Published:Updated:

வயதானவர்களுக்கு வசதியான வீடு!

வயதானவர்களுக்கு வசதியான வீடு!

வயதானவர்களுக்கு வசதியான வீடு!

வயதானவர்களுக்கு வசதியான வீடு!

Published:Updated:
வயதானவர்களுக்கு வசதியான வீடு!
##~##

ஜானகிராமன், ஓய்வுபெற்ற அரசு அலுவலர். அவருடைய மனைவி, பாப்பம்மாள். சமீபத்தில், பக்கத்துத் தெருவில் உள்ள நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றார் ஜானகிராமன். வீடு திரும்பி அழைப்பு மணியை அழுத்தியவர், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கலவரமடைந்து, அருகில் உள்ளவர்களை உதவிக்குக் கூப்பிட்டு இருக்கிறார். பூட்டை உடைத்து உள்ளே சென்றால், பாப்பம்மாளைக் காணவில்லை. குளியல் அறையில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டு, அங்கு ஓடினால் கதவு உள்பக்கமாகப் பூட்டி இருக்கிறது. என்ன சத்தம் போட்டு அழைத்தும் பிரயோஜனம் இல்லை. விபரீதம் உணர்ந்தவர்கள் உடனடியாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கே மயங்கிய நிலையில் கீழே கிடந்திருக்கிறார் பாப்பம்மாள். அவசர அவசரமாக ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்குக் கொண்டுபோவதற்குள் ஒருவழியாகிவிட்டார் ஜானகிராமன். விஷயம் இதுதான்... பாத்ரூமுக்குச் சென்ற பாப்பம்மாள் கால் வழுக்கிக் கீழே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வயதானவர்களுக்கு வசதியான வீடு!

விழுந்திருக்கிறார். விழுந்த அதிர்ச்சியில் அப்படியே மயக்கம் அடைந்திருக்கிறார்.

வயதானவர்கள் வசிக்கும் பெரும்பாலான வீடுகளில், பாசி படிந்த குளியல் அறை, பிடிமானம் இல்லாத செங்குத்தான படிக்கட்டுகள், கால்களை இடறும் தரைவிரிப்பு போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. கணவர் உரிய நேரத்தில் வந்துவிட்டதால், பாப்பம்மாள் காப்பாற்றப்பட்டார். துணை இல்லாமல் எத்தனையோ முதியவர்கள் தனியாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு இதுபோல் ஏதாவது ஏற்பட்டால், என்னவாகும்? முதியவர்கள் வசிக்கும் வீடுகள் எப்படி இருந்தால், இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க முடியும்? இப்படிப் பல கேள்விகளோடு முதியோர் சிறப்பு மருத்துவரான வி.எஸ். நடராஜனைச் சந்தித்தோம்.

'முதல் விஷயம், முதியவர்கள் வசிக்கும் வீடு தனி வீடாக இருக்கக் கூடாது. பாதுகாப்பின்மை, பராமரிப்புச் சிரமங்கள் போன்ற சிக்கல்களோடு, அவசரத்துக்கு அருகில் உள்ளவர்களை அழைக்கக்கூட முடியாது. இதுவே அடுக்கு மாடிக் குடியிருப்பாக இருந்தால், யாராவது ஒருவர் உதவிக்கு வரலாம். அடுக்கு மாடிக் குடியிருப்பாக இருந்தாலும் தரைத் தளம் மற்றும் முதல் தளமே சிறந்தது.

வயதானவர்களுக்கு வசதியான வீடு!

வீடு விசாலமாகவும் நிறைய அறைகளைக்கொண்டதாகவும் இருக்கும்பட்சத்தில், எல்லாவற்றையும் அடிக்கடி சுத்தம் செய்ய முடியாது. அப்படிச் சுத்தம் செய்யாதபோது தூசிகள் தங்கி, நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தேவைக்கு அதிகமான அறைகள் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்விட்ச் போர்டு கீழே இருந்தால் குனிந்து சுவிட்சைப் போடுவதும், ஆஃப் செய்வதும் கஷ்டம். அதேபோல் உயரத்தில் இருக்கும்போது அண்ணாந்து பார்த்தால், மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே, ஸ்விட்ச்  போர்டுகளை மார்பு அளவு உயரத்தில் இருக்கும்படி அமைக்க வேண்டும். சிலர், மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறேன் என்று குறைவான வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை மட்டுமே பயன்படுத்துவார்கள். இதனால், தரையில் என்ன கிடக்கிறது என்று தெரியாமல், எதன் மீதாவது மோதிக்கொள்வார்கள். தற்போது குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படுகிற சி.எஃப்.எல். விளக்குகள் கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

வீட்டின் முன் பக்கமும் பின் பக்கமும் மரக் கதவுகளோடு சேர்ந்து இரும்புக் கதவுகளும் இருக்க வேண்டும். யாராவது அழைப்பு மணி அடித்தால், மரக் கதவைத் திறந்து இரும்புக் கதவு வழியாகப்

வயதானவர்களுக்கு வசதியான வீடு!

பார்த்து, தெரிந்தவர்கள் என்றால் மட்டுமே, வீட்டுக்குள் கூப்பிடலாம். இல்லை என்றால், அப்படியே பேசி அனுப்பிவிடலாம். நகரங்களைப் பொருத்த வரை, தூசி, புகை, இரைச்சல் அதிகம். இதனால் முதியவர்களின் மன அமைதி பாதிக்கப்படலாம். எனவே, ஓரளவு ஒதுக்குப்புறமான இடங்களாகப் பார்த்துக் குடி«யறுவது நல்லது. ஆனால், அது பாதுகாப்பான பகுதியாகவும் அருகில் மருத்துவமனைகள் உள்ள இடமாகவும் இருக்க வேண்டும்.

வீட்டுக்குள் உள்ள சூழலைப் பொருத்த அளவில், வீடு முழுவதும் அதிகமான ஃபர்னிச்சர்களை வாங்கிப்போட்டு, அதில் இடித்துக்கொள்பவர்கள்தான் அதிகம். தேவைக்கு ஏற்ப ஒன்றிரண்டு ஃபர்னிச்சர்களை மட்டும் வைத்துக்கொண்டால் போதும். மருந்து, மாத்திரைகளை ஆங்காங்கே வைக்காமல், ஒரு டப்பாவில் போட்டுப் படுக்கைக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத்துக்கு உதவும் (அருகில் உள்ள மருத்துவர், மருத்துவமனை, ஆட்டோ டிரைவர், ஆம்புலன்ஸ்) தொலைபேசி எண்களை ஓர் அட்டையில் எழுதி வைத்துக்கொள்ளலாம்.

தற்போது வாசல் தொடங்கி வீடு, குளியல் அறை என எல்லா இடங்களிலுமே டைல்ஸ் போடுகிறார்கள். டைல்ஸின் மீது தண்ணீர் கொட்டியிருந்தால், பார்க்கும்போது தெரியாது. இதனால் வழுக்கி விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, வழவழப்பான டைல்ஸைத் தவிர்த்துவிட்டு, சொரசொரப்பான டைல்ஸைப் பயன்படுத்தலாம். அழகைவிடப் பாதுகாப்புதானே முக்கியம்!'' என்கிறார் முத்தாய்ப்பாக.

புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைவருமே தங்களுடைய வசதியைத்தான் பார்க்கிறார்களே தவிர, தங்களுடைய வீட்டில் இருக்கும் பெரியவர்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. அதனால் வீடு கட்டும்போதே வீட்டில் இருக்கும் பெரியவர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு ஸ்பெஷலாக வடிவமைக்க வேண்டும்.

சரி... ஒருவேளை வாடகை வீடாக இருந்தால் என்ன செய்வது?

முதலாவது, வாடகைக்கு வீடு பார்க்கும்போதே முதியவர்களுக்குத் தகுந்த வசதிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இரண்டாவது, வீட்டு உரிமையாளர் அனுமதியோடு சிற்சில மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். 'வாடகை வீடு சொந்த வீடு இரண்டிலும் என்னென்ன வசதிகளைச் செய்துகொள்ள முடியும்’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார் கட்டடக் கலை நிபுணரான ராஜு.

வயதானவர்களுக்கு வசதியான வீடு!

'வயதானவர்கள் அடிக்கடி கழிப்பறைக்குப் போக வேண்டி இருக்கும். எனவே வயதானவர்கள் தங்கி இருக்கும் அறையிலேயே கழிப்பறை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உட்கார, எழ வெஸ்டர்ன் டைப் டாய்லெட்தான் வயோதிகர்களுக்கு ஏற்றது. அப்படியும் சிலர் டாய்லெட்டில் உட்கார்ந்த பிறகு எழ சிரமப்படுவார்கள். எனவே, கைகளை ஊன்றி எழுந்திருக்க டாய்லெட் சுவரில் இரு புறமும் துருப்பிடிக்காத - எடை தாங்கக்கூடிய எவர்சில்வர் குழாய்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

படிகளின் உயரம் ஆறு அங்குலம்தான் இருக்க வேண்டும். வீட்டுக்குள் ஸ்ட்ரெச்சர், வீல்சேர் போன்றவற்றை எளிதாகக் கொண்டுசென்று வரும்படி இருக்க வேண்டியது அவசியம். முன்பெல்லாம் கதவு உள்ள நிலைப்படிச் சட்டத்தின் கீழ்ப் பகுதியும் வெளியில் தெரியும்படி அமைத்திருப்பார்கள். அப்படி அமைத்தால், ஸ்ட்ரெச்சர், வீல் சேர் போன்றவற்றை ஓர் அறையில் இருந்து மற்றோர் அறைக்குக் கொண்டுசெல்ல முடியாது. நிலைப்படிச் சட்டத்தின் கீழ்ப் பகுதி வெளியில் தெரியாதவாறு தரையோடு தரையாக இருக்க வேண்டும்.

கதவில் உள்ள பூட்டு ஒரே திறப்பில் திறப்பதாக இருந்தால்தான், திறப்பதற்கு எளிதாக இருக்கும். பெரியவர்களைப் பொருத்த வரையில் அடிக்கடி ஏற்படும் சிக்கல், உள்பக்கமாகத் தாழிட்டுக்கொண்டு திறக்க முடியாமல் சிரமப்படுவதுதான். தற்போது இரண்டு பக்கமும் திறக்கக்கூடிய பூட்டுகள் வந்துவிட்டன. அதை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். படுக்கையின் உயரம் குறைவாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, காற்றும் வெளிச்சமும் வீட்டுக்குள் நன்றாக வரும்படி இருக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய  ஆரோக்கியத்துக்கு ஏற்றது!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism