Published:Updated:

அக்கம்பக்கம்

அக்கம்பக்கம்

அக்கம்பக்கம்

அக்கம்பக்கம்

Published:Updated:
அக்கம்பக்கம்
##~##
அக்கம்பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 லிசா ரேவை ஞாபகம் இருக்கிறதா? 'நேதாஜி’ படத்தில் சரத்குமாருக்கு ஜோடி போட்டாரே... ஆங்... அவரே! இந்தியத் தந்தைக்கும் போலந்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த லிசா ரேவால் தமிழில் ஜொலிக்க முடியாமல் போனாலும் சர்வதேச அளவில் முன்னணி மாடலாக உருவெடுத்தார். ஆனால், 'மல்டிபிள் மைலோமா’ என்கிற எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய் லிசாவின் வாழ்வையே புரட்டிப்போட்டது. 

''இந்த நோய்க்கு மருந்தே இல்லை என்று சொன்னார்கள். ஆனால் நான், நோயை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிறேன். போராட்டம்தானே வாழ்க்கை?'' என்று அப்போது தன் வலைத்தளத்தில் எழுதினார் லிசா. பின்னர், 'ஸ்டெம் செல்’ சிகிச்சை மூலம் புற்றுநோயை எதிர்கொண்ட லிசா, சில மாதங்களுக்கு முன் திருமணமும் செய்துகொண்டார்.

அக்கம்பக்கம்

தன்னுடைய 'யெல்லோ டயரீஸ்’ வலைத்தளத்தில் புற்றுநோய் விழிப்பு உணர்வு மற்றும் தன்னம்பிக்கைக் கட்டுரைகளை எழுதிவரும் லிசாவுக்கு இப்போது புது ரசிகை ஒருவர் கிடைத்து இருக்கிறார்... மனிஷா கொய்ராலா!

புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் மனிஷாவுக்கு லிசாதான் இப்போது முன்மாதிரி. ''ஒருபுறம் புற்றுநோயின் தாக்கமும் மறுபுறம் சிகிச்சையின் தாக்கமுமாக உடல் நைந்துபோனாலும், ஆக்கபூர்வமான - நேர்மறையான எண்ணங்கள் இருந்தால், எதையும் எதிர்கொள்ள முடியும் என்பதை நேரடியாக உணர்கிறேன். இதற்கு வாழும் உதாரணம் லிசா. அவருடைய எழுத்துகள் எனக்குள் நன்னம்பிக்கையை விதைக்கின்றன'' என்று பார்ப்போரிடம் எல்லாம் லிசாவைப் புகழ்ந்து தள்ளுகிறார் மனிஷா. மன்ஹாட்டனில் பெற்றோருடன் தங்கி சிகிச்சை பெற்றுவரும் மனிஷா அடுத்த ஆறு மாதங்களில், புது மனுஷியாக வருவார் என்று சொல்கிறார் அவருடைய மேலாளர் சுப்ரதோ கோஷ். புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்க மேலும் பல வாழும் உதாரணங்கள் தேவைப்படுகின்றனர்... நல்வரவு மனிஷா!

படம்: ஆ.முத்துகுமார்

அக்கம்பக்கம்
அக்கம்பக்கம்

மூளை செல்கள் சேதாரம் ஆவதையும் பக்கவாதத்தையும் தடுக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு இருக்கிறதாம். அதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்களுக்கு மூளையின் தற்காப்பு முயற்சிகளை வலுவாக்கும் ஆற்றல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.

அக்கம்பக்கம்
அக்கம்பக்கம்

 கண் பார்வை மங்கி, பார்வை இழப்பதைப் போக்க ஒரு புதிய சிகிச்சையைக் கண்டறிந்து இருக்கின்றனர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். பார்வையற்ற ஓர் எலிக்கு 'ப்ரிகாசர்’ என்ற செல்லைச் செலுத்தி இருக்கிறார்கள்.  இந்த செல் செலுத்தப்பட்ட இரண்டு வாரங்களில் எலியின் கண்ணில் ரெட்டினாவை உருவாக்கி இருக்கிறது. பிறகு, எலியை வெளிச்சமான ஒரு பகுதியில் விட்டு அதன் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, எலியின் மூளை பார்வை சமிக்ஞையைப் பெற்று அதன்படி செயலாற்ற உத்தரவிட்டதைக் கண்டறிந்து உள்ளனர். அடுத்தகட்டமாக மனிதர்களிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

வாழ்த்துகள் விஞ்ஞானிகளே!

அக்கம்பக்கம்
அக்கம்பக்கம்

சதா சர்வ காலமும் படுக்கை அறை நினைப்பிலேயே இருக்கிறார்; என் கணவர்  நினைப்பை மாற்ற மருந்து வேண்டும் என்று கேட்டு வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்று குண்டு போட்டு இருக்கிறார் டெல்லி செக்ஸாலஜிஸ்ட் அஜித் சக்ஸேனா. டாக்டர் கோத்தாரியின் ஸ்டேட்மென்ட் இன்னும் ஒரு படி மேலே போகிறது. இந்தியக் கணவர்களுக்கு உடல் உறவின்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதைவிட என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று கற்றுத் தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அவர்.

என்னதான் பாஸ் சொல்ல வர்றீங்க?

அக்கம்பக்கம்

 சீனாவைப் பன்றிக் காய்ச்சல் பாடாய்ப் படுத்துகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சீனாவில் பன்றிக்காய்ச்சலின் தாக்குதல் அதிகம் இருந்தாலும், இப்போது அதன் வீரியம் உச்சத்துக்குப் போய் இருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு அங்கு குளிர் நிலவுவதும் இதற்கு முக்கியக் காரணம் என்கின்றனர் சீன மருத்துவர்கள். வட இந்தியாவையும் இப்போது குளிர் வாட்டத் தொடங்கி இருக்கிறது.

உஷார் இந்தியா உஷார்!

அக்கம்பக்கம்
அக்கம்பக்கம்

 இந்திய அரசு மருத்துவமனைகள் வரலாற்றிலேயே முதல்முறையாக... அழகூட்டும் அறுவைசிகிச்சைப் பிரிவைத் தொடங்கி இருக்கிறது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை. கீழ்த் தாடை, மூக்கு, மார்பகச் சீரமைப்பு, இடுப்பு பருமன் குறைப்பு, தேவையற்ற எலும்புகள் அகற்றம் என்று தனியார் மருத்துவமனைகள் பல லட்சங்கள் தீட்டக்கூடிய சிகிச்சைகளை இங்கு கட்டணமின்றி அளிக்கிறது தமிழக அரசு.

செய்யுங்கோள்... நல்லா நல்லது செய்யுங்கோள்!

அக்கம்பக்கம்

 டெல்லி சம்பவத்தின் தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்க வீரர் யோகேஷ்வர் தத், பெண்களுக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். ''பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் சூழலில் பெண்கள் கட்டாயம் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு என்னாலான பங்களிப்பாக இந்த முயற்சி இருக்கும்'' என்று சொல்லி இருக்கிறார் யோகேஷ்வர். இதேபோல, நாட்டிலேயே முன்னோடி முயற்சியாக அண்ணா பல்கலைக்கழகம், தனக்குக் கீழ் இயங்கும் 550 கல்லூரிகளுக்கும் பெண்கள் பாதுகாப்புக்கான குழு  ஒன்றை நிறுவச் சொல்லி உத்தரவிட்டு உள்ளது. இது ஒருபுறம் இருக்க, பள்ளிக்கூடங்களில் இருந்தே தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுக்கும் யோசனையிலும் அரசு இருக்கிறது.

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான் ராசா!

அக்கம்பக்கம்
அக்கம்பக்கம்

 உடல் பருமன் கொண்ட பெண்கள் கருத்தரிக்கும்போது, அந்தக் கருவுக்குப் போதுமான அளவு வைட்டமின் டி சத்து கிடைப்பது இல்லை என அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். வைட்டமின் டி என்பது எலும்புகள் வலுவாக இருக்கத் தேவையானது. இது கொழுப்பில் கரைந்துவிடக் கூடிய இயல்பு உடையது. குண்டாக உள்ளவர்கள் உடலில் உள்ள அதிகமான கொழுப்பு வைட்டமின் டியைக் கரைத்துவிடுவதால், கரு பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மம்மீஸ் கொழுப்பைக் குறைங்க ப்ளீஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism