Published:Updated:

சம்மரை சமாளிக்க... ஜாலி டூர் பிளான்!

சம்மரை சமாளிக்க... ஜாலி டூர் பிளான்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஸ்கூல் லீவ் விட்டாச்சு. எவ்வளவு நாள்தான் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க முடியும்? குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரு அவுட்டிங் போய்விட்டு வந்தால்தானே புத்துணர்ச்சி ஏற்படும். அதற்குத்தான் இருக்கவே இருக்கே சம்மர் டூர். ஏற்கெனவே பிளான் செய்யாமல் விட்டுவிட்டால் கடைசி நிமிடத்தில் டிக்கெட் முதல் எல்லாவற்றிலும் டென்ஷன்தான். எனவே, மே, ஜூன் மாதங்களைக் கொண்டாட சுற்றுலாச் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான டிப்ஸ். 

திட்டமிடுங்கள்!

சுற்றுலாச் செல்லும் இடம், சுற்றுலாவுக்கான செலவுகள், பயண நேரம், பயணத் தேதி, பாதுகாப்பு வசதிகள், தங்கும் இடங்கள்குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது  அவசியம். காரில் செல்வதாக இருந்தால், நன்கு அனுபவம் உள்ள டிரைவரை அமர்த்திக் கொள்வது நல்லது. சென்று பார்க்க வேண்டியவை எந்தெந்த இடங்கள் என்பதை முதலில் தெளிவாகப் பட்டியலிட்டுவிட வேண்டும். மனதுக்குப் பிடித்த இடத்துக்குப் போவதுதான் மகிழ்வைத் தரும். கூட்டம் பிதுங்கி வழியும் இடங்களைத் தவிர்த்துவிட்டு அமைதியான அருமையான இடங்களுக்குச் சென்று வருவதே புத்திசாலித்தனம்.

சம்மரை சமாளிக்க... ஜாலி டூர் பிளான்!

பாதுகாப்பான சுற்றுலாவுக்கு சில டிப்ஸ்!

பயணம் செய்வதற்கு ஏற்ற நேரம் பகல்தான். இரவு நேரப் பயணம் பாதுகாப்பானது அல்ல. கூடுமானவரையில் பகலில் பிளான் செய்யலாம்.

நீ‌ங்க‌ள் சு‌ற்றுலாச் செ‌ல்ல உத்தேசித்திருக்கும்  இட‌ங்க‌ள் பாதுகா‌ப்பானவையா எ‌ன்பதை முத‌லி‌ல் தெ‌ரி‌ந்துகொ‌ள்ளு‌ங்க‌ள். அபாய‌ம் ‌நிறை‌ந்த இட‌ங்கள் சு‌ற்றுலாவுக்கு உகந்தவை அல்ல. அ‌திலு‌ம் சிறுவர்களுட‌ன் இதுபோ‌ன்ற இட‌ங்களு‌க்கு‌ச் செ‌ல்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுடன் டூர் செ‌ல்பவ‌ர்க‌ள், தங்கும் இடங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொண்டால் கடைசி நேரத் தடுமாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்காது.

‌வன‌ப் பகு‌தி‌க்கு‌ச் செல்வதாக இருந்தால், அ‌‌ங்‌கு இ‌ரு‌க்கு‌ம் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றின் தன்மைகள்பற்றி அறிந்துவைத்திருப்பது நல்லது. ‌

‌நீ‌ர் ‌நிறை‌ந்த கடல், ஆறு, நதி போன்ற  பகு‌திகளு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம்போது‌ 'ஆழமறியாமல்’ காலை  விடுவது ஆபத்தானது. இத்தகைய 'நீர் விளையா‌ட்டுகள்' ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.  ‌நீ‌ர்‌நிலைகளை‌ப் பார்த்து ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்வது நல்லது.

சம்மரை சமாளிக்க... ஜாலி டூர் பிளான்!

சு‌ற்றுலாச் செ‌ல்லு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் த‌ண்‌ணீ‌ர் சுகாதாரமானது என்பதற்கு  எந்த உத்தரவாதமும் இல்லை. கைக்குக் கிடைத்ததை எல்லாம் குடி‌ப்பதை‌த் த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள். த‌ண்‌ணீ‌ரால் பரவு‌ம் ‌வியா‌திக‌ள்தா‌ன் ஏராளம். இதனா‌ல் ‌நீ‌ங்க‌ள் மோசமான நோ‌ய்களின் தாக்கத்துக்கு உள்ளாக  நேரிடலாம். வரும்முன் காப்பது நல்லதல்லவா? எனவே பாதுகா‌ப்பான, சுத்திகரிக்கப்பட்டத் த‌ண்‌ணீரைத் தேடி வாங்கி குடியு‌ங்க‌ள்.

பழங்களில் மிளகாய்த் தூள் தூவி சாப்பிடுவதைத் தவிருங்கள். சமைக்காமல் மிளகாய்த்தூளை உட்கொள்வதால் வயிற்றுப் புண் முதல் புற்றுநோய் வரை கொண்டுபோய்விடும். ஹோட்டல்களில் சாப்பிடும்போது அதிககாரமற்ற, எளிதில் செரிமானமாகும் உணவாகச் சாப்பிடுங்கள்.

‌வெயில் அதிகமாக இருந்தால் சன்ஸ்ட்ரோக், மயக்கம், தலைச்சுற்றல் ஏற்படும். சிலருக்கு அம்மையும் ஏற்படும். எனவே வெய்யில் நேரங்களில் சன்ஸ்கிரீன் லோஷன்கள் உபயோகப்படுத்தலாம். தொப்பி அணிந்துகொள்ளலாம்.

கறுப்பு குடை பயன்படுத்துவதைவிட வெள்ளை குடைகள் அல்லது வேறு கலர் குடைகள் பயன்படுத்தலாம். கூடுமானவரையில் காட்டன் உடைகள் அணிவது நல்லது. சிந்தடிக் உடைகளை அணியக்கூடாது. உள்ளாடைகளும் காட்டனில்தான் அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகள், அசௌகரியமான உடைகள் பயணத்தின் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும்.

நீ‌ங்க‌ள் த‌ற்போது எ‌ந்த இட‌த்‌தி‌ல் பய‌ணி‌த்து‌க்கொ‌ண்டு இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்பதை உ‌ங்களது ந‌ண்ப‌ர் அ‌ல்லது உற‌வி‌ன‌ர் ஒருவரு‌க்காவது அ‌வ்வ‌ப்போது தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ண்டிரு‌ப்பது ந‌ல்லது.

சம்மரை சமாளிக்க... ஜாலி டூர் பிளான்!

பத்து நா‌‌ட்களு‌க்குமே‌ல் உங்கள் வெளியூர் சு‌ற்றுலா அமைவதாக இருந்தால், அரு‌கி‌ல் உ‌ள்ள காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌வி‌ட்டு‌ச் செ‌ல்வது உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டின் பாதுகா‌ப்புக்கும், உங்கள் நிம்மதிக்கும் உதவு‌ம்.

அலுவலக‌த்‌தி‌ல் ‌விடுமுறை எடு‌த்து சு‌ற்றுலாச் செ‌ல்வதாக இரு‌ந்தா‌ல், முடி‌க்க வே‌ண்டிய வேலைகளைத்  திட்டமிட்டு முழுமையாக முடி‌த்து‌விடு‌ங்க‌ள். அரைகுறை வேலைகளுடன் கிளம்பினால் இது பற்றிய அலுவலகத் தொலைபேசி அழைப்புகள் உங்களைப் பின்தொடர்ந்து தொல்லைப்படுத்திக்  கொண்டே இருக்கும்.

சுற்றுலாவேளையில் பெண்கள், குழந்தைகள் நிறைய நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பணத்தைக் கையில் எடுத்து செல்லாமல், ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவது நல்லது. அ‌‌திக ‌விலை ம‌தி‌ப்பு உள்ளப் பொரு‌ட்களை எடு‌த்து‌ச் செ‌ல்வதை த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள். தேவைய‌ற்ற டெ‌பிட், ‌கிரெடி‌ட் கா‌ர்டுகளையு‌ம் பாதுகா‌ப்பாக உ‌ங்க‌ள் ‌வீ‌‌ட்டிலேயே வை‌த்துவிடுவது ந‌ல்லது.

பயண‌த்‌தி‌ன்போது பாதுகா‌ப்ப‌ற்ற‌‌ச் சூழலை ‌நீ‌ங்க‌ள் உண‌ர்‌ந்தா‌ல் உடனடியாக அரு‌கி‌ல் இரு‌க்கு‌ம் காவ‌ல் துறையையோ அ‌ல்லது அரு‌கி‌ல் இரு‌ப்பவ‌ர்களையோ உத‌விக்கு அழை‌க்கலா‌ம்.

சம்மரை சமாளிக்க... ஜாலி டூர் பிளான்!

அவரவரின் உடைமைகளை அவரவரே  பாதுகா‌த்துக்கொள்ளும்படி அ‌றிவுறு‌த்து‌ங்க‌ள். உதாரணமாக ஒருவரின் பயணப் பை தொலை‌ந்து‌வி‌ட்டது எ‌ன்று பயணங்களில் அடித்துப் பிடித்துத் தேடுவது‌ம், கவலை‌ப்படுவது‌ம் இதன்மூலம் த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.

முதலுதவிப் பெட்டி

சுற்றுலாப் போகும்போது முதலுதவி பெட்டி ஒன்றில் அயோடின், பேன்டேஜ், டேப், கொசுவத்தி, எலெக்ட்ரோலைட்ஸ், ஆன்டிபயோடிக் ஆயின்ட்மென்ட்ஸ், டயேரியா தடுப்பு மருந்து, காய்ச்சல், வலி நிவாரணி முதலான முதலுதவி மருந்துகளை உரிய மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.  பூச்சிகள் கடிக்காமல் இருப்பதற்கும், பூச்சி கடித்தால் போடுவதற்கும் என கிரீம்கள் இருக்கின்றன. வனப் பிரதேசங்களுக்குச் சுற்றுலாச் செல்வதாக இருந்தால் அவசியம் இவற்றையும் வாங்கிச் செல்லுங்கள்.

ஓ.கே. ரைட்... இந்த டிப்ஸை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... ஜாலியாக சந்தோஷமாக விடுமுறையை கொண்டாடுங்கள்!

- உமா ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு