Published:Updated:

ஓர் இளம்பெண்போல அவர் சிரித்தார்!

ஓர் இளம்பெண்போல அவர் சிரித்தார்!

ஓர் இளம்பெண்போல அவர் சிரித்தார்!

ஓர் இளம்பெண்போல அவர் சிரித்தார்!

Published:Updated:
ஓர் இளம்பெண்போல அவர் சிரித்தார்!
##~##

வர்களை நான் முன் பின் பார்த்ததில்லை. ரொறொன்ரோவில் என் வீட்டுக்கு வந்திருந்தார்கள். கதையோடு கதையாக அவர்கள் சொன்ன தகவலை என்னால் நம்ப முடியாத நிலையில் நான் உறைந்துபோயிருந்தேன். அவர்கள் சொன்னது உண்மை என்பதை நிரூபிக்க செல்பேசியில் எடுத்த படங்களை காட்டினார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவருடைய பெயர் பாலா; மனைவி பெயர் தேவா. வருடா வருடம் செய்யும் மருத்துவப் பரிசோதனையில் மனைவியின் சிறுநீரகம் பழுதடைந்து இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். சிறுநீரகம் 17 வீதம்தான் வேலைசெய்தது. 'உடனேயே ரத்தம் சுத்திகரிப்பு (dialysis) செய்து இறுதியில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டும். இல்லாவிடில் உயிர் பிழைக்க முடியாது’ என்றார்கள். ரொறொன்ரோவின் அதிசிறந்த நவீன மருத்துவ சாலை மருத்துவர்கள் அப்படிச் சொன்னபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ஓர் இளம்பெண்போல அவர் சிரித்தார்!

பாலா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படியும் மனைவியைக் காப்பாற்றுவது என முடிவு செய்தார். குருத்தணு மாற்றுச் சிகிச்சை (Stem cell transplant) மூலம் சிறுநீரகக் கோளாறைக் குணப்படுத்தலாம் எனப் படித்திருந்தார். ஆனால், அமெரிக்காவிலோ கனடாவிலோ ஸ்டெம் செல்  சிகிச்சை முறை தடைசெய்யப்பட்டிருந்தது. பாலா, இணையத்தில் உலாவி குருத்தணு சிகிச்சை உக்ரெய்ன், மெக்சிக்கோ, சீனா போன்ற நாடுகளில் வெற்றிகரமாக நடைபெறுவதைக் கண்டறிந்தார். இறுதியில் சீனாவுக்கு மனைவியை அனுப்புவது என்று முடிவு செய்தார்.

பணம் 20,000 டாலர் தேவைப்பட்டதால் தன்னுடைய வீட்டை இரண்டாவது அடமானம் வைத்தார். இவருடைய நண்பர் ஒருவர் 'உம்முடைய மனைவிக்கு 52 வயதாகிறது. அவரால் இனி உமக்கு என்ன பிரயோசனம். வீணாகக் காசைச் செலவழிக்க வேண்டாம்’ என்று புத்திமதி கூறினார். பாலா அவரது அறிவுரையைப் புறம்தள்ளினார். மனைவியை விமானத்தில் பெய்ஜிங்குக்கு ஏற்றப்போனபோது தேவா சொன்ன கடைசி வார்த்தைகள் இவரை உலுக்கிவிட்டன. ''இப்பொழுது இப்படிப் போறேன். திரும்பி வரும்போது சீனச் சவப்பெட்டியில் வருவேனோ தெரியாது.''

சீனாவில் அவரைக் கவனிப்பதற்கு 10 மருத்துவர்களும் பல தாதிமார்களும் தயாராக இருந்தனர். தேவா அங்கு போய் இறங்கியபோது எலும்பும் தோலுமாக அவர் 17 கிலோ  எடையை ஏற்கெனவே இழந்திருந்தார். நாளுக்கு நாள் மேலும் வேகமாக எடை குறைந்தது. கண் பார்வை குளுக்கோமா வியாதியால் பாதி போய்விட்டது. உடம்பில் அங்கங்கே வீக்கம். அடிக்கடி வயிற்றுப் போக்கு. பசி கிடையாது. ஏறக்குறைய மரணத்துக்கு சமீபமாக வந்துவிட்டார். அவருக்காக நியமிக்கப்பட்ட ஒரு

ஓர் இளம்பெண்போல அவர் சிரித்தார்!

