பிரீமியம் ஸ்டோரி

டில்லியில் ஒரு நல்ல செய்தி அடிபடுகிறது...

விரைவில் எல்லா மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான சிகிச்சை, ஒரே மாதிரியான கட்டணம் என்கிற இலக்கை நோக்கி இந்தியா நகரலாம். அதாவது, நீங்கள் சர்க்கரை நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு அரசு வரையறுக்கும் பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்துகளை மட்டுமே மருத்துவமனைகள் இனிமேல் பரிந்துரைக்கும். இதற்கான கட்டணமும் மருத்துவமனைகளின் தர வரிசைக்கேற்பப் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். தேவையற்ற பரிசோதனைகள், மருந்துகள், சிகிச்சைகளை உங்கள் மீது மருத்துவமனைகள் திணிக்க முடியாது.

என்ன..? நம்ப முடியாமல் உங்களையே நீங்கள் கிள்ளிப் பார்க்கிறீர்களா? கடந்த வாரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதார சேவைத் தலைமை இயக்குநர் ஜகதீஷ் பிரசாத், இந்தத் தகவலைச் சொன்னபோது எல்லோருக்குமே ஆச்சர்யம். முதல் கட்டமாக, நாடு முழுவதும் எல்லா மருத்துவமனைகளும் தங்களுடைய கட்டண விவரத்தை வெளிப்படையாக அறிவிப்புப் பலகையில் குறிப்பிட்டுவைக்கும் நடைமுறையைக் கொண்டுவரவும் துரிதமாகிவிட்டார் ஜகதீஷ் பிரசாத்.

ஒரே கட்டணம்!

இந்தச் செய்திகள் எல்லாம் அப்படியே நடைமுறைக்கு வந்தால், மருத்துவத் துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்  பெரிய அளவில் உதவும்.

பெருநகரங்களில் மருத்துவத் தேவைக்குக் காப்பீட்டு நிறுவனங்களை நாடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்தச் சூழலில், இந்திய மருத்துவமனைகள் தங்கள் விருப்பம்போல கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன காப்பீட்டு நிறுவனங்கள். சில ஆண்டுகளுக்கு முன்,

ஒரே கட்டணம்!

நாட்டின் பல முக்கிய நகரங்களில், பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க வகை செய்யும் காப்பீட்டுத் திட்டங்களை (கேஷ்லெஸ் மெடி க்ளைம்) 18 பெரிய காப்பீட்டு நிறுவனங்கள் விலக்கிக்கொண்டன. அப்போதே இதுகுறித்து அரசு கொள்கை வகுக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. தொடர்ந்து, மருத்துவமனைகள் மீது காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வந்ததன் தொடர்ச்சியாக இப்படி ஒரு முடிவை நோக்கி இந்திய அரசு நகர்ந்து இருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள்.

அரசின் கரிசனத்துக்குத் தனியார் மருத்துவமனைகள் - காப்பீட்டு நிறுவனங்கள் பனிப் போர் காரணமாக இருக்கலாம். ஆனால், நெல்லுக்குப் பாயும் தண்ணீரால் புல்லும் கொஞ்சம் பயன் அடைவதுபோல, நோயாளிகளுக்கும் இதனால் பலன் உண்டு.

''இனி, 'காச நோயைக் கண்டறிய எலிசா பரிசோதனை செய்து வா’ என்றோ, தசைப் பிடிப்பின் காரணமாக நெஞ்சு வலி என்று செல்லும் நோயாளியை, 'ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து வா’ என்றோ மருத்துவமனைகள் தேவை இல்லாத பரிசோதனைகளைச் செய்ய வற்புறுத்த முடியாது.

ஒரே கட்டணம்!

200 மட்டுமே ஆகும் ஸ்கேன் பரிசோதனை ஒன்றுக்கு

ஒரே கட்டணம்!

800ஐ பரிசோதனை மையங்கள் பிடுங்க முடியாது. மருத்துவர்களை மாதம் இத்தனை பேரை அறுவைசிகிச்சைக்குப் பரிந்துரை செய்; இவ்வளவு பேரை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நோக்கித் தள்ளு என்று அவர்களுக்கு மாதாந்திர இலக்கு நிர்ணயிக்கும் பல மருத்துவமனை முதலாளிகளுக்கு இந்த முறை ஒரு பேரிடியாக அமையும். மக்கள் மத்தியிலும் இந்தந்த நோய்களுக்கு இவ்வளவுதான் செலவாகும்; இந்தந்தப் பரிசோதனைகள் போதுமானது என்ற விழிப்பு உணர்வு வரும்.'' என்கிறார் மருத்துவரும் பொது சுகாதாரத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவருமான   ச.மருதுதுரை.

நல்லது. நடக்கட்டும்!

- சமஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு