கு. ரெண்டு வேளை பட்டினி போடு. சரியாயிடும்'' என்று பட்டினியையும் வைத்தியமாகச் சொல்லிக்கொடுத்தவர்கள். ''எப்பவும் வேலை, வேலைனு போய்க்கிட்டு இருந்தீன்னா, உடம்பை யார் பார்க்குறது? உடம்பைக் கவனி, இல்லாட்டி என்னைப் பார்க்கவே வராதே'' என்று உரிமையோடு கோபித்துக்கொண்டவர்கள் ஃபேமிலி டாக்டர்கள். ரேஷன் அட்டையில் பெயர் இல்லாவிட்டாலும் குடும்ப உறுப்பினர்கள். ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என நோயாளிகள் கனவு காண்பது இப்போதும் ஃபேமிலி டாக்டர்களை வைத்துதான். எங்கே போனார்கள் அவர்கள்? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்கேயும் இருக்கத்தான் செய்றோம். நீங்கதான் எங்களைக் கடந்து போயிடுறீங்க'' என்கிறார் குடும்ப நலப் பொது மருத்துவரான ஹைதரி.

''மக்களுடைய மனநிலையில் ஏற்பட்டிருக்கிற மாற்றம்தான் ஃபேமிலி டாக்டர்ங்கிற நல்ல அமைப்பு நம்ம சமூகத்துல சிதைஞ்சுக்கிட்டு இருக்கிறதுக்கு காரணம். அந்தக் காலத்துல ஊருக்கு நாலு டாக்டர்கள்தான் இருப்பாங்க. இப்ப இருக்குற அளவுக்குப் பரிசோதனைகள், நவீன சிகிச்சை முறைகள் எல்லாம்கூட கிடையாது. ஆனாலும், மக்கள் ஒரு டாக்டரைத் தேர்ந்தெடுத்தா அதில் உறுதியா இருந்தாங்க. எவ்வளவு கூட்டம்னாலும், என்ன நேரமானாலும் காத்திருந்து அவரைப் பார்த்தாங்க. காரணம்... உடல்நலம்தான் எல்லாத்துக்கும் பிரதானம்கிறதையும் ஒருத்தரோட குடும்பப் பின்னணி தெரிஞ்ச டாக்டராலதான் அவங்களோட பிரச்னைகளைச் சரியா புரிஞ்சுக்க முடியும்கிறதையும் அவங்க தெரிஞ்சு வெச்சுருந்தாங்க. ஆனா, இப்ப அப்படி இல்லை. எல்லாத்துலேயும் காட்டுற அவசரம் மருத்துவத்துக்கும் பரவிடுச்சு.

எங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்?

உங்களுக்குத் தெரியுமா? ஃபேமிலி டாக்டரா எப்படிச் செயல்படணுங்கிறதுக்கு எம்.பி.பி.எஸ். முடிச்சதும் ஃபேமிலி மெடிசன்னு (எஃப்.எம்.) தனிப் படிப்பே இப்ப வந்திருக்கு. ஃபேமிலி டாக்டரா இருக்க நாங்க தயாராகத்தான் இருக்கோம். மக்கள்தான் தயாராகணும்'' என்கிறார் ஹைதரி.

''எல்லாத்துலேயும் வெளிநாடுகளை உதாரணமா பார்க்குற நம்ம மக்கள் மருத்துவத்திலேயும் வெளிநாட்டு முன்னுதாரணங்களைக் கவனிக்கணும்'' என்று தொடங்கினார் எலும்புச் சிகிச்சை நிபுணர் பார்த்தசாரதி.

எங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்?

''நீங்க லண்டன்ல இருந்தா நேரடியா ஒரு நிபுணரைப் பார்த்துட முடியாது. முதல்ல பொது மருத்துவரைத்தான் பார்த்தாகணும். அப்படிப் பொது மருத்துவரைப் பார்க்குறதுக்கும் மறுநாள்தான் நேரம் ஒதுக்குவாங்க. இன்னும் சொல்லப்போனா பல நேரங்கள்ல வெறும் போன்ல நர்ஸ் சொல்ற ஆலோசனையோட உங்களுக்குச் சிகிச்சையே முடிஞ்சுடும். நம்ம மக்களோட 'ஸ்பெஷாலிட்டி மோகம்’தான் மருத்துவர்களை மாற்றுகிறது. நோயாளிகளே நிபுணர்களைத்தான் மருத்துவர்களாகப் பார்க்குறப்ப மருத்துவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு துறை சார்ந்து மேற்படிப்பு படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதுக்கு அப்புறம் அந்தந்தத் துறை சார்ந்து மட்டுமே பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுறதால, மருத்துவரும் வெவ்வேறு நோயாளிகளைப் பார்க்க ஆரம்பிச்சுடுறார். நோயாளியும் தன் நோய்க்கு ஏற்ற மருத்துவரைத் தேட ஆரம்பிச்சுடுறார். ஆனா, இந்தச் சூழல் ரெண்டு தரப்புக்குமே நல்லது இல்லை'' என்றார் பார்த்தசாரதி.

