Published:Updated:

விருந்து அல்ல மருந்து!

விருந்து அல்ல மருந்து!

விருந்து அல்ல மருந்து!

விருந்து அல்ல மருந்து!

Published:Updated:
விருந்து அல்ல மருந்து!
##~##

''காலையில் நான்கு மாத்திரை, மதியம் ஒரு ஸ்பூன் சிரப், இரவு உறங்குவதற்கு முன் ஐந்து மாத்திரை...'' - மூன்று வேளை சாப்பாட்டையே விஞ்சுகிற அளவுக்கு வேளாவேளைக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது இப்போதைய தலைமுறைக்கு வழக்கமாகிவிட்டது. மருந்துகள்பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் விதங்கள்பற்றியும் ராஜபாளையம் டாக்டர் கு.கணேசன் இங்கே பேசுகிறார்... 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மரபியல், ஊட்டச் சத்துக் குறைபாடு, சூழ்நிலை, வளர்ச்சிதை மாற்றம், நோய்க் கிருமிகள் ஆகியவை நோய்கள் வருவதற்கான காரணங்கள். இவற்றை மருந்துகள்கொண்டு சரிசெய்கிறோம். மருந்து என்னதான் நன்மை செய்தாலும், நமது உடலைப் பொறுத்த வரை அது ஓர் அந்நியப் பொருள். அது

விருந்து அல்ல மருந்து!

உடலின் செயல்பாட்டை மாற்றுகிறது. அது நன்மை பயக்கும் மாற்றமாகவும் இருக்கலாம்; தீமை பயக்கும் மாற்றமாகவும் இருக்கலாம்.

எப்படிச் செய்கிறார்கள்?

தாவரங்கள், விலங்குகள், பூஞ்சை-பாக்டீரியா போன்ற உயிரி மற்றும் ரசாயனப் பொருட்களில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இது மாத்திரை, டானிக், ஊசி மருந்து, உடம்புக்கு மேலே தடவும் ஆயின்மென்ட் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. விழுங்கினாலும், மூக்கு வழியாக உறிஞ்சினாலும், ஊசி மூலம் உடலில் செலுத்தினாலும், மருந்து உடலுக்குள் தனது வழியைத் தேர்ந்தெடுத்து, தேவையான இடத்துக்கு பயணிக்கத் தொடங்கி, உடல் முழுக்கச் சென்று அடைகிறது. மருந்துகள் எந்த அளவுக்குப் பயன்படுகின்றனவோ... அதே அளவுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும்.

மருந்தின் செயல்பாடு!

நீங்கள் மாத்திரை சாப்பிட்டீர்கள் என்றால், அது குடலுக்குள் சென்றதும் கரைந்து எங்கு போய் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறது. இதை 'மெக்கானிசம் ஆஃப் ஆக்ஷன்’ என்று சொல்வார்கள். ஒவ்வொரு செல்லிலும் ஏற்பிகள் இருக்கின்றன. இவைதான் மருந்தை ஏற்றுக்கொண்டு வேலை செய்யும். அதாவது ரத்த ஓட்டத்தில் கலக்கும் மருந்து உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்கிறது. ஆனால், தேவையான இடத்தில் மட்டுமே செயல்படுகிறது. இதற்கு இந்த ஏற்பிகள்தான் காரணம். உதாரணத்துக்கு இதயத் தசை செயல் இழப்பைத் தடுக்க ஒருவர் சாப்பிடும் மாத்திரை ரத்தத்தில்

விருந்து அல்ல மருந்து!

கலந்து உடலில் எல்லாப் பகுதிக்கும் செல்கிறது. ஆனால், மூளையிலோ, கை - கால்களிலோ அது வேலை செய்வது இல்லை. இதயத் தசையில் மட்டுமே வேலை செய்கிறது. அதேபோன்று மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்க் கிருமிகளைச் செயல் இழக்கச்செய்யும் மருந்துகள் உள்ளன. இவை நம் உடல் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தாது. மருந்து தயாரிக்கும்போது கெமிக்கல் ஸ்டிரக்சர் உருவாக்குவார்கள். அதுதான் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று வேலை செய்ய உதவுகிறது.

மருந்துக்கு அளவு உண்டா?

மருந்தின் செயல்பாடு என்பது அளவு, வயது, பாடிமாஸ் இண்டெக்ஸ், கிருமியின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். ஒரு நோயாளி எவ்வளவு நாள், எத்தனை வேலை, எவ்வளவு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவர்களின் துணை இல்லாமல், உபாதை  ஏற்படும்போதெல்லாம் நாமே இஷ்டத்துக்கு மருந்து எடுத்துக்கொள்வது அபாயமாக முடியவும் வாய்ப்பு இருக்கிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

டைபாய்டுக்கு 10 நாட்களுக்கு மாத்திரை கொடுத்தால், 10 நாட்களும் தொடர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், பலர் நோயின் வீரியம் குறையத் தொடங்கிய உடனேயே மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்திவிடுவார்கள். இது தவறு. ஒரு மருந்தை டாக்டர் குறிப்பிடும் நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டால்தான், நோய்க் கிருமியை முற்றிலுமாக அழிக்க முடியும். அதனால்தான் கொடுத்த மருந்துகள் தீர்ந்துபோனதும், டாக்டர் நோயாளியை செக்-அப்புக்காக மீண்டும் வரச் சொல்லுவார். மாத்திரைகளைக் குறிப்பிட்ட நாட்கள் வரை முழுமையாகச் சாப்பிடாமல் போனால், சில நாட்களுக்குப் பிறகு அதே நோய் மீண்டும் திரும்பும். அப்போது மீண்டும் டாக்டர் எழுதிக்கொடுத்த அதே மாத்திரைகளைச் சாப்பிட்டால், அது கிருமிகளை ஒன்றும் செய்யாது. ஏனெனில் மருந்தை எதிர்க்கும் ஆற்றலையும் கிருமி அப்போது பெற்றிருக்கும்.

மருந்து வெளியேற்றம்

ஒரு முறை ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டால், அப்போது டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்தையே அடுத்த முறை அதேபோன்ற பாதிப்புக்குள்ளாகும்போது பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் உண்டு. இதுவும் தவறானது.  உதாரணமாக, மூன்று வகையான இருமல்கள் உள்ளன. முதலாவது ஆஸ்துமா பாதிப்பால் நுரையீரல் சுருங்கி வருவது. இரண்டாவது, வறட்டு இருமல்; இது அலர்ஜியால் வருவது. மூன்றாவது சளியால் வருவது. யாருக்கு என்ன பாதிப்பு என்று டாக்டரால் மட்டுமே கண்டறிந்து சிரப் கொடுக்க முடியும். இது தெரியாமல் ஒரு முறை ஏதோ ஓர் இருமலுக்கு டாக்டர் பரிந்துரைத்த மருந்தை டாக்டரின் ஆலோசனை இல்லாமல் வேறு ஓர் இருமலுக்கு எடுத்துக்கொண்டால், தொல்லைதான். தேவையற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, கல்லீரல், சிறுநீரகம், தோல், எலும்பு போன்ற உறுப்புகளில் அந்த மருந்துகள் படியத் தொடங்கிவிடும். இதனால், உடலில் பல பிரச்னைகள் ஏற்படும்.''

போலி மருந்து உஷார்!

இந்திய மருந்துச் சந்தையில் போலி மருந்துகள் வெறும் 0.4 சதவீதம்தான் உள்ளது என்று இந்திய

விருந்து அல்ல மருந்து!

அரசு கூறுகிறது. ஆனால், 8 சதவீதம் வரை இருக்கும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பாதிக்கும் என்பதால், அரசும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இந்தப்  புள்ளிவிவரங்கள் தொடர்பாக அடக்கியே வாசிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுவதும் உண்டு. தனி ஆய்வுகளின் கணக்கை ஆதாரமாகக் காட்டும் அவர்கள் போலி மருந்துகளின் ஆக்கிரமிப்பு 15 முதல் 25 சதவீதம் இருக்கும் என்றும் குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள்.  

போலிகளை ஒழிக்க முடியுமா?

சக்ரவர்த்தி, அவுஷத் பார்மசூட்டிக்கல்:

''நோய்களை விரட்ட உதவும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், போலி மருந்துகளோ வேலையே செய்யாது அல்லது அதிக அளவில் வேலை செய்யும். இந்த இரண்டுமே ஆபத்துதான். போலி மருந்துகளை ஒடுக்க வேண்டுமானால், 40-50 ஆண்டு காலத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட பழமையான சட்டத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அதனால், இந்தச் சட்டத்தைத் திருத்தி, தண்டனையைக் கடுமையாக்கி போலி மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனையைத் தடுக்க வேண்டும்.

போலி மருந்துகள் எதில் அதிகம்? பிராண்டட் மருந்துகளிலா? அல்லது ஜெனரிக் மருந்துகளிலா? போலிகளின் நடமாட்டம் துரதிர்ஷ்டவசமாக ஜெனரிக் மருந்துகளில்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், இதில் வினோதம் என்ன என்றால், வருங்காலங்களில் முழுக்க முழுக்க ஜெனரிக் பெயர்கொண்ட மருந்துகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்று அரசு கூறுகிறது. இதனால் மருந்துகளின் விலை குறையும் என்று அரசு எதிர்பார்ப்பதும் உண்மை. அதனால், போலி மற்றும் காலாவதி மருந்துகள் நடமாட்டத்தை ஒழித்துவிட்டு ஜெனரிக் மருந்துத் திட்டத்தை அரசு கொண்டுவருவதுதான் மக்களுக்கு நல்லது.''

விருந்து அல்ல மருந்து!
விருந்து அல்ல மருந்து!

போலி மருந்து உஷார் 

பேராசிரியர் துரைசிங்கம், நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர்:

விருந்து அல்ல மருந்து!

'போலி மற்றும் காலாவதியான மருந்துகளைப் பார்த்த உடன் கண்டுபிடிக்க முடியாது. ஆய்வுக்கூடங்களுக்குப் பரிசோதனைக்கு அனுப்பி அவர்கள் அளிக்கும் ரிப்போர்ட்டுகளை வைத்துத்தான்  கண்டுபிடிக்க முடியும். இந்த ஆய்வகங்கள் பிரதான நகரங்களில் மட்டுமே இருக்கின்றன. அதனால்தான், கிராமப்புறங்களிலும் சிறிய நகரங்களிலும்தான் அதிக அளவு போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. டானிக், தலைவலி - காய்ச்சலுக்கான மாத்திரைகளில் நிறைய  போலிகள் வருகின்றன. அதேபோன்று மருந்து மாத்திரைகளை ஃபார்மஸிகளில் மட்டும்தான் விற்க வேண்டும். ஆனால், பெட்டிக் கடைகளில்கூட தலைவலி, காய்ச்சலுக்கான மருந்துகள் இப்போது விற்பனை செய்யப்படுகின்றன. போலி மருந்து மாத்திரைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இது போன்ற இடங்களில் இருந்து மருந்து மாத்திரைகளை வாங்கக் கூடாது.

மருந்துக் கடைகளை யார் நடத்தலாம்?

சட்டப்படி, மருந்துக் கடைகளை மருந்தாளுநர்கள்தான் தொடங்கி நடத்த முடியும். ஆனால், இங்கே பெரும்பாலான மருந்துக் கடைகளை மருந்தாளுனர்கள் நடத்துவது இல்லை. ஆவணத்தில் மட்டும் ஏதாவது ஒரு மருந்தாளுநரின் பெயரைக்  காட்டிவிட்டு வியாபாரிகள்தான் மருந்தகங்களை நடத்துகிறார்கள். மருந்தகங்களில் மருந்தாளுநர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான், போலி மருந்துகளை ஒழிப்பதுபற்றி நாம் யோசிக்கவே முடியும்.

தொடர் ஆய்வு

மருந்து மாத்திரைகள் வாங்கும்போது அவசியம் ரசீது கொடுக்கப்பட வேண்டும். அந்த ரசீதில் மருந்து காலாவதியாகும் தேதி மற்றும் பேட்ச் நம்பர் போன்றவை கட்டாயம் இடம்பெற வேண்டும். நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களுக்கு என்று ஒரு மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி இருப்பார். இவர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவ்வப்போது கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை போலி மருந்துபற்றிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இப்படிப் பன்முக நடவடிக்கைகள் எடுத்தால்தான், போலி மருந்துகள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

அதே போல, மருந்து நிறுவனங்களும் மருந்துகள் தயாரிப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று லாப நோக்கோடு மட்டும் செயல்படக் கூடாது. போலி, கலப்படம் மற்றும் காலாவதியான மருந்துகளின் புழக்கத்தைத் தடுப்பதில் மருந்து  நிறுவனங்களுக்கு அதிகப் பொறுப்பு உள்ளது. தங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கைவைத்து மருந்து வாங்கும் நோயாளியின் நலனில் மருந்து நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும். அடிக்கடி ஆய்வுகள் நடத்தி, போலிகள் இருப்பது தெரியவந்தால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் மருந்து பாக்கெட் மீது புதுமையான டிசைன்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். மேலும் பார் கோடு, ரேடியோ ஃபிரீக்வன்ஸி ஐடென்டிபிகேஷன் சிப் போன்றவற்றைப் பொருத்தி போலிகளை ஒழிக்கலாம். தற்போது இந்த ரேடியோ ஃப்ரீக்வன்ஸி ஐடென்டிபிகேஷன் சிப்களைப் பொருத்துவது கட்டாயம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நெருக்கடி கொடுத்துவருகிறது. அந்த நிலை இங்கும் வர வேண்டும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism