Published:Updated:

மெகந்தியா... வதந்தியா?

மெகந்தியா... வதந்தியா?

மெகந்தியா... வதந்தியா?

மெகந்தியா... வதந்தியா?

Published:Updated:
##~##

'மெகந்தி பயன்படுத்தியதால் மும்பை சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்துவிட்டார். அதனால், யாரும் மெகந்தி இட்டுக்கொள்ள வேண்டாம்.’ 

- எஸ்.எம்.எஸ்-ஸில் வந்த இந்தத் தகவல் இந்தியாவையே களேபரமாக்கிவிட்டது. ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட விரும்பிய இஸ்லாமியப் பெண்கள் பலரும் மெகந்தியால் தங்களை அழகுப்படுத்திக்கொண்டு இருந்த நேரம் அது. எஸ்.எம்.எஸ். பீதியில் இஸ்லாமியப் பெண்கள் பலரும் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனை நோக்கிப் படையெடுத்தது வேதனையான நிகழ்வு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மும்பையில் தொடங்கிய இந்த வதந்தி கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், கேரளம் எனத் தென் மாநிலங்களுக்கும் பரவியது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் மட்டும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் பீதி காரணமாக ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளை முற்றுகையிட்டனர். சிகிச்சைக்கு வந்தவர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் தடியடி நடத்தும் அளவுக்கு விபரீதச் சூழல்.

மெகந்தியா... வதந்தியா?
மெகந்தியா... வதந்தியா?

அழகுக்காக இட்டுக்கொள்ளப்படும் மெகந்தி உயிரையே பலிவாங்குமா? வேறு ஏதாவது தீங்கு ஏற்படுத்துமா? வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் மணிவண்ணனிடம் பேசினோம்.

''முதலில் மக்கள் ஒன்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். கை மற்றும் கால்களில் மேற்பூச்சாகப் பூசப்படும் மெகந்தியால் வாந்தி, மயக்கம், தடுமாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பே கிடையாது. தெரியாமல் வாய் வழியாக மெகந்தி வயிற்றுக்குள் போனால் மட்டும்தான் வாந்தி, மயக்கம் ஏற்படும்.

வியாபாரரீதியாக மெகந்தி கோன் தயாரிக்கும்போது மருதாணி இலையைக் காயவைத்துப் பொடியாக்கி பாராபெனிலீன்டைஅமின் என்ற டை உள்பட சில பவுடர்களையும் கலப்படம் செய்கிறார்கள். இதனால், மருதாணியின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த மெகந்தி கோனைப் பயன்படுத்தும்போது சிவப்பு நிறம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே தோலில் படியும். இதனால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை ஆங்கிலத்தில் 'கான்டாக்ட் டெர்மடைடிஸ்’ (சிஷீஸீtணீநீt பீமீக்ஷீனீணீtவீtவீs) என்று சொல்கிறோம். இதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். கையில் மெகந்தியைப் பூசியவுடன் உடனடியாக அரிப்பு ஏற்படுத்தினால் அது 'இரிடன்ட் டெர்மடைடிஸ்’ (மிக்ஷீக்ஷீவீtணீஸீt ஞிமீக்ஷீனீணீtவீtவீs). மெகந்தி பூசிய 48 மணி முதல் 72 மணி நேரத்துக்குள் தோலில் அரிப்பு ஏற்பட்டால் அது, 'அலர்ஜிக் டெர்மடைடிஸ்’ (கிறீறீமீக்ஷீரீவீநீ ஞிமீக்ஷீனீணீtவீtவீs). ஆனால், எந்த வகை டெர்மடைடிஸ் ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பே கிடையாது. சமீபத்தில் பரவிய வதந்திகூட, தரமற்ற மெகந்திகளால் ஏற்படும் தோல் ஒவ்வாமைதான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், இயற்கையான மருதாணி இலைகளை அரைத்துப் பயன்படுத்தலாம். இயற்கையான இந்த மருதாணிதான் தோல் மற்றும் நகங்களுக்கும் மிகவும் நல்லது!'' என்கிறார் விளக்கமாக.

மெகந்தியா... வதந்தியா?

ரசாயனம் கலக்கப்பட்டு ரெடிமேடாக விற்பனை செய்யப்படும் மெகந்தி கோன்களைவிட மருதாணி இலைகளைப் பறித்துக் காயவைத்து அரைத்து, கிராமப்புறங்களில் பெண்கள் இட்டுக்கொள்ளும் பாணியே சிறந்தது என்று சில இதழ்களுக்கு முன்பு விரிவாக எழுதி இருந்தோம். அதுதான் உண்மை!

 வதந்தியால் அரிப்பு ஏற்படுவது ஏன்?

தினமும் ஆயிரக்கணக்கானோர் மெகந்தி கோன்களை வாங்கி மருதாணி வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திடீரென வதந்தி பரவியதும் ஏன் எல்லோருக்கும் அரிப்பு ஏற்பட்டது போன்ற உணர்வு வந்தது என்று மனநல மருத்துவர் மங்களாவிடம் கேட்டோம். ''மொத்தமாக மக்கள் அனைவரும் ஒரு புரளியை நம்பி ஓடி இருக்கிறார்கள். இதைப் பெருந்திரள் மனநோய் (மாஸ் ஹிஸ்டீரியா) என்று கூறலாம். இதுபோன்று புரளிகளை நம்பும்போது நமக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றம் ஏற்படுகிறது. அப்போதுதான் இதுபோன்ற அரிப்பு வந்த உணர்வு ஏற்படுகிறது. இதற்காக இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று இல்லை. தன் உயிருக்கு ஆபத்து என்ற உணர்வு ஏற்படும்போது இத்தகைய அறிகுறிகள் ஏற்படுவது வாடிக்கைதான்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism