Published:Updated:

என்ன பாலிஸி எடுக்கலாம்?

என்ன பாலிஸி எடுக்கலாம்?

என்ன பாலிஸி எடுக்கலாம்?
##~##

''நாங்க எல்லாம் காலையில் சாப்பாட்டுக்குக் கடப்ப்பாறையை முழுங்குற வம்சம், என் உடம்புக்கு ஒண்ணும் ஆகாது, இன்ஷ§ரன்ஸ் எல்லாம் நமக்கு எந்தக் காலத்துலயும் தேவைப்படாது’ என்று விதண்டாவாதம் செய்பவர்கள் உண்டு. ஆனால் ஒரு திடீர்ப்பொழுதில் உடல்நலம் கெட்டுப்போய், மருத்துவச் செலவுகள் கையை மீறிப் போகும்போதுதான் தவறு கண்ணுக்குத் தெரியும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஓர் அளவுக்கு மேல் உதவுவார்களா என்ன? அந்த மாதிரித் தருணங்களில், தோள் கொடுக்கும் தோழனாக, உயிர் காக்கும் உறவாக, கவலையைப் போக்கும் கடவுளாக நிற்பது காப்பீடு மட்டும்தான். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்ஷூரன்ஸ் பற்றிய பல தவறான புரிதல்கள் இருக்கின்றன. இன்ஷூரன்ஸில்  முதலீடு செய்தால் சில பல வருடங்களுக்குப் பிறகு நிறையப் பணம் கிடைக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். அதாவது,

என்ன பாலிஸி எடுக்கலாம்?

இன்ஷூரன்ஸை ஒரு சிலர் முதலீடாகப் பார்க்கிறார்கள். இன்னும் சிலரோ, ''தேவை இல்லாமல் எதுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கணும்?'' என்று அதை அனாவசியச் செலவாகக் கருதுகிறார்கள். இரண்டுமே தவறு. இன்ஷூரன்ஸ் முதலீடும் அல்ல; செலவும் அல்ல. வருங்காலத்தில் ஏற்படும் அனாவசியச் செலவுகளில் இருந்து நம்மைக் காப்பதுதான் இன்ஷூரன்ஸ்.

இந்த இணைப்பு முழுவதும், விபத்து, மரணம், சிகிச்சை என்று உங்களை பயமுறுத்துவதுபோல், பதட்டப்படவைப்பது போன்ற விஷயங்கள் வரக்கூடும். சில விஷயங்களை அப்படி சொல்லித்தான் புரியவைக்க முடியும். எதிர்பாராத நோய்கள், மருத்துவ உதவி பெற முடியாமல் மரணம் நிகழக்கூடிய சம்பவம் என எதுவும் உங்களை வதைக்கக் கூடாது என்பதே எங்களின் பிரார்த்தனையும்.  

இந்த இன்ஷூரன்ஸ் பற்றிய விவரங்கள் முதலீட்டு நோக்கத்தில் அல்லாமல், ஆரோக்கியம் மற்றும் மிக முக்கியமான பாலிசிகளைப் பற்றிய விவரங்களைக் கொண்டதாக இருக்கும். உங்கள் எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக நிச்சயம் அமையும்.

இனி, வாழும் காலம் வரை வழிகாட்டியாக இருக்கும் இன்ஷூரன்ஸ் பற்றிய விவரங்கள் விரிவாக...

இன்ஷூரன்ஸ் பிரிவுகள்:

இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ். இந்த இரண்டிலும் பல வகையான பாலிசிகள் இருக்கின்றன. தனிமனிதனுக்கும், குடும்பத்துக்கும் ஏற்றவை என்று பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் குறிப்பிட்ட சில பாலிசிகளைப் பற்றி மட்டுமே நாம் இங்கே தெரிந்துகொள்வோம்.  

லைஃப் இன்ஷூரன்ஸ் டேர்ம் இன்ஷூரன்ஸ்:

என்ன பாலிஸி எடுக்கலாம்?

இன்ஷூரன்ஸ் எடுப்பதன் நோக்கமே, எதிர்பாராத அசம்பாவிதத்தில் இருந்து நம்மைக் காக்கத்தான். இன்ஷூரன்ஸ் எடுக்காத நபர், நோய்வாய்ப்பட்டு ஒருவேளை சிகிச்சை பலன் இன்றி, மரணம் அடைந்துவிட்டால், அதன் பிறகு அந்தக் குடும்பத்தினர் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியுமா என்பதே கேள்விக்குறிதான். அதன் பிறகு அந்தக் குடும்பத்தின் நிலைமை என்ன ஆகும்? குடும்பத் தலைவர் இறந்த பிறகு மீதமுள்ள காலத்தை நிம்மதியாகக் கழிக்க ஒரு பெரிய தொகை தேவைப்படுகிறது. அதற்கு இந்த 'டேர்ம் இன்ஷூரனஸ்’ எடுப்பதுதான் ஒரே வழி.

இந்த பாலிசியை வைத்து எந்த விதமான சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல இந்தப் பாலிசியில் இருந்து எந்தவிதமான முதிர்வுத் தொகையும் (அதாவது வருமானம்) கிடைக்காது. பிறகு எதற்கு இந்த பாலிசி என்று நினைக்கத் தோன்றும்.

ஒவ்வொரு வருடமும், ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருகிறோம். ஆனால், இறுதியில் எதுவுமே கிடைக்கவில்லை என்று நினைக்கும்போது, எதற்காக அந்தப் பாலிசியை எடுக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றும்.

இதில் மிகவும் குறைவான பிரீமியத்தில் அதிகத் தொகைக்கு பாலிசி எடுக்க முடியும். பாலிசி காலம் முழுவதும் பாலிசிதாரருக்கு எதுவும் நடக்காவிட்டால், எந்தவிதமான தொகையும் கிடைக்காது.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

குறைந்த பிரீமியம்... நிறைந்த கவரேஜ்:

இந்த பாலிசிக்காக நாம் செலுத்தும் ப்ரீமியம் மிகவும் குறைவு. உதாரணத்துக்கு 30 வயது நபர் 30 லட்சத்துக்கு டேர்ம் பாலிசி எடுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர், வருடத்துக்கு சுமார் 5,500 ரூபாய்க்கு பிரீமியம் செலுத்தினால் போதும். ஆனால், இதர என்டோவ்மென்ட் பாலிசிகளில் ஒரு லட்ச ரூபாய் பாலிசி தொகைக்கே சுமார் 5,000 ரூபாய் தேவைப்படும். 5,000 ரூபாய் பிரீமியத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கவரேஜ் எங்கே? 30 லட்ச ரூபாய் கவரேஜ் எங்கே?

எவ்வளவு தொகைக்கு?

குறைவான தொகைக்கு அதிக கவரேஜ் கிடைக்கிறது என்பதற்காக அதிகத் தொகைக்கு பாலிசி எடுக்க முடியாது. உயிருக்கு மதிப்பு கிடையாது என்று ஒப்புக்கொண்டாலும், அதிகத் தொகைக்கு பாலிசி எடுக்க முடியாது. அதே சமயம் நாம் குறைவாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவருடைய வருட வருமானத்தைவிட பத்து மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

ஏன் பத்து மடங்கு?

ஒருவருக்கு மாதம் 30,000 ரூபாய் வருமானம் என்று வைத்துக்கொண்டால், வருடத்துக்கு சுமார் 3.6 லட்சம் ரூபாய் வரும். 10 மடங்கு என்றால் 36 லட்சம் ரூபாய். சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுக்கிறோம் என்றால், பாலிசிதாரருக்கு எதாவது எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தால் அவரது குடும்பத்துக்கு 40 லட்சம் ரூபாய் கிடைக்கும். 40 லட்சத்துக்கு 9 சதவிகித வட்டி என்றால், வருடத்துக்கு 3.5 லட்சம் கிடைக்கும். அதாவது குடும்பத் தலைவர் இறந்தாலும், அந்தக் குடும்பத்தின் நிதிநிலைமையில் எந்த மாற்றமும் வரக் கூடாது என்பதற்காகத்தான் 10 மடங்குத் தொகை. மேலும், தொகையை தெரிந்து கொள்ளும்விதம் பற்றிய விவரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளது.

எவ்வளவு காலத்துக்கு?

ஹெல்த் பாலிசிகள் எல்லாமே நாம் வாழும் காலம் வரைக்கும் தேவைப்படும். காரணம் நாம் உயிருடன் இருக்கும் வரைக்கும் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். ஆனால், இந்த டேர்ம் பாலிசிகளை ஒருவர் ஒய்வு பெறும் வரைக்கும் அல்லது வருமானம் ஈட்டும் காலம் வரைக்கும் எடுத்துக்கொள்வது நல்லது. பொதுவாக 58 வயது வரைக்கும் நாம் வருமானம் ஈட்டுகிறோம் என்றால் அது வரைக்கும் பாலிசி

என்ன பாலிஸி எடுக்கலாம்?

எடுத்தால் போதுமானது. அதன் பிறகு ஏன் கூடாது என்று நினைக்கலாம்.  58 வயதில் நீங்கள் ஓய்வு பெற்றுவிடுவீர்கள். அதன் பிறகு வருமானம் என்பது இருக்காது. மேலும் மீதமுள்ள காலத்துக்கு என்ன செய்வது என்று திட்டமிட்டு இருப்பீர்கள். ஒருவேளை திட்டமிடாவிட்டாலும் வருமானமே இல்லாத காலத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவை இல்லை. அது அப்போது உங்களுக்குக் கூடுதல் செலவாக இருக்கும்.

டிப்ஸ்:

என்ன பாலிஸி எடுக்கலாம்?

 ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை நிறைய நிறுவனங்கள் இப்போது விற்கிறார்கள். இந்த பாலிசிகளை வாங்கும்போது ப்ரீமியம் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால், இதில் ஏஜென்ட் இருக்கமாட்டார்கள். அதனால், பிரீமியத் தேதியை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை க்ளைம் வாங்க நேரிட்டால், உங்கள் குடும்ப உறுப்பினர்களே நேரடியாகச் செல்லவேண்டி இருக்கும். இதற்குத் தயார் என்றால் ஆன்லைன் பாலிசிகளை வாங்கலாம்.

 சாதாரண டேர்ம் பாலிசியில் ப்ரீமியம் செலுத்திவருவோம். அசம்பாவிதம் நடந்தால், க்ளைம் கிடைக்கும். இல்லையெனில், எந்தத் தொகையும்  கிடைக்காது. இதனால் பலர் டேர்ம் பாலிசிகளை எடுப்பது இல்லை. அதனால், பிரீமியத்தைத் திருப்பித் தரும் பாலிசிகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அட, என்று ஆச்சர்யத்துடன் இந்த பாலிசிகளை வாங்க வேண்டாம். சாதாரண டேர்ம் பாலிசிகளைவிட இந்த பாலிசியில் பிரீமியம் தொகை இரண்டு மடங்கு இருக்கும். மேலும் 10, 20 வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் சொற்ப பிரீமியத் தொகையால் அதிகப் பயன் இல்லை. கூட்டிக் கழித்துப் பாருங்கள்: கணக்கு சரியாக வரும்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

ஜெனரல் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்:

சில காலத்துக்கு முன்பு கடுமையான நோய் என்றால், அது கேன்சர், பிரெய்ன் டியூமர் போன்றவையாகத்தான் இருந்தன. ஆனால், இப்போது சில மருத்துவமனைகள் கார்ப்பரேட்களாக மாறிவரும் சூழ்நிலையில், சாதாரண அசம்பாவிதங்களுக்காக மருத்துவமனைக்குச் சென்றாலே ஒரே நாளில் வாழ்நாள் சேமிப்பும் காலி என்கிற நிலை. சேமிப்பு என்பது எதிர்காலத் தேவைகளுக்காகத்தானே தவிர, மருத்துவச் செலவுகளுக்கு அல்ல.

அதற்காக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் நோய் வராது என்று அர்த்தம் அல்ல. எதிர்பாராத வகையில் சிகிச்சை எடுக்க நேரிட்டால், அதிகப் பணம் செலவழிக்காமல் இருப்பதற்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பயன்படும்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

என்ன கிடைக்கும்?

ஹெல்த் பாலிசிகளில் முதிர்வுத் தொகை எதுவும் கிடைக்காது. ஒவ்வொரு வருடமும் பிரீமியம் செலுத்திவருவோம். இடையில் சிகிச்சைக்குத் தேவைப்பட்டால், ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பயன்படுத்தி க்ளைம் வாங்கிக்கொள்ளலாம். 'நாம் நன்றாகத்தானே இருக்கிறோம்; நமக்கு என்ன வரப்போகிறது?’ என்ற அதிகபட்சத் தன்னம்பிக்கை வேண்டாம். என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

டூவிலர் மற்றும் கார் வைத்திருப்பவர்கள் மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள். அங்கேயும் இதே கதைதான். எந்த க்ளைமும் கிடைக்காது. வண்டி சேதம் அடைந்தால், க்ளைம் பெற முடியும். பலரும் இதை எடுப்பதற்குக் காரணம், இன்ஷூரன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்ட முடியாது என்பதுதான். ஆனால், அந்தக் கட்டாயம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் விஷயத்தில் இல்லை என்பதால் பலரும் எடுப்பதில்லை.

மூன்று வகை பாலிசிகள்:

தனிநபர் பாலிசி, ஃப்ளோட்டர் பாலிசி, குரூப் பாலிசி என மூன்று வகைகளில் ஹெல்த் பாலிசிகள் கிடைக்கின்றன.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

1.  தனிநபர் பாலிசி:

ஒருவர் 2 லட்ச ரூபாய்க்குப் பாலிசி எடுக்கிறார் என்றால், சம்பந்தபட்ட நபருக்குத் திடீரென்று எதாவது நடக்கும் பட்சத்தில், அவர் அதிக பட்சம் இரண்டு லட்ச ரூபாய் வரைக்கும் க்ளைம் செய்துக்கொள்ள முடியும். அதற்கு மேலே ஆகும் செலவுகளைக் கையில் இருந்துதான் கொடுக்க வேன்டும். 2 லட்ச ரூபாய்க்கு க்ளைம் வாங்கிக்கொள்ளலாம் என்றாலும், சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. மருத்துவமனையில் நீங்கள் எடுக்கும் அறை வாடகைக்கு ஓர் எல்லை இருக்கிறது. 2 லட்ச ரூபாய் பாலிசிக்கு ஒரு நாளைக்கு இவ்வளவுதான் அறை வாடகை என்று வரையறை செய்து இருப்பார்கள். அதற்கு மேல் சொகுசான அறையில் தங்கும்போது அதைப் பாலிசிதாரர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விதி அனைத்து வகையான பாலிசிகளுக்கும் பொருந்தும்.

2. ப்ளோட்டர் பாலிசி:  

ஒரு குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்கள் சேர்ந்து ஒரே பாலிசியாக எடுக்கும் வசதியை இந்த வகைப் பாலிசிகள் தருகின்றன. உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தில் நான்கு அங்கத்தினர்கள் சேர்ந்து 2 லட்ச ரூபாய் பாலிசி எடுக்கும்போது, இந்த இரண்டு லட்ச ரூபாயை அந்தக் குடும்பத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், தனிநபர் பாலிசியில் சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பயனடைய முடியும். மேலும், அந்தக் குடும்பத்தில் ஒருவர் 1,50,000 ரூபாயையும் இன்னொருவர் மீதமுள்ள 50,000 ரூபாயையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

3.  குரூப் பாலிசி:

மொத்தமாக ஓர் அலுவலகத்தில் இருப்பவர்கள் எடுப்பது. இந்த வகையான பாலிசிகளில் முதியவர்கள் மற்றும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்களை எளிதாக இணைத்துக்கொள்ள முடியும்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

புதுப்பித்தல் மிகவும் அவசியம்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதைவிட, அந்த பாலிசியைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்பது மிக அவசியம். ஏற்கனவே எடுத்திருக்கும் பாலிசி காலாவதி ஆகிவிட்டால், புதுப் பாலிசி எடுத்துக்கொள்ளலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நடப்பில் உள்ள பாலிசியைப் புதுப்பிப்பதனால், நிறைய சலுகைகள் நமக்குக் கிடைக்கும். பாலிசி எடுக்கும்போது இருக்கும் நோய்களுக்கு, குறிப்பிட்ட காலம் வரை க்ளைம் வாங்கிகொள்ள முடியாது. அது நோயின் தன்மையைப் பொருத்தும், பாலிசி எடுக்கும் நிறுவனத்தைப் பொருத்தும் இருக்கும். தொடர்ந்து பாலிசியைச் சீராகப் புதுப்பித்துவந்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெற முடியும். புதுப்பிக்கத் தவறும்பட்சத்தில் இந்தக் காலம் அதிகமாகிக்கொண்டே இருக்கும். மேலும், தொடர்ந்து பாலிசியைப் புதுப்பித்து வருகிறீர்கள் - அதே சமயம், எந்த க்ளைமும் வாங்கவில்லை என்றால், நோ-க்ளைம் போனஸ் உங்களுக்குக் கிடைக்கும். அதாவது க்ளைமே வாங்கவில்லை என்பதற்காக, நீங்கள் செலுத்தும் பிரீமியத்தில் சலுகையோ அல்லது உச்சவரம்பு அதிகரிக்கப்பட்ட பாலிசித் தொகையோ கிடைக்கும். மேலும் இலவசப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

எப்படி க்ளைம் வாங்குவது?

சிகிச்சைக்கு க்ளைம் பெறுவதில், இரண்டு வகைகள் இருக்கின்றன.

1.  நாம் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனமே தொகையைச் செலுத்திவிடுவது (Cashless).

2.  சிகிச்சை முடிந்ததும் நாம் பணத்தைச் செலுத்திவிட்டு, பிறகு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் பணத்தைத் திரும்பப் (Reimbursement) பெற்றுக்கொள்வது.

நம்மிடம்தான் மெடிக்ளைம் பாலிசி இருக்கிறதே... எதற்காகப் பணத்தைச் செலுத்திவிட்டு, அதன் பிறகு திரும்பப் பெற வேண்டும் என்ற நியாயமான கேள்வி உங்களுக்கு எழக்கூடும். இதற்குக் காரணம் இருக்கிறது. ஆங்காங்கே நிறைய மருத்துவமனைகள் இருப்பதால், அனைத்து மருத்துவமனைகளிலும் 'கேஷ்லெஸ்’ சிகிச்சை கொண்டுவருவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. சில மருத்துவமனைகள், சிகிச்சை பெறும் நோயாளியிடம் மெடிக்ளைம் பாலிசி இருக்கிறது என்ற காரணத்தினால், எவ்வளவு வேண்டுமானாலும் 'பணம் கறக்கலாம்’ என்று நினைத்து அதிகக் கட்டணங்களை வசூலிக்கின்றன. இதனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. அதாவது வாங்கும் பிரீமியத்தைவிட அதிகத் தொகையைச் செலவு செய்கின்றன. மொத்தமாக 100 ரூபாயை பிரீமியமாக வசூலித்தால், 125 ரூபாய்க்கு மேல் செல்வதாகக் கணக்கு சொல்கிறார்கள். எனவே இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும் ஒப்பந்தம் போட்டு 'கேஷ்லெஸ்’ முறையை வைத்திருக்கின்றன.

திடீரென எதாவது அசம்பாவிதம் நடக்கும்போது அது இன்ஷ§ரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனையா என்பதையெல்லாம் பார்க்க முடியாது. அதனால் எங்கு சிகிச்சை எடுக்க முடியுமோ, அங்கு எடுத்துக் கொள்ளவேண்டும். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அட்டையிலோ அல்லது உங்களது டாக்குமென்டிலோ பில்களை யாரிடம் கொடுக்க வேண்டும் என்ற பட்டியல் இருக்கும். அதன்படி பில்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கொடுத்துவிட்டால், அதிகபட்சம் 30 நாட்களுக்குள் க்ளைம் கிடைத்துவிடும்.  

சில விதிவிலக்குகள்:

நீங்கள் சிகிச்சை எடுப்பது க்ளினிக்கா அல்லது மருத்துவமனையா என்பதை முதலில் செக் செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கைகள் இருந்தால் மட்டுமே அதை மருத்துவனை என்று சொல்வார்கள்.

குறைந்தபட்சம் 24 மணி நேரம் சிகிச்சை எடுத்திருந்தால் மட்டுமே க்ளைம் கிடைக்கும். (ஆனால் சில கண் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு 24 மணி நேரம் என்பது கட்டாயம் கிடையாது.)

அழகு, பல், பிரசவம், மனநலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளிட்ட சில சிகிச்சைகளுக்கு க்ளைம் கிடைக்காது.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

வேலை வேறு, பாலிசி வேறு!

பெரும்பாலான அலுவலகங்களில் நிறுவனமே, பணியாளருக்கும் அவர் குடும்பத்துக்கும் ஹெல்த் பாலிசி எடுத்துக் கொடுத்துவிடுகிறது. அதனால் தனியாக ஒரு பாலிசி எடுத்துக்கொள்வதைப் பற்றிப் பெரும்பாலும் யாரும் யோசிப்பதில்லை. முன்பெல்லாம் ஒருவர், ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் ஓய்வு பெறும் வரையிலும் அதே நிறுவனத்தில்தான் இருப்பார். ஆனால், இப்போது வேலை மாறுவது என்பது சர்வசாதாரணம். மேலும், நிறுவனத்துக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் நீக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால், அலுவலகம் கொடுத்திருக்கும் பாலிசியை மட்டுமே நம்பி இருக்காமல், தனியாகக் குடும்பத்துக்கு ஒரு பாலிசியை எடுத்துக் கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது. எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளைச் சமாளிக்க இந்த பாலிசி உதவும்.

விபத்து காப்பீடு!

சாலைகளையும் விபத்துகளையும் பிரிக்கவே முடியாது. நாம் சரியாகச் சென்றாலும்கூட, எதிரே வருபவர் தாறுமாறாக வந்தால், நமக்குப் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. விபத்து நடக்காது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. ஆனால், விபத்து நடந்தால் ஏற்படும், சேதாரங்களுக்கு விபத்துக் காப்பீடுகள் உதவும்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

எது விபத்து?

சாலைகளில் ஏற்படுவன மட்டுமே விபத்துக்கள் அல்ல. படியில் இருந்து விழுவது, குளியலறையில் விழுவது, பாம்பு, நாய் கடிப்பது, சிலிண்டர் வெடிப்பது, தீ விபத்து உள்ளிட்டவை அனைத்துமே விபத்துதான். அதாவது நமக்குத் தெரியாமல் நடக்கும் அசம்பாவிதங்கள் அனைத்தும் விபத்துதான்.

அதேசமயம், குடித்துவிட்டு ஏற்படும் விபத்துகள், தற்கொலை முயற்சிகள் உள்ளிட்ட செயற்கையான விஷயங்கள் 'விபத்து’ என்ற வகையில் சேராது. இயற்கை மரணத்துக்கும் க்ளைம் கிடைக்காது.

என்ன கிடைக்கும்?

விபத்தின் மூலம் இறப்பவர்களின் வாரிசுகளுக்கு பாலிசித் தொகை  வாரிசுதாரருக்கு அப்படியே கிடைத்துவிடும். மேலும், கை, கால்கள் உறுப்புகள் சேதமடைந்து இருந்தால், எடுத்திருக்கும் பாலிசித் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத் தொகை பாலிசிதாரருக்குக் கிடைக்கும்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

ஒருவேளை பாலிசிதாரர் முற்றிலும் செயல்பட முடியாமல் இருந்தாலும்கூட, பாலிசித் தொகை கிடைக்கும். சில பாலிசிகளில், அடுத்த ஒரு வருடத்துக்கு குழந்தைகளின் கல்விக் கட்டணம், வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தவணைத் தொகை உள்ளிட்டவையும் கிடைக்கும்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

பிரிமியம் குறைவு

சில நிறுவனங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு 60 ரூபாய் மட்டுமே பிரீமியமாக வசூலிக்கிறார்கள். அதிகச் சலுகைகள் கொடுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் 10 லட்ச ரூபாய்க்கு 1,500 ரூபாய் வரைக்கும் பிரீமியமாக வசூலிக்கிறார்கள்.

டேர்ம் பிளான், விபத்துகாப்பீடு ஓர் ஒப்பீடு:

'நான் ஏற்கெனவே டேர்ம் பிளான் வைத்திருக்கிறேன். நான் எதற்காக விபத்துக் காப்பீடு எடுக்க வேண்டும்?’ என்ற கேள்வி எழக்கூடும். மரணம் அடையும் பட்சத்தில் இரண்டு பாலிசிகளுக்குமான தொகைகளைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், விபத்து நடக்கும் அத்தனை சமயங்களிலும் மரணம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே விபத்துக் காப்பீடும் மிக அவசியம்.

பயமும் அவசியம்

என்ன பாலிஸி எடுக்கலாம்?

ஒரு மனிதனுக்கு மிக அவசியமாக, வாழும்போது ஹெல்த் இன்ஷூரன்ஸ், எதிர்பாராத விபத்துகளுக்கு விபத்துக்காப்பீடு, வாழ்க்கைக்குப் பிறகு டேர்ம் இன்ஷ§ரன்ஸ் போன்றவை மிக அவசியம். இதைப் பார்க்கும்போது பயத்தின் வெளிப்பாடாகக்கூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், பயம் இருப்பதும் நல்லதுக்குத்தான். 'தைரியமாக இருப்பவன்தான் விமானத்தைக் கண்டுபிடிப்பான்’ என்றொரு சொலவடை உண்டு.

பயம் வரும்போதெல்லாம், 'யாமிருக்க பயம் ஏன்?’ எனக் கைகொடுப்பது இன்ஷூரன்ஸ்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். இக்கட்டான நேரத்தில் கிடைக்கும் உதவி இரட்டிப்பு உதவிக்குச் சமம். இன்ஷூரன்ஸ் திட்டங்களைச் சரியாக அணுகி இரட்டிப்பு உதவிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு நிம்மதியாக வாழுங்கள்.

அறிந்து கொள்ளுங்கள்:

பாலிசி எடுப்பது மட்டும் முக்கியம் அல்ல. நீங்கள் எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுத்திருக்கிறீர்கள், எங்கு யாரிடம் எடுத்திருக்கிறீர்கள், எதாவது அசம்பாவிதம் நடக்கும்போது யாரிடம் செல்வது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் உங்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லிவைப்பது மிகவும் அவசியம்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

அவசரகால நிதி!

நாம் போதுமான அளவுக்குப் பாலிசி எடுத்திருப்போம். அனைவரிடத்திலும் சொல்லியும் இருப்போம். ஆனாலும், அவசரகாலத் தேவைக்குக் கொஞ்சம் பணம் கைவசம் இருப்பது நல்லது. திடீரென காரில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருக்கலாம். மருந்து வாங்க வேண்டி இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது அவசரச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதற்காக எளிதில் எடுப்பதுபோலக் கொஞ்சம் பணம் கையிருப்பில் எப்போதும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று மாத சம்பளத் தொகையாவது வைத்திருப்பது நல்லது.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

இன்ஷூரன்ஸ்... முதலீடாகுமா?

நம் வாழ்நாளில் திடீரென எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இன்ஷூரன்ஸ்தான் கை கொடுக்கிறது.. பொதுவாகப் பணவீக்கத்துக்கு இணையாக அல்லது பணவீக்கத்தைவிட அதிகமாக வருமானத்தைத் தருவதையே முதலீடு என்கிறோம். ஆனால், இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும் வருமானம், 5 முதல் 6 சதவிகிதமாகவே இருக்கிறது. இதனுடன் ஒப்பிடும்போது வங்கி அல்லது தபால் நிலையங்களில் முதலீடு செய்தால், அதிகபட்சம் 9 சதவிகிதம் வரை வருமானம் கிடைக்கும். இந்த சூழ்நிலையில், 'இன்ஷூரன்ஸ் எடுப்பதால், ஓரளவுக்கு வருமானமும் கிடைப்பதுடன், எதிர்பாராமல் அசம்பாவிதம் ஏதேனும் நடந்தாலும் உங்களது பாலிசி தொகையும் கிடைக்கும்’ என்பார்கள். ஆனால், இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்புக்காக மட்டுமே எடுக்கவேண்டும். முதலீடுக்காக அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.

தொகையை எப்படித் தெரிந்துகொள்ள?

என்ன பாலிஸி எடுக்கலாம்?

  சிலர் அதிகத் தொகைக்கும், சிலர் குறைவான தொகைக்கும் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதற்கு காரணம், எவ்வளவு தொகைக்கு நாம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற அறியாமையால்தான். ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு வருமானம் கிடைக்க வேண்டுமானால், ஃபிக்ஸட் டெபாசிட்டில் எவ்வளவு தொகை இருக்க வேண்டுமோ, அதே அளவு தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, மாதம் 30,000 ரூபாய் பிக்ஸ்ட் டெபாசிட் மூலமாகக் கிடைக்க வேண்டுமானால், இன்றைய வட்டி விகிதப்படி (9%) கட்டாயம் 40 லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.

தோராயமாகச் சொல்ல வேண்டுமானால், ஒருவருடைய வருட சம்பளத்தைவிட, 10 மடங்குக்கு மேல் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதை பொது விதியாகச் சொல்லலாம். இருந்தாலும், வருங்காலத்தில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் பணவீக்கம் உயர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆண்டு வருமானத்தை விட, 12 முதல் 15 மடங்கு வரை இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது.

பிரிமீயம் எவ்வளவு?

என்ன பாலிஸி எடுக்கலாம்?

30 வயதுடைய ஆண் 30 வருடங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸில் 40 லட்ச ரூபாய் பாலிசி எடுத்தால், வருடத்துக்கு பிரீமியமாக தோராயமாக 6,800 ரூபாய் செலுத்தினால் போதும். இந்த பாலிசியில் கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம், முதிர்வுத் தொகை என்று எதுவும் கிடையாது. ஆனால், சில பாலிசிகளில் ஒவ்வொரு வருடமும் பிரீமியம் பணம் கட்டி வருவோம். இடையில் எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுத்தோமோ அந்தத் தொகையை பாலிசிதாரரின் நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு கிளைமாக வாங்கிக்கொள்ளலாம். ஒருவேளை அசம்பாவிதம் எதுவும் ஏற்படாவிட்டால், பாலிசி காலம் முடிந்தவுடன் பாலிசித் தொகையும் கொஞ்சம் போனஸும் சேர்த்துக் கொடுத்து முடிப்பார்கள்.

கவனம் தேவை

டேர்ம் இன்ஷூரன்ஸில் அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே கிளைம் கிடைக்கும். 'நாம் செய்யும் முதலீட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் எதற்காக அதைச் செய்ய வேண்டும்?’ என்ற 'நியாயமான கேள்வி’ நம் மனதில் எழலாம். ஆனால், அனைத்து இடங்களிலும் நமக்கு இப்படிக் கேள்வி எழுவதில்லை. உதாரணத்துக்கு 25 சதவிகித வட்டி, ஒரு லட்சம் கட்டினால் மாதம் 30,000 ரூபாய் தருகிறோம். ஈமு கோழி, ஃபாரெக்ஸ் டிரேடிங் என இன்னும்... இன்னும்... பல இடங்களில் ஆசை காட்டும்போது, இந்த மாதிரி நாம் யோசிப்பது இல்லை. வங்கியில் வட்டி ஆண்டுக்கு சுமாராக 10 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. அதைவிட சில சதவிகிதம் அதிக வட்டி என்றால், அந்த முதலீடு ஓரளவுக்கு ஓ.கே. என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் 30 சதவிகிதம் 40 சதவிகிதம் வட்டி நிச்சயம் என்ற விளம்பரத்தைப் பார்த்தவுடனே புறக்கணிப்பது மிக மிக நல்லது.

ஒரு எண்டோவ்மென்ட் பாலிசி எடுக்கிறோம். சில வருடங்கள் பிரீமியம் கட்டுகிறோம். ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் நாம் எடுத்திருக்கும் பாலிசித் தொகை மட்டும் நமக்குக் கிடைக்கும். ஆனால், எண்டோவ்மென்ட் பாலிசிக்குக் கட்டும் தொகையை டேர்ம் இன்ஷ§ரன்ஸுக்குத் தனியாகவும், முதலீட்டுக்குத் தனியாகவும் பிரிக்கும்போது, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் இன்ஷ§ரன்ஸ் எடுத்திருக்கும் தொகையும் நமக்குக் கிடைக்கும். அதே சமயம் அதுவரை நாம் முதலீடு செய்த தொகையும் நமது குடும்பத்துக்குக் கிடைக்கும்.

இரு சக்கர வாகனம், அல்லது காருக்கு இன்ஷ§ரன்ஸ் எடுக்கிறோம். ஒரு வருடம் பிரீமியம் கட்டுகிறோம். ஒருவேளை நாம் எதுவும் கிளைம் செய்யாவிட்டால், அவ்வளவுதான். அதற்காக அந்தப் பாலிசியை நாம் வேண்டாம் என்று ஒதுக்குவது இல்லை. காரணம் வாகனங்களுக்கு இன்ஷ§ரன்ஸ் எடுப்பது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. அதேபோலதான் டேர்ம் இன்ஷ§ரன்ஸும். நாம் நமது விருப்பத்துக்கு ஏற்ப டேர்ம் இன்ஷ§ரன்ஸ் எடுக்கிறோம். அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் க்ளைம் கிடைக்கும். இல்லை என்றாலும் பிரச்னை இல்லை. நாம் ஏற்கனவே செய்திருக்கும் முதலீடு நம்மைக் காக்கும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

பாலிசி + சேமிப்பு

'கடின உழைப்பாளிதான் வெற்றி பெறுவான் என்றால், இந்த உலகத்தில் அடிமைகள்தான் ஜெயிக்க முடியும். அவர்கள்தான் அதிகமாக உழைக்கிறார்கள்’ என்ற கூற்றைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நிஜத்தில் 'ஸ்மார்ட் வொர்க்’ செய்பவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். நாமும் அப்படியே இருப்போம். கஷ்டப்பட்டு ஒரு எண்டோவ்மென்ட் பாலிசிக்கு பிரீமியம் கட்டுவதைவிட, குறைந்த செலவில் ஒரு டேர்ம் பாலிசி எடுப்போம். மீதித் தொகையை சேமிப்புத் திட்டமாக வைத்துக்கொள்வோம்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

சங்கடமான சம்பவங்கள்:

சிலருக்கு நேர்ந்த சம்பவங்கள் சில ஆங்காங்கே சாம்பிளுக்குத் தரப்பட்டிருக்கின்றன. முதல் விஷயம், கிளைம் நிராகரிக்கப்பட்டாலும் பதற்றப்படாதீர்கள். என்ன காரணம், யார் காரணம் என்று ஆராயுங்கள்; அதைவிட முக்கியம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எங்கு பாலிசி எடுத்திருக்கிறோம். கிளைம் வாங்க யாரை அணுக வேண்டும், பணம் எங்கு இருக்கிறது, அல்லது எப்படித் திரட்டுவது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்துவைத்திருப்பது ரொம்பவே முக்கியம்.  காரணம், பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையில் நோயின்பிடியில் உள்ளே இருப்பார். வெளியே இருப்பவர்கள் இத்தனை வேலைகளையும் செய்து நோயாளியாகிவிடக் கூடாது அல்லவா?

* சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் இருந்தது அந்தக் கூட்டுக் குடும்பம். திடீரெனத் தன் அப்பா வெங்கட்ராமனுக்கு மாரடைப்பு ஏற்பட, பதறிப்போனார் சேகர்.  அருகில் இருந்த பெரிய மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.  அங்கு சிகிச்சை நடந்துகொண்டு இருந்தது. மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கதான் ஹெல்த் இன்ஷ§ரன்ஸ் எடுத்திருக்கிறோமே என்ற நிம்மதியுடன் இன்ஷ§ரன்ஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.  அவர்களும் அதற்கு ஒப்புதல் அளித்தனர்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

மருத்துவமனையில் அனுமதித்ததற்கான ஆவணங்கள் மற்றும் என்ன சிகிச்சை நடந்துகொண்டு இருக்கிறன என்பன உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் இன்ஷ§ரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இப்படி அனைத்தும் சரியாக இருந்தும்கூட, க்ளைம் கிடையாது என்று இன்ஷூரன்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டது. காரணம், ஆவணங்களில் இருந்த பெயரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்கள் தந்த பெயரும் வேறு வேறாக இருந்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கும்போது, வீட்டில் அழைக்கும் வேங்கடன் என்ற பெயரையே மருத்துவமனை ஊழியர்களிடம் உறவினர் சொல்லி இருக்கிறார். அவர்களும் அதையே நோயாளியின் பெயராகப் பதிவு செய்துவிட்டனர். அதன் பிறகு, மீண்டும் அனைத்து ஆவணங்களிலும் பெயரை மாற்றி க்ளைம் வாங்க வேண்டியதாயிற்று! கிட்டத்தட்ட அப்பாவின் நிலையை நினைத்துப் பயமும், க்ளைம் கிடைக்குமா என்ற பதட்டமும் பாடாய்ப்படுத்திவிட்டது என்பதுதான் வேதனை.

இன்ஷூரன்ஸில் என்ன விவரங்களை கொடுத்திருக்கிறோமோ, அதன்படியே நோயாளியின் பெயர், இனிஷியல், முகவரி என அனைத்தையும் தெளிவாகப் பதிவு செய்யவேண்டியது மிகவும் முக்கியம்.

* சமீபத்தில் அவசர சிகிச்சைக்காக ஒருவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரது பெயரைக் கேட்டபோது, ராதா என்று சொல்லி இருக்கிறார்கள்.  உடனே அனுமதியும் தந்துவிட்டார்கள். ஆனால், மருத்துவமனையில் நோயாளியின் பெயரைக் கேட்டவர் ஓர் ஊழியர். அதை ஆவணப்படுத்தியவர் இன்னொரு ஊழியர். ராதா என்ற பெயரைக் கேட்டவுடன் அது பெண்ணாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, மருத்துவக் கோப்பில் பெண் என்று குறிப்பிட்டுவிட்டார். பிறகு க்ளைம் பெறுவதற்காக ஆவணங்களை அனுப்பியபோது, பாலிசி எடுத்திருப்பது ஆணுக்கு.  ஆனால், சிகிச்சை நடப்பது பெண்ணுக்கு என்று சொல்லி நிராகரித்துவிட்டார்கள். அதன் பிறகு, இது மருத்துவமனையில் நடந்த தவறு என்பதை விளக்கிச் சொல்லி க்ளைம் வாங்கப்பட்டது.

மதி, சூர்யா, ஜோதி, ஜீவா, சத்யா, உதயா, பாரதி, ரமணி போன்ற பெயர்கள் இருபாலருக்கும் வைக்கப்படுகின்றன. அதனால், ஆவணங்களில் குறிப்பிடும்போது கவனமாகக் குறிப்பிட வேண்டும்.

என்ன பாலிஸி எடுக்கலாம்?

* கார்மேகம் என்பவர் பாலிசி எடுத்து நான்கு வருடங்கள் ஆகின்றன. தொடர்ந்து தவறாமல் பிரீமியம் செலுத்தி பாலிசியை நடப்பில் வைத்திருக்கிறார். ஒரு சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும்போது, 'உங்களுக்கு இந்தப் பிரச்னை எத்தனை நாட்களாக இருக்கிறது?’ என்று கேட்டிருக்கின்றனர். 5 மாதங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், அதை ஆவணப்படுத்தும்போது 5 வருடங்கள் என்று டிக் செய்துவிட்டார். இந்த 'ஒரு டிக்’ தான் மொத்த க்ளைமும் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாகிவிட்டது.

'பாலிசி எடுத்தே நான்கு வருடங்கள்தான் ஆகிறது. ஆனால், அதற்கு முன்பிருந்தே உங்களுக்கு இந்த நோய் இருந்திருக்கிறது. அதனால், க்ளைம் தர முடியாது’ என்று சொல்லிவிட்டனர். அதன் பின்னர் பெரும் போராட்டத்துக்கு பிறகு டாக்டரிடம் மீண்டும் சான்றிதழ் பெற்று, மருத்துவமனையில் ஆவணப்படுத்தியதில் ஏற்பட்ட தவறுதான் காரணம் என்று நிரூபித்து க்ளைம் வாங்க வேண்டியதாயிற்று.

* க்ளைம் கொடுக்கும் அதிகாரிகளும் தவறு செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன. எதிலும் முன்னெச்சரிக்கை, கவனம் அவசியம்.

தொகுப்பு: வாசுகார்த்தி

படங்கள்: ஜெ.தான்யராஜு,

ஜெ.வேங்கடராஜ்,

ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்