மருத்துவத் துறைச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் டாக்டர் புகழேந்தி ஃபேமிலி டாக்டர்கள் எவ்வளவு அவசியமானவர்கள் என்று சற்று விரிவாகவே பேசினார்.

எங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்?

''ஒரு மனுஷனுக்கு வர்ற வியாதியில் பாதிக்கும் மேற்பட்ட வியாதிகளை அவனாலேயே கைவைத்தியங்களால் எதிர்கொள்ள முடியும். மீதி வியாதிகள்ல 80 சதவிகித வியாதிகளை எம்.பி.பி.எஸ். மருத்துவர்களே பார்க்க முடியும். மீதி 20 சதவிகித நோய்களுக்குத்தான் நிபுணர்கள் உதவி தேவைப்படும். இதுலேயும் ஒரு நல்ல மருத்துவர் நோயைப் புரிஞ்சுக்குறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நோயாளியோட பின்னணியையும் தெரிஞ்சு வைச்சுருக்குறது முக்கியம். உதாரணமா என்கிட்ட ஒரு சிறுமியை அடிக்கடி ஏதாவது பிரச்னையோட அழைச்சுக்கிட்டு வந்துட்டே இருந்தாங்க. ஏன் அடிக்கடி பிரச்னைன்னு பார்த்தா, அந்தப் பெண்ணுக்கு நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவு. அதுக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறைதான் காரணம். ஊட்டச்சத்துக்குறைவுக்கு மாத்திரைங்களைவிட நல்ல உணவு முக்கியம். எனக்கு அந்தப் பெண்ணோட அப்பாவைத் தெரியும். அவருக்குக் குடிப்பழக்கம் உண்டு. 'உங்களோட குடிப்பழக்கம் ஏற்படுத்துற ஏழ்மைதான் உங்க பெண்ணோட உடல்நிலைக்குக் காரணம்’னு சொன்னேன். குடியை மறக்க அவருக்குச் சிகிச்சை கொடுத்தேன். பெண் தானா குணமானா. இந்தப் பின்னணியில் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. திடீர்னு போய் பார்க்குற ஒரு ஸ்பெஷலிஸ்ட்டால் இந்தப் பிரச்னைகளை எப்படி உணர்ந்துக்க முடியும்?

நிறைய வியாதிகளுக்கு மரபியல் தொடர்ச்சி ஒரு காரணமா இருக்கு. பரம்பரை  வியாதிகள்னு ஒரு பட்டியலே இருக்கு. ஃபேமிலி டாக்டராக இருந்தால் அவருக்கு உங்க குடும்ப வரலாறு தெரியும். அதற்கான தீர்வுகளையும் ஏற்கெனவே உள்ள அனுபவங்களின் அடிப்படையில் அவரால் ரொம்ப எளிமையா சொல்ல முடியும்.  ஒரு ஃபேமிலி டாக்டருக்குத்தான் ஒரு நோயாளியோட குடும்பப் பின்னணி, வீட்டுச்சூழல், அவர் இருக்குற சமூகச் சூழல், அவருடைய பொருளாதார நிலை, அவருக்கு இருக்குற நெருக்கடிகள், அவரோட மனநிலை... இவ்வளவையும் புரிஞ்சு சிகிச்சை கொடுக்க முடியும். இவ்வளவும் ஏன் தெரிஞ்சுருக்கணும்னா ஒருத்தருக்கு நோய் வர்றதுக்கான காரணங்கள்ல இவ்வளவும் இருக்கு.

அதனால, நவீன மருத்துவப் பரிசோதனைகள் தேவையான்னு கேட்டா, அவசியமான தருணங்கள்ல தேவைதான். ஸ்பெஷலிஸ்ட்டுகளோட ஆலோசனை தேவையான்னா, அதுவும் அவசியமான தருணங்கள்ல தேவைதான். ஆனா, எது அவசியமான தருணம்னு ஒரு ஃபேமிலி டாக்டரால்தான் சரியா கணிக்க முடியும். அதனால, உங்க உடலோட ஒவ்வொரு பிரச்னைக்கும் லேப்புகளும் ஸ்பெஷலிஸ்ட்டுகளும் தேவை இல்லை. உங்க உடல்நலத்துக்கு எப்போதும் தேவைப்படுறவர் ஃபேமிலி டாக்டர்.  நீங்க மருத்துவர்கள்கிட்ட எவ்வளவு நெருக்கமாகுறீங்களோ, அதே அளவுக்கு மருத்துவர்களும் உங்களுக்கு நெருக்கமாவாங்க. அதனால, உங்க ஃபேமிலி டாக்டரை நீங்களே உருவாக்குங்க'' என்றார் முத்தாய்ப்பாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism