Published:Updated:

ஆண்ட்ரியாவின் 'விஸ்வரூப' சீக்ரெட்

ஆண்ட்ரியாவின் 'விஸ்வரூப' சீக்ரெட்

ஆண்ட்ரியாவின் 'விஸ்வரூப' சீக்ரெட்

ஆண்ட்ரியாவின் 'விஸ்வரூப' சீக்ரெட்

Published:Updated:
ஆண்ட்ரியாவின் 'விஸ்வரூப' சீக்ரெட்
##~##

ண்ட்ரியா இப்போது கமல் சிஷ்யை! மேடம் என்ன பேசினாலும், கமல் பெயருடன்தான் ஆரம்பிக்கிறார். பியூட்டி என்று நாம் ஆரம்பித்தபோதுகூட அப்படித்தான் ஆரம்பித்தார். ''ஹய்யோ... கமல் சார் தன்னைக் கச்சிதமா வைச்சிக்க எவ்வளவு கவனம் கொடுக்கிறார் தெரியுமா?'' என்று ஆரம்பித்தவரிடம் மெள்ளப் பேசி அவருடைய அழகைப் பற்றிப் போட்டு வாங்கினோம். பாட்டு, நடனம், நடிப்பு எனப் பல தளங்களிலும் வெளுத்து வாங்கும் ஆண்ட்ரியாவின் பியூட்டி சீக்ரெட்ஸ் இவை! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சருமம்:

''பொதுவா எல்லாருக்குமே சரும அழகு ரொம்ப முக்கியம். அதுவும் ஒரு நடிகையோட சருமம், ரொம்பவும் ஆரோக்கியமா இருக்கணும். அதாவது, எந்த மாதிரி காலநிலையிலும் கடுமையா வேலை செய்யுற மாதிரி இருக்கணும். 'ஆயிரத்தில் ஒருவன்’ பண்ணப்ப நான் இதை உணர்ந்தேன். மேக்-அப்புக்கு நிறைய வேலை இருந்த படம் அது. வெவ்வேற க்ளைமேட்ல வேற வேலை செஞ்சோம். அடிப்படையில, என் சருமம் ரொம்ப சென்சிட்டிவ். அதனால, ரெண்டு விஷயங்கள்ல நான் ரொம்பக் கவனமா இருப்பேன்.

ஆண்ட்ரியாவின் 'விஸ்வரூப' சீக்ரெட்

முதல் விஷயம், ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல மேக்-அப் போட மாட்டேன். அதேபோல, எத்தனை மணியானாலும் ராத்திரி படுக்கைக்குப் போறதுக்கு முன்னால், முகத்துல தவறாமல் 'க்லென்ஸர்’ பூசிக் கொஞ்ச நேரம் ஊறவைத்து, பஞ்சால் மெல்ல அழுத்தித் துடைத்து, தண்ணீரால் முகம் கழுவிட்டுதான் தூங்கப் போவேன். அப்புறம், நான் பயன்படுத்துற பொருட்கள் எல்லாமே தரமானதா, சருமத்தைப் பாதிக்காத வகையில் இருக்குறதா பார்த்துக்குவேன். முக்கியமா, இயற்கை சார்ந்த பொருட்களா பார்த்துப்பேன்.

ஒருவேளை, முகத்துல ஏதாவது மாற்றம் தெரிஞ்சா, அது அபாயத்துக்கான அறிகுறி. எல்லா மேக்-அப் ஐட்டங்களையும் தூக்கிவைச்சிட்டு, சருமப் பாதுகாப்புக்கான விஷயங்கள்ல முழு மூச்சுல இறங்கிடுவேன். வழக்கத்தைவிட அதிகச் சத்தான உணவா சாப்பிடுவேன். நிறைய நீராகரமா எடுத்துப்பேன். நல்லாத் தூங்குவேன். சருமம் பழைய நிலைக்கு வந்ததும்தான் மேக்-அப் கிட் பக்கம் போவேன்.''

உணவு:

''எனக்கு சாப்பிடுறதுன்னா அவ்ளோ பிடிக்கும். அதிலும் ஸ்வீட்ஸ்னா எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனா, என்னைப் பார்த்தால் அப்படித் தெரியலை இல்லை? சிம்பிள். சின்னச் சின்ன விஷயங்கள்ல கவனமா இருந்தாப் போதும். வயிறு எவ்வளவு கேட்குதோ, அவ்வளவு சாப்பிடலாம். ஆனா, பசிக்காதப்போ மேஜை பக்கம் போகக் கூடாது. அதேபோல, சாப்பிடறதைக் கரைக்கிற அளவுக்கு ஒர்க்-அவுட் செய்யணும். சாப்பாட்டுல  பாதிக்குப் பாதி காய்கறிகள் இருக்குற மாதிரி பார்த்துக்கணும். டீ டைம்ல கிரீன் டீ எடுத்துக்கலாம். எனர்ஜி நல்லாக் கிடைக்கும். அப்புறம் வாயில் என்ன போட்டாலும் சரி, ஒவ்வொரு முறையும் சாப்பிட்டதுக்கு அப்புறம் கண்டிப்பா வாய் கொப்பளிக்கணும். 'விஸ்வரூபம்’ ஷூட்டிங் நடந்தப்போ, என்னோட டயட் பார்த்து எல்லாமே ஆச்சர்யப்பட்டாங்க. கமல் சார்கூட நடிக்கணும்னா சும்மா இல்லைல?''

ஆண்ட்ரியாவின் 'விஸ்வரூப' சீக்ரெட்

உடற்பயிற்சி:

''நான் எந்த ஊர்ல இருந்தாலும், ஜிம், ஒர்க் அவுட் பண்ணத் தவறினதே இல்லை.  என் உடம்பை ஸ்லிம்மா, ஷேப்பா வெச்சிருக்கிறதுக்கு உதவறதுல ரெகுலரா நான் செஞ்சுக்கிட்டு இருக்கிற கார்டியா, டிரெட் மில் பயிற்சிகளுக்கு முக்கியமான பங்கு உண்டு.

ஒரு நாள் கார்டியா ஒர்க் அவுட் ஒரு மணி நேரம் செஞ்சேன்னா, மறுநாள் டிரெட் மில்லில் ஒரு மணி நேரம் ஒர்க் அவுட் செய்வேன். இது இல்லாமல், உடம்பின் தசை வலுவடையறதுக்குன்னு உடலை வளைக்கக்கூடிய சின்னச் சின்னப் பயிற்சிகளையும் விடாமல் செய்வேன்.''      

மனப்பயிற்சி:

''நிறையப் பேர் கேட்பாங்க... 'எப்படி மேடம் ஹை-பிட்ச்லயும் பாடுறீங்க, மெலடியிலயும் அசத்துறீங்க?’னு. உண்மையைச் சொல்லணும்னா நான் என் குரலுக்காக மெனக்கெடுறதே இல்லை. ஐஸ்கிரீம் சாப்பிடுவேன். கூல் டிரிங்க்ஸ் குடிப்பேன். ஆனா, இதை எல்லாம் பாட்டு ரெக்கார்டிங் இருக்குற அன்னைக்கு மட்டும் செய்ய மாட்டேன். எந்த வேலையைச் செஞ்சாலும் அதை ரசிச்சு செய்யணும். அப்பத்தான் அது அழகா முடியும். பாடும்போது நான் மனசை லேசா வெச்சுப்பேன். அப்போ என் மனசுல இருக்குற உற்சாகம் தானாகவே அந்தப் பாட்டுலேயும் வந்துடும். பாடும்போது செய்யுற இந்த மனப் பயிற்சியைத்தான் எல்லா விஷயத்துலேயும் கடைப்பிடிக்கணும்னு நெனைக்கிறேன். எப்பவும் மனசு ரிலாக்ஸா இருந்தா வாழ்க்கை எவ்ளோ நல்லா இருக்கும்? நீங்களும் முயற்சி பண்ணுங்களேன்!''

அதானே... எப்பவும் மனசு ரிலாக்ஸா இருந்தா வாழ்க்கை எவ்ளோ நல்லா இருக்கும்?        

- உ.அருண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism