Published:Updated:

மருத்து மாத்திரைகள் ஜாக்கிரதை!

மருத்து மாத்திரைகள் ஜாக்கிரதை!

மருத்து மாத்திரைகள் ஜாக்கிரதை!
##~##

''மின் வெட்டால் தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். மக்களின் சிரமங்களை நான் நன்கு அறிவேன்!'' - தமிழக முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட உண்மை இது. மின்வெட்டால் மக்களின் திண்டாட்டம் ஒருபக்கம் இருக்கட்டும்... மருந்துகளின்       திண்டாட்டம்?! காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவற்றை மிகக் குறைந்த வெப்பநிலையில்            வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் அவை பலன் அளிக்கும். ஒரு நாளில் பாதி நேரம் கண்ணாமூச்சி விளையாடும் மின்வெட்டில் அது எந்த அளவுக்கு சாத்தியம்? உரிய குளிர்நிலையில் இல்லாவிட்டால் மருந்துகள் பலன் அளிக்குமா? அப்படிப் பலன்    அளிக்காத மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்னரே பொதுமக்கள் இனம் காணுவது எப்படி? இப்படி அலை அலையாகப் புறப்பட்டு வரும் கேள்விகளுக்கு விடை காணும் விதமாக மருத்துவர்கள் தொடங்கி மருந்துக் கடைக்காரர்கள் வரை பலரிடமும் பேசி நாம் தொகுத்திருக்கும் அவசிய அலசல் கட்டுரை இது. 

குழந்தைகள் நல மருத்துவர் ராஜேஷ், இது பற்றி பேசியபோது, ''இப்போது நிலவும் மின் தடை         காரணமாக வீட்டு ரெஃப்ரிஜரேட்டரில் வைக்கும் காய்கறிகளே அழுகி            விடுகின்றன. அதனால், மருந்துகளைப் பராமரிக்கும் இடங்களில் சாதாரண ஃபிரிட்ஜ் எந்த விதத்திலும்             பாதுகாப்பானது இல்லை.

மருத்து மாத்திரைகள் ஜாக்கிரதை!

பொதுவாக, தடுப்பு ஊசி              மருந்துகளான மீஸில்ஸ், எம்.எம்.ஆர். உள்ளிட்டவையும், எதிர்ப்புச் சக்தி தரும் மருந்துகளான இம்மினோ குளோப், அல்போமைன்                    உள்ளிட்டவையும், உயிர் காக்கும் மருந்துகளும் 2 முதல் 8 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். மகப்பேறு

மருத்து மாத்திரைகள் ஜாக்கிரதை!

மருத்துவத்துக்கு உபயோகப்படுத்தப்படும் ஆன்டி டி,  ஹெபிடைட்ஸ் -பி மருந்துகளையும் இதேபோலக் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.  

பெரிய அரசு   மருத்துவமனைகளில் ஐ.எல்.ஆர் எனப்படும், ஐஸ் லைன் ரெப்ரிஜரேட்டர் வசதிகள் இருக்கும். ஆனால், சிறிய டிஸ்பென்சரி, நர்சிங் ஹோம் மற்றும் மெடிக்கல் ஷாப் போன்றவற்றில் இந்த வசதிகள் இருக்காது. உரிய முன்னெச்சரிக்கை இல்லாமல் இவர்கள் இத்தகைய மருந்துகளைக் கைவசம் வைத்திருப்பது தவறு. காரணம், இந்த மருந்துகள் உரிய வெப்பத்தில் பாதுகாக்கப்படாமல் போனால், அவற்றின் வீரியம் கெட்டுவிடும்.

குறிப்பாகத் தடுப்பு ஊசிக்கான மருந்தில் லைவ் வைரஸ்கள் இருக்கும். அவை அழிந்து விட்டால் அந்த மருந்துக்கானத் தன்மை இல்லாமல் போய்விடும். அத்தகைய மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் அவை எந்த விதத்திலும் பயன் கொடுக்காது. வேறு பக்க விளைவுகள் என எதுவும் ஏற்படாமல் போனாலும்கூட, என்ன நோக்கத்துக்காக மருந்து செலுத்தப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறாது. போலியோ சொட்டு மருந்து போன்ற ஒரு சில மருந்துகளில் மட்டும் இண்டிகேட்டராக கலர் இருக்கும். அந்த மருந்துகளை உரிய விதத்தில் பாதுகாக்கவில்லை என்றால் நிறம் மாறிவிடும். இதை வைத்து எது நல்ல மருந்து எது வீரியம் குறைந்துபோன மருந்து என்பதை இனம் கண்டுவிடலாம். ஆனால் எல்லா மருந்துகளிலும் இது போன்ற வசதி இல்லை'' என்கிறார் எச்சரிக்கும் விதமாக.

மருத்து மாத்திரைகள் ஜாக்கிரதை!

கடலூரைச் சேர்ந்த    சிறுநீரகவியல் அறுவைசிகிச்சை நிபுணர் சரவணன் ஆதங்கத்தோடு பேசினார். ''ஜெனரேட்டர்          பயன்படுத்துவதால், மாதம் ஒன்றுக்குக் கூடுதல் செலவே ரூபாய் 5 லட்சம் ஆகிறது    என்றால் மருத்துவமனைகள் இதை எங்கே போய் வசூலிக்க முடியும்? வருகிற    நோயாளிகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லையே...அரசு இதைத்தான் விரும்புகிறதா?'' என்று கோபமாக கேள்வி எழுப்பினார்!

கடலூரைச் சேர்ந்த ஸ்ரீராகேவேந்திரா மெடிக்கல்ஸ்    உரிமையாளர் நாராயணன், 'இந்த மின் தட்டுப்பாட்டால் மருந்தை விற்பனை செய்வதைவிட மருந்தைப் பாதுகாப்பதில்தான் அதிக சிரமம். மின்சாரம் இல்லாதபோது இன்வெர்ட்டர்       பயன்படுத்த முடியவில்லை. காரணம், இன்வெர்ட்டரால் ஃப்ரீசர் பாக்ஸ்க்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுக்க         முடியவில்லை. அதனால், முக்கியமான மருந்துகளை ஃப்ரீசரில் சிறிது நேரம், உப்பு பாக்ஸில் (தெர்மாகோல் பெட்டி) சிறிது நேரம் என்று மாறி மாறி வைக்கவேண்டிய சூழ்நிலை. இப்படிக் கஷ்டப்படுவதால் சில மருந்துகளை எங்களைப் போன்றவர்கள் வாங்கி வைப்பதே இல்லை.!'' என்கிறார் வேதனையாக.

மருத்து மாத்திரைகள் ஜாக்கிரதை!

திருச்சி அரசு  மருத்துவமனையின் மருந்தாளுனர் குமாரின் பார்வை வேறு மாதிரி இருந்தது. 'எங்களுக்குத் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸஸ் சொஸைட்டி கிடங்குகளில் இருந்து மருந்துகள் வருகின்றன. இந்த மருந்துகளை ஐ.எல்.ஆர் எனப்படும், ஐஸ் லைன் ரெப்ரிஜரேட்டரில் வைத்துப் பாதுகாக்கிறோம். தேர்ச்சி பெற்ற மருந்தாளுனர்தான் இந்த மருந்துகளை உரிய வெப்பநிலையில் வைத்துப் பாதுகாக்கும் பொறுப்பு உடையவர். அவர் பணியிடத்துக்கு வந்ததும் முதலில் ஐ.எல்.ஆர் யூனிட் ஓடுகிறதா? அதன் வெப்பநிலை என்ன? என்பதைக் கவனித்துப் பதிவு செய்ய வேண்டும். 48 மணி நேரம் தொடர்ச்சியாக மின் சப்ளை இல்லாதபோதுகூட இந்த ஐ.எல்.ஆரின் குளிர்ப்பதனத்தில் பெரிய மாற்றம் இருக்காது. 48 மணி நேரத்துக்கும் மேலானால் ஜெனரேட்டர் கொண்டு இயங்க வைக்கலாம். உரிய வெப்பநிலையில் வைக்க முடியாமல் போன சம்பவங்களை நாங்கள் சந்திக்க நேர்ந்ததில்லை. 48 மணி நேரத்துக்குப் பிறகும் ஐ.எல்.ஆரை இயக்க முடியாத போது அருகில் உள்ள வேறு அரசு மருத்துவமனையின் ஐ.எல்.ஆர்-க்கு அந்த           மருந்துகளை அனுப்பி வைத்துப் பாதுகாப்போம்.'' என்றார்.

கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரிப் பொது மருத்துவத் துறை மூத்த உதவிப் பேராசிரியரும் கல்லூரி மருத்துவமனைப் பொது மருத்துவருமான                   டி.ரவிக்குமாரின் கருத்து இது: 'அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து

மருத்து மாத்திரைகள் ஜாக்கிரதை!

மருத்துவமனைக்கு 'வாக் இன் கூலர்’ அமைப்பு உள்ள வாகனத்தில்தான் மருந்துகள் கொண்டு  வரப்படுகின்றன. மருத்துவமனைகளில் ஐஸ் லைன் ரெப்ரிஜரேட்டர்களில் இவை பாதுகாக்கப்படுகின்றன. மேலும் ஜெனரேட்டர்கள், யூபிஎஸ்கள் போன்ற கருவிகளும் மருத்துவமனைகளில் உள்ளன. ஏதாவது வெப்ப மாற்றத்தால் மருந்து கெட்டுப்போனால், அதன் மேல் இருக்கும் லேபிளின் வண்ணம் கருப்பு நிறமாக மாறிவிடும். இதைக்கொண்டும் மருந்தின் தரம் அறிந்துகொள்ளப்படும். மேற்படி நடைமுறைகள் ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கும் பொருந்தும்!' என்றார்.

கோவை தனியார் மருத்துவமனை மருத்துவர்     ஆர். ஸ்ரீனிவாஸன் மிகுந்த பொறுப்போடு பேசினார்.  'அரசு மருத்துவர் சொன்ன அனைத்து விஷயங்களும் பெரிய, தனியார் மருத்துவமனைகளிலும் பின்பற்றப்படுகின்றன. பொதுமக்கள் விழிப்பு உணர்வோடு இது சம்பந்தமான கேள்விகள் கேட்டுத் திருப்தி அடைந்த பிறகே மருத்துவமனையைத் தேர்ந்தெடுப்பது நல்லது!' என்றார்.

குறிப்பாகத் தடுப்பு ஊசிப் போட்டுக் கொள்பவர்கள் மருந்து உரிய வீரியத்துடன் உள்ளதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறையாக விசாரித்து அறிந்துகொள்வது நல்லது. தடுப்பு ஊசி போட்டுவிட்டோம் என்கிற நம்பிக்கையில் நமக்கு ஒன்றும் ஆகாது என எண்ணி, மருந்தின் தன்மை இழப்பால் சிக்கலுக்கு ஆளாகும் நிலை யாருக்கும் வந்துவிடக் கூடாது. அதற்கான எச்சரிக்கை மணி இப்போது இருந்தே ஒலிக்கத் தொடங்கட்டும்!.

மருத்து மாத்திரைகள் ஜாக்கிரதை!