இந்தியாவில், நோயாளிகளுக்கே தெரியாமல் மருந்து நிறுவனங்களால் நடத்தப்படும் முறையற்ற மருந்தியல் பரிசோதனைகளுக்காக (clinical trials) இந்திய அரசைக் கடுமையாக எச்சரித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். சரி, நாம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோம். தெரிந்துகொள்ளுங்கள் மருந்தியல் பரிசோதனையை!

மருந்தியல் பரிசோதனை என்றால் என்ன?

புதிய மருந்துகள் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே விற்பனைக்கு வரும். அப்படி வரும் மருந்துகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று அறிய வெள்ளெலி, முயல், குரங்குகளைப் போன்று மனிதர்களுக்கும் கொடுத்து சோதிக்கப்படும். இதுதான் மருந்தியல் பரிசோதனை.

எப்படி நடத்த வேண்டும்?

இந்தச் சோதனைகளைச் செய்ய ஏராளமான வழிமுறைகள் உண்டு. சம்பந்தப்பட்ட நாட்டு அரசிடமும் நோயாளிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்பது அதில் அடிப்படையானது. முக்கியமாக, சோதனையின்போது அளிக்கப்படும் நிதியுதவியில் தொடங்கி, பின்விளைவுகள் ஏதும் ஏற்பட்டால், அளிக்கப்படும் இழப்பீடு வரை நோயாளிகளுக்கு நிறையப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இந்தியாவில் என்ன நடக்கிறது?

வெளிநாடுகளில், இந்தச் சோதனைகளைச் செய்ய நிறையக் கெடுபிடிகள் உண்டு என்பதோடு, நிறையச் செலவும் ஆகும். இதைத் தவிர்க்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன பன்னாட்டு மருந்து நிறுவனங்கள். இந்தியாவில் அரசுக்கும் தெரியாமல், நோயாளிகளுக்கும் தெரியாமல் மக்களை வைத்து நிறையப் பரிசோதனைகளை நடத்துகின்றன மருந்து நிறுவனங்கள்.

என்ன பாதிப்பு?

இந்தியாவில் 2007-2012-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் இதுபோன்ற சட்டவிரோத மருத்துவப் பரிசோதனைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்?

இதைத் தடுக்க பிரத்யேகமான சட்டம் ஒன்றை அரசு இயற்ற வேண்டும்; தவிர, மாநில அரசுகளோடு இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

- பா.பிரவீன்குமார்