Published:Updated:

நான் செத்துப் பிழைச்சவன்டா... பலே பலே பாலாஜி!

நான் செத்துப் பிழைச்சவன்டா... பலே பலே பாலாஜி!

நான் செத்துப் பிழைச்சவன்டா... பலே பலே பாலாஜி!

நான் செத்துப் பிழைச்சவன்டா... பலே பலே பாலாஜி!

Published:Updated:
##~##

சென்னையைச் சேர்ந்த 29 வயது நடனக் கலைஞர் பாலாஜி. நடனப் பள்ளி தொடங்க வேண்டும் என்பது அவரது லட்சியம். அதற்காக, சென்ற பிப்ரவரி மாதம், தன் நண்பர்களோடு புதிதாகத் தொடங்க இருந்த நடனப் பள்ளிக்கு ஒரு ஃப்ளெக்ஸ்போர்டை பொருத்த முயற்சித்தார். எதிர்பாராத விதமாக அந்த ஃப்ளெக்ஸ்போர்டு, அருகில் இருந்த மின் கம்பிகளின்மீது சாய, மறுநொடியே, பாலாஜியின் உடல் முழுவதும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார். சுற்றியிருந்த நண்பர்கள், பாலாஜியின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதைப் பார்த்துப் பதறினார்கள். அடுத்த 15-வது நிமிடத்தில் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவர்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு நின்றுபோன இதயம், மீண்டும் துடிக்க ஆரம்பிக்க, இப்போது பாலாஜி, அதே பழைய பாலாஜியாக உற்சாகத்துடன் இருக்கிறார். இது ஏதோ சினிமா கதை அல்ல... 100 சதவிகித நிஜம்!

நான் செத்துப் பிழைச்சவன்டா... பலே பலே பாலாஜி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''ஃப்ளெக்ஸ்போர்டை மாட்டினது மட்டும்தான் என் நினைவில் இருக்கு. அதுக்கப்புறம் எனக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியலை. எல்லாமே கனவு மாதிரி இருக்கு. ஆஸ்பத்திரியில் இருக்கும்போதுதான்

நான் செத்துப் பிழைச்சவன்டா... பலே பலே பாலாஜி!

என்னைச் சுத்தியிருந்த நண்பர்களையும் உறவினர்களையும் ஓரளவுக்கு அடையாளம் தெரிஞ்சது. டாக்டர்களோட பெரும் முயற்சியால்தான் நான் இன்னிக்கு உயிரோட இருக்கேன். இப்ப காலில் மட்டும் வலி இருக்கு. அதுவும் கூடிய சீக்கிரமே சரியாகிடும். என்னை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்த நண்பர்களுக்கும், என்னை எனக்கே மீட்டுத் தந்த டாக்டர்களுக்கும் ஆயுசுக்கும் கடமைப்பட்டிருக்கேன். இனிமேல் கரன்ட் விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். அடுத்த மாசத்துல என்னோட டான்ஸ் ஸ்கூலை ஆரம்பிச்சுடுவேன். கூடிய சீக்கிரத்தில் பழையபடி டான்ஸ் ஆடுவேன்'' என்கிறார் நம்பிக்கையுடன்.  

பாலாஜிக்கு சிகிச்சை அளித்த மியாட் மருத்துவமனை டாக்டர் நிஷித் நம்முடன் பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள்: ''பாலாஜியைக் கொண்டுவந்தபோது, அவருக்குச் சுவாசமும் இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுபோய் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். 15 நிமிடங்களாகவே அவரது இதயம் துடிக்காமல் இருப்பதையும் உணர்ந்தோம். உடனே, முடிந்த அளவு, அவரது மார்புக் கூட்டை வேகமாக அழுத்திப்பார்த்தோம். மின்அதிர்வு சிகிச்சையும் கொடுத்தோம்.

நான் செத்துப் பிழைச்சவன்டா... பலே பலே பாலாஜி!

தொடர்ந்து பத்து நிமிடங்களாக இந்த சிகிச்சைகளை மாற்றி மாற்றிச் செய்ததில் அவரது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. ஆனால், இதயத் துடிப்பின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், பலவீனமாகவும் இருந்தது. அவரது ரத்த அழுத்த நிலையைச் சீராக்க, அவருக்கு நவீன லைஃப் சப்போர்ட் சாதனங்களும் மருந்துகளும் கொடுத்தோம். இருந்தும் பலன் இல்லாமல் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு, இதயத்தை மீண்டும் துடிக்கவைத்தோம். அப்போதும் இதயத்துடிப்பு பலவீனமாகவே இருந்தது. மேற்படி சிகிச்சைக்காக அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றி, தமனிகள் மற்றும் நாளங்கள் 'கேன்யுலேட்’ (CANNULATE) செய்தோம். (புனல் போன்ற உபகரணங்களைப் பொருத்துவது) உறைவெப்பநிலை திரவம் செலுத்தி, அவரது உடலை ஐஸ் கொண்டு பேக் செய்து, 92 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழ் வெப்பநிலையைக் கொண்டுசென்றோம். இதற்கு 'தெரப்பியூட்டிக் ஹைபோதெர்மியா’ (THERAPEUTIC HYPOTHERMIA) என்று பெயர். இந்த சிகிச்சைமுறை மூளையின் அனைத்து செயல்பாடுகளையும் குறைக்கும். இதனால் மூளை சேதமடைவதைத் தவிர்க்க முடியும். இந்த நிலையிலேயே பாலாஜி இரண்டு நாட்கள் இருந்தார். மூன்றாவது நாள் அவரது இதயம் சீராகி, சகஜ நிலைக்கு வந்தது. ஆனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் முற்றிலும் தடைபட்டு இருந்தது. மயக்க மருந்துகளை நிறுத்தியதால், அவருக்குத் தொடர்ந்து வலிப்புகள் ஏற்பட்டன. பாலாஜியின் நிலைமை கவலைக்கிடம் என்பதை அவரது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தினோம். ஏழாவது நாள் முதன்முறையாக பாலாஜி கண்களைத் திறந்தார். இதுவே ஒரு நல்ல அறிகுறியாக எங்களுக்குத் தோன்றியது. மருத்துவக் குழுவினர் தொடர்ந்து முயற்சித்து, ட்ரெக்கியாஸ்டமி எனும் கழுத்தில் துளையிடுதல் சிகிச்சை மேற்கொண்டோம். அப்போது, அவருக்குத் தொடர்ந்து வலிப்பு இருந்ததால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் மருத்துவக் குழுவின் விடாமுயற்சிக்குப் பிறகு வலிப்பு முற்றிலுமாக நின்று, இரண்டே வாரத்தில் பாலாஜி லேசாகப் பேச ஆரம்பித்தார். ஆனால், அவரது கை, கால்களில் பலம் இல்லை. அடுத்த சில நாட்களில் அவரால் கைகளை நன்றாக அசைக்க முடிந்தாலும், கால்கள் தொடர்ந்து பலவீனமாகவே இருந்தன. அடுத்த வந்த நாட்களில் நன்றாகப் பேசினார். முழு சுய உணர்வு திரும்பியது. கைகளை முழுமையாகப் பயன்படுத்தும் நிலைக்குத் திரும்பினார்.  கால்கள் மட்டும் லேசான பலவீனத்துடன் இருந்தன. அந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்போது கால்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. விரைவிலேயே அவர் தனது நடனப் பள்ளியை ஆரம்பிப்பார். எங்களின் சிகிச்சையோடு அவருக்கு இருந்த மன உறுதியும்தான் அவரை மறு ஜென்மம் எடுக்க வைத்திருக்கிறது'' என்றார் டாக்டர் நிஷித் நெகிழ்ச்சி மேலிட.

நிச்சயம் மீண்டும் ஆட வருவார் இந்த 'மின்சார’க் கண்ணன்!

உ. அருண்குமார்