Published:Updated:

வெல்கம் 'களிமண் ஃபிரிட்ஜ்'!

வெல்கம் 'களிமண் ஃபிரிட்ஜ்'!

வெல்கம் 'களிமண் ஃபிரிட்ஜ்'!

வெல்கம் 'களிமண் ஃபிரிட்ஜ்'!

Published:Updated:
வெல்கம் 'களிமண் ஃபிரிட்ஜ்'!
##~##

மின்சாரத் தேவையே இல்லாமல் ஒரு ஃப்ரிட்ஜ்... அதுவும் வெறும் இரண்டாயிரம் ரூபாயில்... எப்படி இருக்கிறது இந்த ஐடியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரஜாபதியின் ஒவ்வொரு ஐடியாவும் இப்படித்தான் இருக்கும். ''நவீனப் பொருட்கள் ஒவ்வொன்றின் வருகையும் வீட்டு வேலைகளை எவ்வளவோ எளிதானதாக மாற்றுகின்றன. ஆனால், அவை எல்லாமே பணக்காரர்கள் வாழ்க்கையை மட்டுமே மாற்றுகின்றன. ஏனென்றால், எல்லோரும் பணக்காரர்களுக்காகத்தான் யோசிக்கிறார்கள். நாம் ஏன் ஏழைகளுக்காக யோசிக்கக் கூடாது என்று நினைத்தேன். அதன் தொடக்கம்தான் ஏழைகளுக்கான இந்த ஃப்ரிட்ஜ்'' என்று சொல்லும் பிரஜாபதியின் லட்சியம் வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாவற்றையும் இயற்கை முறையில் மிகக் குறைந்த விலையில் அளிப்பது.

குஜராத் மாநிலத்தின் வான்கனெர் கிராமத்தைச் சேர்ந்த பிரஜாபதி, இந்த வேலைக்கு வந்த கதையே சுவாரசியமானது. கூரை ஓடுகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக இருந்தார் பிரஜாபதி. களிமண்ணில் பொருட்களைச் செய்வதில் நாட்டம் உள்ள பிரஜாபதி ஒருநாள் 'டாவ்டி’ என்ற சமையல் கருவியை உருவாக்கினார். நம்மூர் தோசைக்கல்லைப் போன்ற ஐட்டம் இது. அதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, களிமண்ணைக் கொண்டு குளிர்ச்சியான தண்ணீர் சுத்திகரிப்புச் சாதனத்தை (Cool water filter) உருவாக்கினார். அதுவும் ஹிட். இதன் தொடர்ச்சியாக பிரஜாபதி எடுத்துவைத்த மூன்றாவது அடிதான் களிமண் ஃபிரிட்ஜ். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பல்வேறு களிமண் மாதிரிகளை உருவாக்கி அவற்றை மேம்படுத்திப் பெற்ற இறுதி வடிவம்  இது என்கிறார் பிரஜாபதி!

இவர் தயாரித்து விற்கும் இந்தக் களிமண் ஃப்ரிட்ஜ் 50 லிட்டர் கொள்ளவு உடையது. உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், போன்றவற்றை ஐந்து நாட்கள் வரையிலும், பால் பொருட்களை மூன்று நாட்கள் வரையிலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கக் கூடியது இந்த ஃப்ரிட்ஜ். ''ஒரே சமயத்தில் 20 லிட்டர் தண்ணீர், 5 லிட்டர் பால், 5 கிலோ காய்கறிகள் ஆகியவற்றை இந்த ஃப்ரிட்ஜில் வைக்கலாம்'' என்கிறார் பிரஜாபதி. 1700 ரூபாய் அடக்க விலை ஆகும் இந்த ஃப்ரிட்ஜை 2000 ரூபாய்க்கு விற்கிறார்.

வெல்கம் 'களிமண் ஃபிரிட்ஜ்'!

இது எப்படிச் செயல்படுகிறது?

மண்பானை எப்படித் தண்ணீரைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறதோ அதே முறைதான் இதற்கும் அடிப்படை. இந்த ஃப்ரிட்ஜில் மேலும் கீழுமாக 20 லி. கொள்ளவு கொண்ட இரண்டு தண்ணீர்த் தொட்டிகள் இருக்கிறன. உணவுப் பண்டங்களை வைப்பதற்கான இட வசதியும் உண்டு. மேலே இருக்கும் தொட்டியில் இருந்து பண்டங்கள் வைத்திருக்கும் சேம்பரைச் சுற்றித் தண்ணீர் வழிந்துகொண்டே இருக்கும். அந்தத் தண்ணீர் சேம்பரின் வெப்பத்தை உட்கிரகித்து, சேம்பரின் வெப்பத்தைக் குறைக்கிறது. உள்ளிருக்கும் பொருட்களும் ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றன. உலகில் விளையும் மூன்றில் ஒரு பங்கு தானியங்கள் வீணாகின்றன என்கிறது ஐ.நா. சபையின் சமீபத்திய அறிக்கை. உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வில் தொடங்கி பசி என்னும் நோய் லட்சக் கணக்கானோரைக் கொன்று தீர்ப்பது வரை பல விஷயங்களுக்கு தானியங்கள் இப்படி வீணாவது முக்கியமான காரணம். இந்தியா போன்ற ஒரு நாட்டில் அரசால் மட்டுமே ஆகக் கூடியது எதுவும் இல்லை என்கிற சூழலில், பலருடைய ஆரோக்கியத்துக்கு முக்கியமான ஆதாரமாக வந்திருக்கிறது இவரது கண்டுபிடிப்பு. பிரஜாபதி சார், தமிழ்நாட்டு பக்கம் வந்து கடையைப் போடுங்க. உங்க பிசினஸ் பிச்சுக்கிட்டுப் போகும்!

வெல்கம் 'களிமண் ஃபிரிட்ஜ்'!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism