Published:Updated:

நெகிழ்ச்சி தந்த முகாம்!

நெகிழ்ச்சி தந்த முகாம்!

நெகிழ்ச்சி தந்த முகாம்!

நெகிழ்ச்சி தந்த முகாம்!

Published:Updated:
நெகிழ்ச்சி தந்த முகாம்!

இதுவரை 'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 8 இடங்களின் மருத்துவ முகாம்களை நடத்திய டாக்டர் விகடன், முதல் முறையாக சென்னையில்  செட்டிநாடு மருத்துவமனை மற்றும் வெலிங்டன் அறக்கட்டளையுடன் இணைந்து ஜனவரி 4-ம் தேதி  அன்று மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது. முகாமில், செட்டிநாடு மருத்துவமனையின் 33 மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என சுமார் 75-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு களம் இறங்கி இருந்தது.

நெகிழ்ச்சி தந்த முகாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெகிழ்ச்சி தந்த முகாம்!

குடும்பம் குடும்பமாகக் காலை ஏழு மணிக்கே அரங்கத்துக்கு வர ஆரம்பித்துவிட்டனர் பொதுமக்கள். ரத்தப் பரிசோதனை, உடல் எடை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் ஈசிஜி என வரிசையான பரிசோதனைகளைத் தொடர்ந்து, தேவைக்கேற்ப பிரத்யேகப் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டார்கள் நோயாளிகள். காது மூக்கு தொண்டை, மகளிர் மற்றும் மகப்பேறு, குழந்தைகள் நலம், பல் மருத்துவம், எலும்பு சிகிச்சை, இதயம் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு நிபுணர்களிடமும் சிகிச்சை பெற்ற சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

தம்பதி சமேதராய் வந்திருந்த அம்பத்தூரைச் சேர்ந்த ராஜசேகரன், ''நான் அரசு ஊழியராக இருந்து ரிடையர்டு ஆனவன். எவ்வளவோ மருத்துவ முகாம்களுக்குப் போய் இருக்கேன். ஆனா, இதுபோல ஒரு மருத்துவச் சேவையை நான் எங்கேயும் பார்த்ததே இல்லை'' என்றார்.  

சைதாப்பேட்டையில் இருந்து வந்திருந்த மைதிலி, ''எல்லா டெஸ்டும் எடுத்திட்டேன்.  எல்லாமே நார்மல்தான். பல்லுல மட்டும் இடுக்கு இருந்துச்சு. அதையும் அடைச்சு விட்டுட்டாங்க'' என்றார் வாய் நிறையச் சிரிப்புடன்.

உடல் எடை முதல் எக்கோ டெஸ்ட் வரை அனைத்தையும் பார்த்த திருப்தியில் திருவொற்றியூர் சம்பத்குமார், திருவல்லிக்கேணியிலிருந்து வந்திருந்த ஜெயா - சந்திரா தோழிகள் என அனைவரின் முகத்திலுமே திருப்தியின் அறிகுறி தென்பட்டது.  

முகாமில் 570 பேர் பங்கேற்றனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஸ்கேன், 200-க்கும் மேற்பட்டோருக்கு ஈசிஜி, எக்கோ பரிசோதனைகள் செய்யப்பட்டன.  200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பல் சுத்தம், அடைத்தல் சிகிச்சை செய்யப்பட்டது. எல்லோர் முகத்திலும் தெரிந்தது நெகிழ்ச்சி!

படங்கள்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism