Published:Updated:

விடுதிக்கு விடுதி வாசப்படி

விடுதிக்கு விடுதி வாசப்படி

விடுதிக்கு விடுதி வாசப்படி

விடுதிக்கு விடுதி வாசப்படி

Published:Updated:
##~##

''அம்மா, இந்த ஹாஸ்டல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒரு வாரத்திலேயே இங்க எல்லாரும் என் ஃப்ரெண்ட்ஸாயிட்டாங்க. அதனால, வேலைக்குப் போற சிரமமோ, நேரமோ தெரியலை. ஆனா, திடீர்னு என் உடம்பு முழுக்க அரிக்குதும்மா. சிவப்பு சிவப்பா தடிச்சிருக்கு...''- புதிய ஹாஸ்டலில் தங்கி போனில் பேசிய மகள் ப்ரியா அரிப்புப் பிரச்னையைச் சொன்னபோது கமலாவுக்கு அதிர்ச்சி. கைவைத்தியமாகச் சில குறிப்புகளைச் சொன்னாள் அந்தத் தாய். ஆனால், அடுத்த சில நாட்களில் பிரச்னை தீவிரமானதே தவிர, குறையவில்லை. நான்கு நாட்கள் ஆனது. ஹாஸ்டலில் இருந்து போன். பேசியது மகள் அல்ல. அவளுடன் அறையில் தங்கி இருக்கும் மாணவி. ''அம்மா ப்ரியாவால எழுந்திருக்கவே முடியலைம்மா. கடுமையான காய்ச்சல் வேற'' என்று அவள் சொன்னபோது கமலா உடைந்து போனாள். ஊருக்குப் போய் விடுதியில் பார்த்தபோது ப்ரியாவுக்குக் கடுமையான தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இத்தனைக்கும் ரொம்பவே சுத்தம் பார்ப்பவள் ப்ரியா. பின்னர் ஏன் இப்படி? சுருக்கமான பதில்... விடுதி தந்த பரிசு!

விடுதிக்கு விடுதி வாசப்படி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலைக்காகச் சொந்த ஊரில் இருந்து நகரங்களைத் தேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நகரங்களில் பட்டுக் கம்பளம் விரிக்காத குறையாக, விடுதிகளின் வெளித்தோற்றம் கவர்ந்திழுத்தாலும் உள்ளே போதிய வசதிகள் இருப்பது இல்லை. அப்படி முழு வசதிகளும் உள்ள விடுதிகள் அதற்குக் கேட்கும் விலை பலருக்குக் கட்டுப்படியாவது இல்லை. எனில், விடுதிச் சூழலை எப்படி நமக்கேற்ற வகையில் சுகாதாரமானச் சூழலாக்கிக்கொள்வது? மதுரை பொது மருத்துவர் நளினி அருள், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சுமதி, 'ஸ்வாகதம்’ பெண்கள் விடுதியின் நிர்வாகி கிருத்திகா ஆகியோர் அலசுகின்றனர்.

விடுதியைப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்!

ஒரு விடுதியில் என்ன வசதிகள் இருக்கிறதோ, இல்லையோ... உங்களுக்கு என்று அறையில் தனியாக கழிப்பறை இருக்கிறதா என்று முதலில் கவனியுங்கள். கழிப்பறைகள், குளியல் அறைகளில் தொடங்கி சமையல் அறை வரை எல்லா இடங்களிலும் சுத்தம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். கழிவு நீர் கலக்காத சுகாதாரமான தண்ணீர் விநியோகம் இருக்கிறதா என்பது அடுத்து முக்கியத்துவம் அளிக்க வேண்டிய விஷயம். கட்டாயம் அறையில் ஒரு ஜன்னலாவது இருக்க வேண்டும். போதுமான வெளிச்சமும் காற்றோட்டமும் இருக்கும்படி இருக்க வேண்டும்!

பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள்!

விடுதிக்கு விடுதி வாசப்படி

விடுதியில் காவலாளி, தீ அணைப்புக் கட்டுமானம், முதலுதவிக் கருவிகள், மருத்துவர்களின் தொடர்பு எண்கள் இவை எல்லாம் இருப்பது நலம். அப்படி இல்லையென்றால், விடுதிக் காப்பாளரிடம் பேசி இந்த விஷயங்களை நீங்களே உருவாக்குங்கள்.

விடுதி... இன்னொரு வீடு!

விடுதி என்பது இன்னொரு வீடுதான். ஆனால், நாம் எந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக அதைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய புத்திசாலித்தனம் இருக்கிறது. விடுதிக்கு வந்த புதிதில் அன்பாய்ப் பேசவோ, அக்கறையாய்க் கவனிக்கவோ யாரும் இல்லையே என்ற தனிமையில் முடங்கிப் போகாதீர்கள். அன்பான பேச்சும், பழகும் விதமுமே நல்ல நட்பை  தேடிக் கொடுக்கும். சமைக்கும் ஆயா, விடுதி அறையைச் சுத்தப்படுத்தும் அம்மா என்று நீங்கள் பாசத்தோடு பழகும் ஒவ்வொருவரும் உங்கள் மீது அக்கறை காட்டலாம். நிறைய நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். நல்லது - கெட்டது, கஷ்ட - நஷ்டங்களின்போது கூடவே இருக்கும் நட்புதான் கை கொடுக்கும். ஆனால், உங்களுடைய சகல வாழ்க்கையையும் உடன் இருப்பவர்களிடம் திறந்துக் காட்டாதீர்கள். எதற்கும் ஓர் எல்லை உண்டு என்ற எச்சரிக்கைக் கோடு வகுத்துப் பழகுங்கள்!

சுத்தம்... தனித்துவம்!

நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப அறை சிறியதாக இருந்தாலும், அதையே சுகாதாரமாக மாற்றிக்கொள்வதன் மூலம்... வியாதிகளுக்கு நோ சொல்லலாம். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீரை திறந்துவிடும் விடுதியாக இருந்தால், தண்ணீர் வரும் நேரத்திற்கு முன்பே எழுந்து, குளிக்கவும், தோய்க்கவும் முதலாவதாக இருங்கள். அம்மா ஆசையாக வாங்கி தந்தார் என்பதற்காக, அறைக்குள் சாமான்களை அடைத்து வைக்காதீர்கள். அதிக சாமான்கள், தரை விரிப்பு, மிதி அடி போன்றவை டஸ்ட் அலர்ஜியை உருவாக்கும். எவ்வளவுதான் நெருக்கமாகப் பழகினாலும் உங்கள் உடைகளையோ, துணிகளையோ, சீப்பையோ, சோப்பையோ உடன் இருப்பவர்கள் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அடிக்கடி விரிப்புகளை வெயிலில் நன்றாக உதறி எடுத்து வையுங்கள். விடுதியில் பலரும் பயன்படுத்திய மெத்தை, தலையணையை அப்படியே பயன்படுத்தாமல், உங்களுக்கு என்று தனியே புது தலையணை, படுக்கை விரிப்பு வாங்கிப் பயன்படுத்துங்கள். கூடுமானவரை மெத்தையைத் தவிருங்கள். அறை தினமும் சுத்தம் செய்யப்படுவதில் உறுதியாக இருங்கள். பல தொற்று நோய்களின் பிறப்பிடம் கழிப்பறை. ஆகையால், கழிப்பறையைத் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்யப்படுவது அவசியம். முக்கியமாக, உபயோகப்படுத்தப்பட்ட நாப்கின்களை உடனுக்கு உடன் அகற்றுங்கள்!

விடுதிக்கு விடுதி வாசப்படி

மனரீதியாகத் தயாராகுங்கள்

வேலை நிமித்தமாக பத்து பேர் ஒரே விடுதியில் தங்கும்போது முதலில் அடிபடுவது அந்தரங்கம். நமக்கான அந்தரங்கம் என்பது இல்லாமல் போகையில் பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். அடுத்து, நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வருவோர் தனக்குக் கிடைக்கும் சம்பளத்தில் இருந்து வீட்டுக்கும் பணம் அனுப்ப வேண்டும்; தங்களுடைய செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும், எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்க வேண்டும் என்கின்ற சூழலில் மன அழுத்தத்துக்கு ஆள்பட நிறைய வாய்ப்பு உண்டு. சிலருக்கு வசதியானச் சூழலில் உள்ளவர்களைப் பார்க்கும்போது, தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இது தவிர, கிராமப்புறச் சூழலில் இருந்து வருவோர் சில கலாசார ரீதியிலான அதிர்ச்சிக்கு ஆளாகலாம். இதன் தொடர்ச்சியாக, புதிய பழக்கங்கள் - தடுமாற்றங்கள் ஏற்படலாம். இவற்றில் எது ஏற்பட்டாலும், முதலில் உங்கள் பழைய நண்பர்களிடமோ, வீட்டாரிடமோ மனம் விட்டுப் பேசுங்கள். நிலைமை தீவிரமானால், மன நல மருத்துவரைச் சந்தியுங்கள்!

சமச்சீர் சாப்பாடு!

விடுதியில் நல்ல சாப்பாடு கிடைப்பதே சவால்தான். இதில் சமச்சீர் சாப்பாட்டுக்கு எங்கே செல்வது? நிறையப் பழங்கள், பருப்புகள், உலர் பழங்களை  சாப்பிட பழகுங்கள். அதேபோல, காய்களைச் சமைக்காமல் சாலட் செய்து சாப்பிடலாம். கூடுமானவரை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே குடியுங்கள். கிடைக்காவிடில், வெந்நீர் குடியுங்கள். வீட்டுச் சாப்பாட்டை ஒப்பிட்டு விடுதிச் சாப்பாட்டை ஒருபோதும் ஒதுக்காதீர்கள். நம்மை நாம் நன்றாகப்  பார்த்துக்கொள்வதுதான் நம்முடைய முதல் கடமை என்ற உணர்வுடன் விடுதியை அணுகுங்கள்!

விடுதிக்கு விடுதி வாசப்படி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism