Published:Updated:

''பாலாஜி... பாலாஜி..''

இது நிஜமான டாக்டர்ஸ் காமெடி

''பாலாஜி... பாலாஜி..''

இது நிஜமான டாக்டர்ஸ் காமெடி

Published:Updated:
##~##

டாக்டர் : ''மருந்தை ஏன் ரோட்டுல தடவுறீங்க?'' 

நோயாளி : ''நீங்கதானே டாக்டர் சொன்னீங்க... அடிபட்ட இடத்தில் மருந்தைத் தடவணும்னு.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இப்படி டாக்டர் ஜோக்ஸ்  நிறையவே படித்துச் சிரித்திருப்போம். ஆனால், நிஜமாகவே டாக்டர் - நோயாளிகள் இடையே நடைபெறும் சில உண்மைச் சம்பவங்களில் இதைவிடவும் சுவாரசியமான நகைச்சுவை ததும்பும்.

''மறதி நோய் எப்படி எல்லாம் மனுஷனை ஆட்டிப்படைக்குது பாருங்க'' என்று சொல்ல ஆரம்பித்தார் முதியோர் நல மருத்துவரான டாக்டர் வி.எஸ். நடராஜன்.

''பாலாஜி... பாலாஜி..''

''மறதி நோயால் அவஸ்தைப்படுகிறவர் ராமகிருஷ்ணன். அவருக்கு 70 வயசாகிறது. ஒருநாள் சாயங்காலம் நாலு மணி இருக்கும். என் கிளினிக்குக்குப் பதற்றத்தோடு வந்தார். 'என் மனைவி இங்கே வந்தாளா டாக்டர்? ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் கிளம்பினோம். ஆனா, திடீர்னு காணோம்...’ என்றார். அவரோட மனைவிக்கு வயது 65 வயதுக்கு மேல். அந்த அம்மாவின் செல் நம்பரும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சொந்தம், பந்தம் என்று ராமகிருஷ்ணன் தந்த அத்தனை நம்பருக்கும் போன் செய்து விசாரித்தோம். அட்டெண்டரை அனுப்பி எல்லா இடங்களிலும் தேடச் செய்தோம். ஒரு மணி நேரம் கிளினிக்கே அல்லோலகல்லோலப்பட்டது. கடைசியாக, அந்த பெரியவரிடம், 'நானே உங்களை வீட்டில் கொண்டுவிடுகிறேன்... கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க’ என்று சொல்லிட்டு,  மற்ற பேஷன்ட்டுகள் எல்லோரையும் பார்த்து அனுப்பிய பிறகு, அவரை வீட்டில் கொண்டு விடப்போனேன். வீட்டுக்கு வெளியில் பூட்டு தொங்கியது. ஆனால், என் கார் சத்தத்தைக் கேட்டு, ஜன்னல் வழியாக அந்தம்மா எட்டிப் பார்த்தாங்க.

''பாலாஜி... பாலாஜி..''

'டாக்டர்,  காலைல 11 மணிக்கு உங்களைப் பார்க்கக் கிளம்பினோம். வீட்டை பூட்டறப்ப, ஃபேன், லைட்டு சுவிட்சை எல்லாம் ஆஃப் பண்ணிட்டேனானு ஒரு சந்தேகம். அதுக்காக நா உள்ளே போனதுகூட தெரியாம, இவர் வீட்டைப் பூட்டிட்டுப் போயிட்டாரு. இன்னிக்கு ஈ.பி மெயின்டனென்ஸ்கிறதால, வீட்டில் கரன்ட்டும் இல்லை. அஞ்சு மணி நேரமா  அவஸ்தைப்பட்டுட்டேன். என் செல்போன்ல சார்ஜும் இல்லை. யாராவது நம்மளப் பார்க்க மாட்டாங்களா... பேச மாட்டாங்களான்னு ஜன்னல்கிட்டயே நின்னுட்டிருந்தேன்’னு அழாத குறையா அந்த அம்மா சொல்ல, எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. உடனே, ராமகிருஷ்ணன், 'என்கிட்டதானே சாவி இருக்கு... நீ எப்படி உள்ள இருக்க... மண்டையைப் பிளக்கிற வெய்யில், என்ன அலைச்சல்...’ என்றவரைப் பத்திரமாகச் சேர்த்துவிட்டு 'நான் கிளம்பறேன்’னு சொன்னேன்.

உடனே, ராமகிருஷ்ணன் என்னைச் சுட்டிக்காட்டி தனது மனைவியிடம், 'ஆமா... இவரு யாரு...?’ என்றாரே பார்க்கலாம்.

கூடுமானவரைக்கும் முதியவர்கள் தனியாக வெளியில் போவது நல்லதல்ல. மறதி நோய் இருந்தால், அவர்கூடவே யாராவது இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் நடராஜன்.

'' 'பல் மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருகிற பேஷண்ட் எல்லோருமே பல்லைக் காட்டித்தானே ஆக வேண்டும்’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். ஆனால், எனது அனுபவத்தில் மருத்துவர்களாகிய நாங்களும்கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன'' என்கிறார் பல் மற்றும் முகச் சீரமைப்பு நிபுணரான டாக்டர் எஸ்.எம்.பாலாஜி.

''அந்தப் பாட்டிக்கு முகத்தில் சின்னதொரு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது. ஊசியைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார் அந்தப் பாட்டி. அதனால், 'பாலாஜி நீதான் எனக்கு ஆபரேஷன் பண்ணணும். வேற டாக்டர் யாரும் வந்தா, நான் ஆபரேஷனே பண்ணிக்க மாட்டேன். நீ என்னோடவே இரு’ என்று என் கையைப் பிடித்துக் கெஞ்சினார்.

''பாலாஜி... பாலாஜி..''

பொதுவாக, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னர் 'ப்ரீ மெடிகேஷன்’ எனப்படும் ஒருவித மருந்தின் மூலம் நோயாளியைப் பாதி மயக்க நிலைக்குக் கொண்டுசெல்வோம்.

இந்த 'ப்ரீ மெடிகேஷன்’ மருந்தைப் பாட்டிக்குக் கொடுத்த பிறகும்கூட பயத்தில், 'பாலாஜி... பாலாஜி எங்கே இருக்கே?’ என்று அனத்தியபடியே இருந்தார். ஆபரேஷன் செய்வதற்குத் தயாராக நானும் உதவியாளர்களும் மாஸ்க் உள்ளிட்ட பிரத்யேக உடைகளை அணிந்துகொண்டு தியேட்டருக்குள் நுழையவும் லேசாகக் கண் திறந்த பாட்டி 'ஏய்.... யார்றா நீங்க... முகமூடி எல்லாம் போட்டுருக்கீங்க.... பாலாஜி எங்கே?’ என்று அந்தப் பாதி மயக்க நிலையிலும் கோபமாகக் கேட்டார்.

'பாட்டி நான்தான் பாலாஜி. பயப்படாதீங்க சின்ன ஆபரேஷன்தான்’ என்று சமாதானப்படுத்தினேன். ஆனாலும், பாட்டி சமாதானம் ஆகவில்லை. கடைசியில், முகத்தில் கட்டியிருந்த மாஸ்க்கையும் தலைமுடியை மறைத்து அணிந்திருந்த தொப்பியையும் அவிழ்த்துக்காட்டி ஆறுதலாகச் சில வார்த்தைகளைப் பேசிய பிறகே சமாதானமானார். வெற்றிகரமாக ஆபரேஷனும் செய்து முடித்தோம்'' என்கிறார் பாலாஜி வெடிச் சிரிப்புடன்.

''பாலாஜி... பாலாஜி..''
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism