Published:Updated:

காதலில் ஜெயிக்க...

டாக்டரின் 'லப்டப்' டானிக்!

பிரீமியம் ஸ்டோரி
காதலில் ஜெயிக்க...

காதல்... இதயத் தசைகளை இயக்கும் விசை;  மனதை மயிலிறகால் வருடி பறக்கவைக்கும் இனம்புரியா இசை. மின்சாரம் எப்போது வரும் என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால், காதல் எப்போது வரும்... எப்படி வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.

 காதல் என்றால் என்ன? காதலிக்காவிட்டால் அது இயல்பான நடத்தை இல்லையா? சலிக்காத அளவுக்குக் காதலை இயக்கும் காலச்சக்கரம் எது? எது சரியான காதல்?  டீன் ஏஜ் பருவத்தில் மனதில் காதலைப் பற்றித் தோன்றும் இப்படியான அனைத்துச் சந்தேகங்களுக்கும் விரிவான விளக்கம் தருகிறார் மனநல மருத்துவர் ராஜாராம்.

''காதல் டீன் ஏஜ் ஸ்பெஷல் மட்டுமல்ல..! ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் காதல் தாக்கலாம். காதல் யார் மீது வருகிறது என்பதுதான் முக்கியம்.

காதலில் ஜெயிக்க...

டீன் ஏஜில் ஓர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ எதிர் பாலினத்தவர்  மீது காதல் வரவில்லை என்றாலும் அது தவறு இல்லை. அப்போது அவர்கள் படிப்பின் மீதோ அல்லது வேறு ஏதேனும் மனதுக்குப் பிடித்த ஏதோ ஒரு நடவடிக்கையில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கலாம். ஆனால், எதிலுமே

காதலில் ஜெயிக்க...

ஈடுபாடு இல்லாமல், நண்பர்களிடம்கூடச் சரியாகப் பழகாதவர்களாக இருந்தால், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது நலம்.

தன்னிடம் உள்ள அன்பின் சதவிகிதத்தில் அதிக சதவிகித அன்பை யாரிடம் காட்டுகிறோமோ... அவரைத்தான் நாம் காதலிக்கிறோம். பொதுவாக, குழந்தைப் பருவத்தில் அம்மா மீது காதல் வரும்.  பதின் பருவத்தை அடையும்போது ஹார்மோன் மாற்றத்தினால், எதிர்பாலினர் மீது ஈர்ப்பு உருவாகும். திரைப்படம், வீட்டில் நடக்கும் சண்டை, நண்பர்கள் உடனான சேர்க்கை, சமூக முரண்பாடுகள் என அந்தப் பருவத்தில் நடக்கும் எல்லா விஷயங்களுமே மனதைப் பாதிக்கும். அதுவே டீன் ஏஜ் பருவத்தில் ஒருவர் மீதான ஈர்ப்பைத் தீர்மானிக்கும். பதின்பருவத்தில் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள்தான் இளைஞர், இளைஞிகளிடையே தன் மீதான கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது. அப்போதுதான், தலை வாராத பையன்கூடத் தலைவாருவதும், தங்களை அழகாக, சுத்தமாக வைத்துக்கொள் வதும் நடக்கும். இளைஞர்களுக்கு டெஸ்டோஸ்டீரான் (ஜிமீstஷீstமீக்ஷீஷீஸீமீ) என்ற ஹார்மோன் அப்போது அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கும்போது, அதுவரை பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தவர்கள்கூடத் தன்னை ஹீரோ போல் காதலிக்கு முன் காட்ட வேண்டும் என்பதால், தனது மன வலிமையைத் தனக்குத் தெரியாமலேயே கூட்டிக்கொள்வார்கள்.

##~##

ஆனால், 13 வயதில் வரும் காதலைவிட 24 வயதில் வரும் காதல்தான் முதிர்ச்சியாக இருக்கும். பள்ளிப் பருவத்தில் வரும் காதல் இருவரிடையிலான சந்தோஷ விஷயங்களை மட்டுமே பகிர்ந்துகொண்டு, எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்காது. இப்படியான பருவத்தில் காதல்வயப்பட்டு உடனடியாகத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இடையில்தான், மண வாழ்க்கையில் பெரும் சச்சரவுகள் உண்டாகும். உண்மையான காதலன் அல்லது காதலி என நீங்கள் உங்கள் துணையிடம் நிரூபிக்க எந்த வகையிலும் உங்கள் சுயத்தை இழக்காதீர்கள். எந்தச் சமயத்திலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்படி நீங்கள் இருக்கும்போது உங்கள் மீது உண்டாகும் ஈர்ப்புதான், 'எவர்லாஸ்டிங்’ ஈர்ப்பாக இருக்கும்.

காதல் என்பது ஒரு முறை பூக்கும் பூ கிடையாது. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பூக்கும். 8 வயதிலும் வரும்... 80 வயதிலும் வரும். அந்தந்த பருவத்துக்குரிய பக்குவத்துடன் அணுக வேண்டும்.  பொதுவாக கண்மூடித்தன மான அன்பு யார் மீதும் வைக்கக்கூடாது. அப்படி வைக்கும்போதுதான் காதலி பிரிந்துவிட்டால் தற்கொலை போன்ற எண்ணங்கள் தலைதூக்குகின்றன. சிலர் போதை வஸ்துகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள்.

முதலில் ஒன்றை உணருங்கள்... காதலில் உங்கள் அன்புக்குரியவர் பிரிந்துவிட்டால் அது உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் கிடையாது. அது பொதுவாகப் பலருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். உங்கள் மனதை உங்கள் வேலையின் மேல் திருப்பி வாழ்கையில் உயர்ந்து காட்டுங்கள்'' - தீர்க்கமாகச் சொல்லும் டாக்டர் ராஜாராம் கடைசி பஞ்ச்சாக இப்படிச் சொல்கிறார்.

''டீன் ஏஜ் பருவத்தில் காதல் செய்யுங்கள்; ஆனால் முடிவு எடுக்காதீர்கள்!'

- பி.விவேக் ஆனந்த்  

படங்கள்: ஜெ.முருகன்,

பீரகா வெங்கடேஷ், தே.தீட்ஷித்

காதலில் சொதப்பாமல் இருக்க...

காதலில் ஜெயிக்க...

புற அழகினால் வருவது காதல் இல்லை; அக அழகினால் வருவதுதான் காதல்.   கண்ணோடு மட்டும் அல்லாமல் மனதோடும் மனம்விட்டுப் பேசுங்கள்.

ரொம்ப பொசசிவ் ஆக இருக்காதீர்கள்.  உங்கள் காதலனோ, காதலியோ உங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டவர் அல்ல.

  சம்பந்தமே இல்லாமல் சந்தேகப்படாதீர்கள்.

  வெறும் காதல் மொழிகளை மட்டுமே பேசாமல், செயற்கையாக வாழாமல், அடுத்த கட்டத்தைப் பற்றிப் பேசி முடிவெடுங்கள்.

பிரச்னைக்கு உரிய விஷயங்களைத் தள்ளிபோடாமல், அதை உடனடியாகக் கலந்து ஆலோசித்து, தீர்வு கண்டுபிடியுங்கள்.

எந்தக் காரணம்கொண்டும் உங்கள் காதலரை அதீதமாக நம்பாதீர்கள். கல்யாணத்தின் முன்பு வரை எந்த நேரத்திலும் உணர்ச்சிவசப்படாதீர்கள்.

காதல் என்பது வெறும் ஊடல், கூடல் சார்ந்த விஷயம் மட்டுமே அல்ல. பொறுமையும், அன்பும், விட்டுக்கொடுத்தலும் இருக்க வேண்டும். அப்போதுதான் திருமணத்துக்குப் பிறகும் காதல் இனிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு