Published:Updated:

மழையைக் கண்டு மலைக்கலாமா?

ஆரோக்கியம் காக்க அவசிய யோசனைகள்!

மழையைக் கண்டு மலைக்கலாமா?

ஆரோக்கியம் காக்க அவசிய யோசனைகள்!

Published:Updated:
##~##

ழையின் மகத்துவத்தை ஈரம் சொட்டச் சொட்ட ரசிப்பது கவிஞர்களுக்கு ஓ.கே. ஆனால், உடலையும் மனதையும் சிலீரிடவைக்கும் மழை, பல நேரங்களில் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துவிடும். சாக்கடையோடு கலந்து சாலைகளில் ஓடும் மழைநீர், வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீரில் மாநாடு நடத்தும் கொசுக்கூட்டம்  என மழைக்காலத்தில் நோய்களைத் தோற்றுவிப்பதற்கான காரணிகள் எக்கச்சக்கம். சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மழைக்காலத்தில் நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார்கள் பொது மருத்துவர் சுதாகரும் சித்த மருத்துவர் ஏ. ராஜராஜேஸ்வரியும். 

என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழைக்காலத்தில் தலையில் நீர் கோத்துக்கொள்வதால் தலை பாரம், ஒற்றைத் தலைவலி உண்டாகலாம். மழைக்காலத்தில் சூரியனின் வெப்பம் குறைவாக இருப்பதால் காற்றில் நுண்கிருமிகளின் பெருக்கம் அதிகமாக இருக்கும். நாம் சுவாசிக்கும்போது இவை  உடலுக்குள் சென்று தொண்டைக் கரகரப்பு, இருமல், சளி, நிமோனியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். சில சமயங்களில் தலையில் பூஞ்சைக்காளான் பாதிப்பும் ஏற்படலாம். சைனஸ் தொந்தரவும் ஏற்படலாம்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

கழிவுநீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டாலோ, அளவுக்கு அதிகமாக மழை பெய்தாலோ, கழிவுநீரும் மழைநீரும் ஒன்றாகக் கலக்க வாய்ப்பு உண்டு. இதனால், வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகளும்

மழையைக் கண்டு மலைக்கலாமா?

அதிகம் பரவும். வடியாமல் தேங்கிக் கிடக்கும் மழைநீரில்தான் அதிகமாகக் கொசுக்கள் உற்பத்தி ஆகும். இவற்றால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் உண்டாகலாம். லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் மழைநேரத்தில் அதிகமாகப் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.

எப்படித் தவிர்ப்பது?

எந்தக் காலமாக இருந்தாலும் தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டிக் குடிக்க வேண்டும். 'மினரல் வாட்டர் சுத்தமாகத்தான் இருக்கும்’ என்ற எண்ணத்தில், பலரும் கேன்களில் வாங்குகிற தண்ணீரைக் காய்ச்சாமலேயே குடிக்கிறார்கள். அந்தத் தண்ணீர் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது, சரியான முறையில் கேன்களை சுத்தம் செய்தார்களா என்பன போன்ற விபரங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. அதனால் தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டிக் குடிப்பதுதான் நல்லது. மழைக்காலத்தில் அதிகமாக வியர்க்காது என்பதால் குடிக்கும் தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொள்வது தவறு. வழக்கமாக எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அதே அளவு தண்ணீரை மழைக் காலத்திலும் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.

தினமும் வீட்டைவிட்டு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள், வீட்டில் இருந்து உணவையும் தண்ணீரையும் எடுத்துச் செல்வது நல்லது. கழிவு நீரோடு மழைநீரும் சேர்ந்து சாலைகளில் ஓடுவதால், வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் வெந்நீரால் கால்களை நன்கு கழுவி, ஈரம் போகத் துடைக்க வேண்டும். அப்போதுதான் கிருமித்தொற்று ஏற்படாது.

தோல் செருப்புகள் தண்ணீரில் ஊறி, கால்களை இறுக்கலாம். எனவே, ரப்பர் செருப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.  வெயில் காலமோ அல்லது மழைக் காலமோ, ஆடைகளைத் துவைத்து, நன்றாகக் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, உள்ளாடைகளைப் பொருத்தவரை நன்கு காய்ந்தவற்றையே பயன்படுத்த வேண்டும்.

மழைக்காலத்தில் திறந்த பாத்திரங்களில் இருக்கும் உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாகக் கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பாதாம், சர்க்கரையில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளில் காற்றில் உள்ள பூஞ்சைக்காளான் படிவதற்கு வாய்ப்பு உள்ளது. இதைக் கவனிக்காமல் சாப்பிடும்போது மயக்கம், வாந்தி - பேதி போன்ற கோளாறுகள் ஏற்படும். ஈரத் துணிகளையோ, சரியாக உலராத உள்ளாடைகளையோ அணியக்கூடாது. அப்படிப் பயன்படுத்தும்போது பூஞ்சைத் தொற்று ஏற்படலாம்.

மழைக் காலத்தில் நம் உடலில் இயற்கையாகவே செரிமான சக்தி குறைவாக இருக்கும். ஆகவே, காரமான உணவு, அதிக அளவில் எண்ணெய் கலந்த உணவு, அதிக மசாலா கலந்த உணவுகளைச் சாப்பிடும்போது செரிமானப் பிரச்னை ஏற்படும். எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சத்துமிக்க உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

செலவில்லா மருத்துவம்

மழைக்காலத்தில் அடிக்கடி வரும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கு நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிதில் நிவாரணம் பெற முடியும்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

 சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட இருமல், சளி, மூக்கடைப்பு, காய்ச்சல் குணமாகும்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

 இரண்டு ஆடாதொடை இலையுடன், எட்டு மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டையைக் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட, தொண்டைக் கரகரப்பு சரியாகும்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

திப்பிலி, ஓமம், மஞ்சள், மிளகு - இந்த நான்கையும் சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி, வேப்ப எண்ணெயில் நனைக்க வேண்டும். இந்தத் துணியைப் பற்றவைத்தால் புகை வரும். அந்தப் புகையை - ஆவிபிடிப்பதுபோலப் போர்வையை நன்றாக மூடிக்கொண்டு - பிடித்தால் மூக்கடைப்பு, தலைபாரம் குணமாகும்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து, வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட, இருமல் குணப்படும்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

ஒரு துண்டு சித்தரத்தையை வாயில் போட்டு மென்று சாறைக் குடிக்க இருமல், சளி, தொண்டைக்கட்டு சரியாகும்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

 சித்தரத்தையை நெருப்பில் சுட்டுத் தேனில் உரச வேண்டும். பிறகு அதைத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

துளசியை இடித்துச் சாறு பிழிந்து குடிக்க சளிப் பிரச்னை தீரும்.

மழையைக் கண்டு மலைக்கலாமா?

 திப்பிலிப் பொடி, வெற்றிலைச் சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து குடிக்க, இருமல், சளி, காய்ச்சல் குணப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism