Published:Updated:

இசையால் குணமாகா நோயும் உண்டோ?!

இசையால் குணமாகா நோயும் உண்டோ?!

இசையால் குணமாகா நோயும் உண்டோ?!

இசையால் குணமாகா நோயும் உண்டோ?!

Published:Updated:
இசையால் குணமாகா நோயும் உண்டோ?!
##~##

சையைக் கேட்கலாம்... ரசிக்கலாம்; ஒரு சிகிச்சையாகவும் செய்ய முடியுமா? முடியும்... இது காலங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் இருந்துவரும் ஒன்றுதான். 'மியூஸிக் தெரபி’ என்கிற பெயர்தான் புதிது. தாலாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டம்... என நம் கலாசாரத்தில், நமக்குத் தெரியாமலேயே மியூஸிக் தெரபியைப் பின்பற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மியூஸிக் தெரபியில் டாக்டர் பட்டம் பெற்று, மியூஸிக் தெரபிக்கான பள்ளியை நடத்திவரும் டாக்டர் சுமதி சுந்தர் இதுபற்றி விவரிக்கிறார்.

''நம் உடலுக்குள் இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு, ரத்த ஓட்டம், மூளையின் மின் அதிர்வுகள் என அனைத்தும் ஒருமித்த ரிதத்தோடுதான் இயங்கிவருகின்றன. இவை அனைத்தும் ஒரே அலைவரிசையில் இயங்கும்போது, எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. ஆனால், இதில் ஏதாவது ஒன்று ரிதம் மாறும்போது, உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

இசையால் குணமாகா நோயும் உண்டோ?!

ரிதம் மாறுவதால் வரும் இந்தப் பிரச்னைகளுக்கு, ரிதமே நல்ல சிகிச்சை. அதுதான் மியூஸிக் தெரபி!

குழந்தைகள் கல்வியில் கவனம் இல்லாமல் பின்தங்கி இருந்தால், அவர்களுக்கு இசையின் மூலம், ஞாபக சக்தியை மேம்படுத்திக் கல்வியில் கவனம் செலுத்தவைக்க முடியும். நாம் சிறுவர்களாக இருந்தபோது ரசித்த சினிமா பாடல்களை இப்போதும் வார்த்தை மாறாமல் பாடுகிறோமே... எப்படி? அவற்றை நாம் இசை வடிவில் நினைவில் வைத்துக்கொண்டதுதான் காரணம்.

இசையால் குணமாகா நோயும் உண்டோ?!

முற்காலத்தில், போர் தொடங்கும்போது போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் என அனைவரையும் யுத்த மனநிலைக்கு மாற்ற போர் முரசு அறையும் பழக்கம் உண்டு. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் முறைப்படுத்தி, இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் (கி.பி. 1939-1945) இசையைச் சிகிச்சையாகக் கையாளும் வழிமுறையை அமெரிக்கர்கள் வடிவமைத்தனர்.

இசையைக் கேட்கவைப்பது மட்டுமே மியூஸிக் தெரபி அல்ல; வெளியில் சொல்ல முடியாமல், மனதுக்குள்ளேயே புதைந்துகிடக்கும் விஷயங்களுக்கு வடிகால் கொடுத்துப் பாடலாக எழுதவைப்பது; இசைக் கருவிகள் வாசிக்கவைப்பது போன்றவையும் மியூஸிக் தெரபிதான்.

பாட வேண்டும் என்றவுடன் 'நல்ல குரல் வளம் வேண்டுமே’ என்று தயங்கத் தேவை இல்லை. மனம்விட்டுப் பாடுவதுதான் இங்கே முக்கியம். அடிப்படையில் எந்த ஓர் இசைக் கருவியைக்

இசையால் குணமாகா நோயும் உண்டோ?!

கண்டாலும், அதை வாசித்துப் பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் இயல்பாகவே ஓர் ஆசை எழும். அதன்படி ஓர் இசைக் கருவியை இசைத்துப் பார்ப்பதே நல்லதொரு சிகிச்சை. இதற்கு பெரிய மேதாவிலாசம் வேண்டும் என்று அவசியமே இல்லை.

குரூப் தெரபி என்று ஒன்று உண்டு. சமூகத்தோடு ஒட்டாமல் தனித்து வாழ்பவர்களுக்குக் கொடுக்கப்படும் தெரபி இது. சில குழந்தைகள் மற்றவர்களுடன் பேசாமல், விளையாடாமல் தனியாய் இருப்பார்கள். குழந்தைகளைப் போலவே நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு சிலரும் தனித்துவிடப்பட்ட மனநிலையில் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை மற்றவர்களோடு சேர்ந்து பாடவைத்து பயிற்சிகள் கொடுத்து இயல்புக்குக் கொண்டுவரலாம். இதன் மூலம் சமூகத்தோடு கலந்து பழகும் திறனை அவர்களுக்குள் வளர்க்க முடியும்.

'மியூஸிக் தெரபியால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும், நீரிழிவுநோய் சரியாகும்’ என்று சொல்வதெல்லாம் உண்மை அல்ல. மருந்து, மாத்திரைகள், அறுவைச் சிகிச்சைகள் என்று ஒரு நோயுற்றவருக்கு என்னென்ன சிகிச்சைகள் தேவைப்படுமோ, அந்தச் சிகிச்சைகள் அவசியம். அந்தச் சிகிச்சைகளோடு மியூஸிக் தெரபியையும் சேர்த்துக்கொடுத்தால், குணமாகும் வேகம் அதிகமாகும். ஆக, மருத்துவத்துக்கு உறுதுணையாக இருப்பதுதான் மியூஸிக் தெரபி.

ஹார்ட் அட்டாக் வந்தால், பயத்தாலேயே உயிரைவிடுபவர்கள் நிறைய பேர். மன தைரியத்தோடு எதிர்கொண்டால், எந்த நோயையும் வெற்றிகொள்ளலாம். அந்த வகையில் ஒருவரை மனதளவில், தைரியமானவராகத் தயார்ப்படுத்தும் வேலையைத்தான் மியூஸிக் தெரபி செய்கிறது!'' நம்பிக்கை வாத்தியத்தை வாசிக்கிறார் சுமதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism