Published:Updated:

வந்தது கேன்சர்... தந்தது நம்பிக்கை!

வந்தது கேன்சர்... தந்தது நம்பிக்கை!

##~##

லையாளப் படங்களில் நகைச்சுவை வேடத்தில் கலக்கி, குணச்சித்திர வேடங்களில் பின்னிப் பெடலெடுத்தவர் நடிகர் இன்னொசன்ட். தமிழில் 'லேசா லேசா’ என்ற ஒரே படத்தில் நடிகர் விவேக்கைத் துரத்தித் துரத்திக் கடன் வசூலிக்கும் கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். இதுவரை பல்வேறு இந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இன்னொசன்ட், ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். மேலும், கேரள நடிகர்கள் சங்கமான 'அம்மா அசோஸியேஷன்’ அமைப்பில் கடந்த 13 ஆண்டுகளாக இவரே தலைவர். 

இப்படிப் பலப் பெருமைகளைக்கொண்ட 65 வயதான இன்னொசன்ட்டுக்கு, சில மாதங்களுக்கு முன்பு தொண்டைப் புற்றுநோய் பிரச்னை வந்தது.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சில மாதங்களுக்கு முன்னாடி எதைச் சாப்பிட்டாலும், அது தொண்டையிலேயே தங்கி இருப்பது மாதிரி ஓர் உணர்வு இருந்தது. டாக்டர்கிட்டே போனேன். அவர் டெஸ்ட் செய்து பார்த்துட்டு,

வந்தது கேன்சர்... தந்தது நம்பிக்கை!

தொண்டையில் பந்து மாதிரி இருக்குன்னு சொல்லி, அதை ஆபரேஷன் செய்து எடுத்து லேபுக்கு அனுப்பிட்டார். அப்புறம் ஷூட்டிங்ல பிஸியாகியிட்டேன். டாக்டர் எனக்கு போன் பண்ணி நாளைக்கே ஆஸ்பத்திரிக்குக் கிளம்பி வாங்கனு சொன்னார். அப்பவே எனக்கு லேசாப் புரிஞ்சுடுச்சு. அதனால், ரொம்பப் படபடப்பா இருந்தேன். என்ன பண்றதுன்னே தெரியலை. ரிலாக்ஸ் பண்ணிக்க பாத்ரூம் பக்கம் போனேன். 'டேய் கேன்சருக்குப்போய் பயப்படறியே இன்னொசன்ட்?! நீ இங்கேயே கிட. எனக்கு இன்னும் ரெண்டு சீன் பாக்கி இருக்கு. நடிச்சுட்டு வந்துடுறேன்’னு எனக்கு நானே தைரியம் சொல்லிக்கிட்டு, பாத்ரூமை விட்டு வெளியில் வந்தேன். அந்த ரெண்டு சீனையும் நல்லபடியா முடிச்சுக் கொடுத்துட்டு, மறுநாள் டாக்டரைப் போய் பார்த்தேன். எனக்கு வந்திருக்கிறது கேன்சர் கட்டினு டாக்டர் சொன்னார். இந்த கேன்சருக்கு 'நான் ஹாட்ஜ்கின்ஸ் லைஃபோமா’னும் (Non Hodgkin’s Lymphoma) சொன்னார்.''

''கேன்சர் என்று தெரிந்ததும் எப்படி எதிர்கொண்டீங்க?''

''எனக்கு கேன்சர்னு தெரிஞ்சதும், பெருசாக் கவலைப்படலை. கீமோதெரபி எடுத்துக்கிட்டேன். தொடர்ந்து

வந்தது கேன்சர்... தந்தது நம்பிக்கை!

மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டேன். தைரியமா இருந்தேன். சில மாதங்களிலேயே கேன்சர் குணமாச்சு. கீமோதெரபியால் உதிர்ந்த தலைமுடி திரும்பவும் முளைக்க ஆரம்பிச்சது. எனக்கு கேன்சர் குணமான சந்தோஷத்துடன், குடும்பத்துடன் வெளிநாடு கிளம்புறதுக்கு முன்னாடி, என் மனைவி ஆலிஸுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குனு தெரியவந்தது. என் மனைவிதான் ரொம்பவே பயந்தாங்க. அவங்களைத் தைரியப்படுத்தி, ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போய், தேவையான மருத்துவ உதவிகள் செய்து, சுமார் 200 கிராம் அளவு கேன்சர் கட்டியை ஆபரேஷன் மூலம் அகற்றினாங்க. இப்ப நாங்க ரெண்டு பேருமே நல்லாயிருக்கோம்.''

''எப்படி இவ்வளவு சாதாரணமா, கேன்சரை எதிர்கொள்ள முடிந்தது?''

''எனக்கு கேன்சர் வந்ததும் நிறையப் பிரபலங்கள் என் வீடு தேடி வந்து என்னைப் பார்த்துட்டுப் போனாங்க. ஒருநாள், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் என் வீட்டுக்கு வந்திருக்கும்போது உங்களை மாதிரிதான் அவரும் கேட்டார். அப்ப நான் சொன்னேன், 'சார் கேன்சர் வந்தது ஒருவகையில் எனக்கு நல்லதோனு தோணுது, கேன்சர் வந்ததால்தான் பெரிய பெரிய நடிகர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் வீடு தேடி வந்து என்னைப் பார்த்துட்டுப் போறாங்க. இதுக்கு நான் எவ்வளவு கொடுத்துவெச்சிருக்கணும். இன்னும் சொல்லப்போனால், இந்த கேன்சர் கொஞ்சம் லேட்டாகவே சரியாகட்டும்; இன்னும் நிறையப் பேர் வரவேண்டி இருக்கு’னு சொன்னேன். அவர் சத்தமாச் சிரிச்சுட்டார். நான் எதையுமே பாசிட்டிவா எடுத்துக்கிற ஆள்; இந்த சாதாரண கேன்சரால் என்னை எதுவுமே செய்ய முடியாது.''

''இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்க சொல்றது என்ன?''

''தனக்கு நோய் வந்தால், உடனே நிறையப் பேர் கோயில், பிரார்த்தனை, பரிகாரம், பூஜை, மாந்திரீகம்னு மட்டுமே இருந்துடுவாங்க. இன்னும் சிலர் போலி ஆசாமிகள்கிட்ட சிக்கி, அவங்க தரும் லேகியங்களைச் சாப்பிட்டு ஏமாந்திடுவாங்க. வழிபாடுகளைத் தப்புன்னு சொல்லலை. அது அவங்கவங்க நம்பிக்கை. ஆனால், அதை மட்டுமே நம்பிக்கிட்டு இருந்துடக் கூடாது. காலம் மாறிப்போச்சு. இன்னைக்கு இருக்கும் அறிவியல் உலகத்தில், கிட்டத்தட்ட எல்லா வியாதிகளுக்குமே தீர்வு இருக்கு. நோய் வந்தால், முதலில் டாக்டரைப் பாருங்க. அவர் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளை எடுத்துக்குங்க. வந்த நோயைப் பத்தியே வருத்தப்படாதீங்க. எதையும் தன்னம்பிக்கையோட எதிர்கொண்டால், எப்பேர்ப்பட்ட வியாதியையும் வந்த சுவடே தெரியாமல் விரட்டியடிச்சுடலாம்.''

- உ. அருண்குமார்