பிரத்யேகத் தாதி 24 மணி நேரமும் அவரை விட்டு அகலவில்லை. முதல் வாரத்தில் ஒருவித சிகிச்சையும் கிடையாது. ஆனால் தினமும் பல தடவை நோயாளியின் சிறுநீர், ரத்தம், மலம் ஆகியவற்றைப் பரிசோதித்தார்கள். நோயாளி உட்கொள்ளும் உணவு, பருகும் பானம் போன்ற விவரங்களை தாதி, நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொண்டார். இதுவெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது இரவு பகலாக இவருடைய ரத்தத்துடன் ஒத்துப்போகும் குருத்தணுவைத் தேடும் வேலை அங்கே அசுர வேகத்தில் நடந்தது.

ஒரு கரு வளரும்போது அதன் தொப்புள்கொடி செல் அமைப்பு நோய்களை எதிர்க்கும் அபூர்வ சக்தி கொண்டது. அதிலும் தாயினுடைய வயிற்றிலிருக்கும் சிசு 45 நாள் வளர்ச்சியடைந்ததும் அதன் தொப்புள்கொடி ஸ்டெம் செல் அதிவீரியம் பெற்றிருக்கும். உடம்பின் எந்தப் பாகத்துக்கும் பொருத்தமான 200 வகை செல்களாக மாறவும் அவற்றைச் சீரமைக்கவும் பழுதைச் சரியாக்கவும் அவற்றினால் முடியும்.  சீனாவில் தம்பதிகள் ஒரு பிள்ளை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அங்கே நிறையக் கருக்கலைப்புகள் நிகழ்வதால் அந்தத் தொப்புள்கொடிகள் பாதுக்காக்கப்பட்டன.  நோயாளியின் ரத்தத்துடன் ஒத்துப்போகக்கூடிய குருத்தணுக்களைக் கண்டுபிடிப்பது மற்ற நாடுகள்போல கடினம் இல்லை.  தேவாவின் ரத்த வகையுடன் ஒத்துப்போகும் குருத்தணுக்கள் அவரின் உடலுக்குள் உள்நாளம் வழியாக ஏற்றப்பட்டன. அவை உடம்பில் முற்றிலும் ஏறி முடிவதற்கு மூன்று மணி நேரம் ஆனது. தேவா கண்விழித்தபோது அவரைச் சுற்றி மருத்துவர்களும் தாதிகளும் நின்றிருந்தனர். தேவாவின் கையிலே பெரிய பூங்கொத்து ஒன்றை நீட்டி அவரைப் புது உலகத்து வரவேற்றார்கள். அவருடைய உடலில் உண்மையில் புதிய இளம் ரத்தம் ஓடியது. முகம் பொலிவுடன் விளங்கியது. கண்கள் மின்னின. முதல் வார்த்தையாக ''பசிக்குது'' என்றார்.

தொடர்ந்து மூன்று வாரச் சிகிச்சையில் 17 சதவீதம் வேலை செய்த அவருடைய சிறுநீரகம் 82 வீதம் சுறுசுறுப்பாக இயங்கியது. கண் பார்வை மீண்டது. உடல் எடை கூடியது. அவர் விமானம் ஏறி ஒருவித பிரச்னையும் இன்றிக் கனடா வந்து சேர்ந்தார். ''உங்கள் மருத்துவரிடம் மீண்டும் காட்டினீர்களா?'' என்றேன். ''என்னைப் பார்த்ததும் அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டுபோனார்'' என்றார். ''இப்பொழுது எப்படி இருக்கிறது?'' என்றேன். ''பிரச்னை இல்லை. ஆரோக்கியமாய் இருக்கிறேன். சீனச் சவப்பெட்டிக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.''  ஓர் இளம்பெண் சிரிப்பதுபோல அவர் சிரித்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism