Published:Updated:

காய்ச்சலில் கலங்கிய கிராமம்.. கை கொடுத்த மருத்துவக் குழு!

காய்ச்சலில் கலங்கிய கிராமம்.. கை கொடுத்த மருத்துவக் குழு!

காய்ச்சலில் கலங்கிய கிராமம்.. கை கொடுத்த மருத்துவக் குழு!

காய்ச்சலில் கலங்கிய கிராமம்.. கை கொடுத்த மருத்துவக் குழு!

Published:Updated:
காய்ச்சலில் கலங்கிய கிராமம்.. கை கொடுத்த மருத்துவக் குழு!
##~##

டலூர் மாவட்டத்தையே நிலைகுலைத்துப் போட்ட தானே புயல், எல்லாவற்றையும் 'முடித்துவிட்டு’க் கரையேறிய பகுதி தியாகவல்லி. கரையேறிய சுவடுகள் காயங்களாகக் கிழித்துப் போட்டிருக்கிறது தியாகவல்லி கிராமத்தை. ஏற்கெனவே வாழ்வாதாரம் அழிந்து வருமானத்துக்கும் வழியின்றி அவதிப்படும் இந்தப் பகுதிவாசிகளை வியாதிகளும் விட்டுவைக்கவில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தியாகவல்லி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உங்களின் மருத்துவ முகாம் நடத்தினால் பேருதவியாக இருக்கும்'' எனத் தொடர்ச்சியாக நீண்ட கோரிக்கைகளின் அவசியம் அந்தப் பகுதி மக்களைப் பார்த்தபோது புரிந்தது. ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லை. சாதாரணக் காய்ச்சல் என்றால்கூட ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல 10 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சோபுரம் கிராமத்துக்கோ, அல்லது 15 கி.மீ. தொலைவில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதிக்கோதான் செல்ல வேண்டும். ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் இருந்து திருச்சோபுரம் மற்றும் குறிஞ்சிப்பாடிக்குச் சென்றுவர சரியான பஸ் வசதியும் இல்லை. இதனால், இந்தக் கிராம மக்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதும் குறைவு. ஆண்டார்முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த பலரும் காய்ச்சலால் அவதிப்பட, ஊராட்சித் தலைவர் செங்குட்டுவன் வாடகை வேன் அமர்த்திப் பாதிக்கப்பட்டவர்களைக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துப்போய் இருக்கிறார்.

ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கடந்த மே 12-ம் தேதி நாம் மருத்துவ முகாமைத் தொடங்கியபோது, அந்தப் பகுதி மக்களின் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தைச் (பிம்ஸ்) சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று கிராம மக்களுக்குச் சிகிச்சை அளித்தனர். ஆண்டார்முள்ளிப்பள்ளம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலரும் காலை 7 மணி முதலே முகாம் நடக்கும் இடத்துக்கு வர ஆரம்பித்துவிட்டனர். முதலில், அந்தப் பகுதியில் பலரையும் படுக்கையில் தள்ளிய காய்ச்சலுக்கு என்ன காரணம் என்பதையும் காய்ச்சலைக் குணமாக்கும் வழிகளையும் டாக்டர்கள் குழு அந்தப் பகுதி மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொன்னது.

காய்ச்சலில் கலங்கிய கிராமம்.. கை கொடுத்த மருத்துவக் குழு!

'முந்திரி எல்லாம் முறிஞ்சுபோச்சு. வருமானத்துக்கு வழி இல்லை. ஊர்லயும் நோய்ங்க பரவிட்டு இருக்கு. ஆஸ்பத்திரிக்குப் போக வழியில்லாம கஷாயம்வெச்சிக் குடிச்சுக்கிட்டு இருக்கோம். இந்த நேரத்துல எங்க கிராமத்துக்கு வந்து ஒவ்வொருத்தரையும் பொறுமையா சோதிச்சுப் பார்த்து, மருந்து மாத்திரை கொடுக்குறீங்களே... நீங்க நல்லா இருக்கணும்'' என்றபடி நம் கைகளைப் பிடித்து கண்களில் ஒத்திக்கொண்டார் மூதாட்டி ஒருவர்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்த காவேரிப் பாட்டி, ''கொஞ்ச நாளா சரியாச் சாப்பிடவே முடியலை. கால் வலி, கால் வீக்கம், பாதத்தில் எரிச்சல்னு ஒரே அவஸ்தையா இருக்கு. இப்படிக் கஷ்டப்பட்டு வாழறதைவிட ஒரேயடியாச் செத்துப்போயிடலாம்னா அதுக்கும் முடியலை. இங்கே பார்த்த டாக்டர், உங்களுக்கு கிட்னில பிரச்னை இருக்குன்னு சொன்னாரு. ஆஸ்பத்திரிக்கு வாங்க, சரி பண்ணிடலாம்னு சொல்லியிருக்காங்க...'' என்று நம்பிக்கையோடு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

முகாமில் கிட்டத்தட்ட 600 பேர் இலவச மருத்துவச் சிகிச்சை பெற்றனர். பொது மருத்துவம், கண், இதயம், எலும்பு, தோல், காது - மூக்கு - தொண்டை, குழந்தைகள் நலம், மகளிர் மற்றும் மகப்பேறு, மனநலம் ஆகிய துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர். மேல்சிகிச்சைக்காக 136 பேருக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இது தவிர ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனைகள் ஆகியனவும் செய்யப்பட்டன. சென்னை மடிப்பாக்கம் பிரபா மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் ஆர்.நெடுஞ்செழியன், என்.பிரபாகரன் ஆகியோர் முகாமில் பங்கேற்ற மக்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகளை அளித்து உதவினர்.

'தானே’ உண்டாக்கிய காயங்களுக்கு களிம்பு பூசும் பணியில் 'தானே துயர் துடைப்பு அணி’ தொடர்ந்து ஈடுபடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism