Published:Updated:

ராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து!

ராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து!

ராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து!

ராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து!

Published:Updated:
##~##

டை பயிலும் மழலை முதல், நடக்கத் தள்ளாடும் முதியவர் வரை யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தாக்கும் நோய் பக்கவாதம். 'பக்கவாதம் வந்தால் படுக்கையில் கிடத்திவிடும்’ என்பார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாகப் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு ஒரு கை, கால் செயல் இழந்த நிலையில், பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு தற்போது, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ராஜ்மோகன். அவரது அனுபவம்... நமக்கெல்லாம் 'பக்க’ பலம். 

  ''25 வருஷமா ரயில்வே ரிசர்வேஷன் டிபார்ட்மென்ட்டில் வேலை செய்றேன். கூட்டுக் குடும்பமா வசிக்கிறதால, வாழ்க்கை எப்பவும் சந்தோஷமா கலகலப்பா இருக்கும்.  இப்ப எனக்கு வயசு 56. எவ்வளவு வேலை இருந்தாலும் சளைக்காமல் செய்வேன்.  எவ்வளவு பிரஷர் இருந்தாலும் அதை வீட்ல காமிக்க மாட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னால, திடீர்னு ஒருநாள் கை, காலை அசைக்க முடியலை. அடுத்தடுத்து வந்த நாட்கள்ல, கை, காலைத் துளியும் அசைக்க முடியாமல், அப்படியே படுக்கையில் முடக்கிப்போட்டுருச்சு. எனக்கு வந்திருப்பது பக்கவாதம் என்று தெரிந்ததும், நான் கொஞ்சமும் உடைந்து போகவில்லை. ஆனால், சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டேயிருக்கும் ஒருவர், திடீரெனப் படுக்கையிலேயே கிடக்கவேண்டிய நிலை வந்தால், அதிலிருந்து மனதளவில் மீண்டு வருவது ரொம்பவே கஷ்டம். ஆனால், இன்றோ காரணம் தெரியாத நோய்கள்கூட மனிதனை ஆட்டிப்படைக்கும்போது, எனக்கு வந்திருப்பது சாதாரணம்தான். மனம் சோர்வடையாமல் பார்த்துக்கொள்வதுதான் முக்கியமாகப்பட்டது. அந்தத் தன்னம்பிக்கைதான் எனக்குத் தைரியத்தைத் தந்தது. ஆனால், என் குடும்பத்தினர் பட்ட அவஸ்தையை என்னால் உணர முடிந்ததே தவிர, ஆறுதல் சொல்லக்கூட வார்த்தைகள் இல்லை.' என்கிற ராஜ்மோகன், தான் எடுத்துக்கொண்ட சிகிச்சை முறைகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.

ராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து!
ராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து!

'பக்கவாதம் வந்ததும், முதலில் 15 நாட்கள் அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றேன். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.

எங்கள் குடும்ப மருத்துவர் மனோகர், என்னைப் பரிசோதிச்சுப் பார்த்து, ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தால், பக்கவாதத்தைக் குணப்படுத்திவிடலாம் என்று ஆலோசனை தந்ததுடன், நியூரோசைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ஈ.எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் சிகிச்சை பெற அனுப்பினார். அதன் பிறகு டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் டிரைமெட் ஹெல்த்கேருக்குப் போனேன்.  யோகாவில் மூச்சுப் பயிற்சி, கை, கால் அசைவிற்கான பயிற்சி,  விதவிதமான யோகாசனம்,  உடலில் ரத்த ஓட்டம் பாய ஆயில் மசாஜ், முடக்கிப் போட்ட கை, காலை அசைக்க பிசியோதெரபி எனத் தொடர்ந்து எனக்குப் பயிற்சிகள் தந்தாங்க. கொஞ்சம் மருந்துகள், நிறையப் பயிற்சிகள் என மருத்துவர்களின் சிகிச்சை முறை இருந்தது. அதுக்குப் பிறகு, விரைவான  முன்னேற்றத்தை உணர முடிஞ்சது. என் உடல் பிரச்னைக்கான அனைத்தும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கிடைச்சதால்தான் விரைவில் குணமானேன். இன்னிக்கு என்னால் எழுந்து நடந்து எல்லா வேலைகளையும் ஈஸியா செய்ய முடிகிறது. பழையபடி என் வேலையில் சேர்ந்து சுறுசுறுப்பா ஓடிட்டு இருக்கேன்!' என்றார் மெல்லிய புன்னகையுடன்.

ராஜ்மோகனுக்கு சிகிச்சை அளித்த

டாக்டர் ஈ.எஸ்.கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தோம்.  

''பக்கவாதம் நரம்பியல் சார்ந்த நோய். மூளையின் எந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் குறையுமோ அந்தப் பகுதி பாதிக்கப்படும். உடனடியாகக் கவனிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதியே செயலிழந்துபோகக்கூடும். இதற்கு அற்புதமான சிகிச்சை ஒருங்கிணைந்த மருத்துவத்தில் கிடைக்கும்.

ராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து!

ராஜ்மோகன் சரியான நேரத்தில் வந்ததால் எங்களால் எளிதில் அவரை குணப்படுத்த முடிந்தது. சைக்கலாஜிக்கல் கவுன்சலிங் முறையில், அவருக்கு உள்ள நோயின் தன்மை, என்ன மாதிரியான சிகிச்சை தரப்போகிறோம் என்ற விவரத்தை பேசித் தெளிவுபடுத்தினோம்.

அதன் பிறகு, யோகா, பிஸியோதெரஃபி சிகிச்சை, ஆயில் மசாஜ், ஜெ.பி.எம்.ஆர் (JPMR)என தினமும் வெவ்வேறு வகையான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளித்தோம். முதல் ரெண்டு வாரம் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், அவர் எங்கள் சிகிச்சைமேல் வைத்த நம்பிக்கை, ஒத்துழைப்பே நல்ல பலனைத் தந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து கை, காலை அசைக்கத்  தொடங்கி, அவரால் நன்றாகப் பேசவும், நடக்கவும் முடிந்தது.  

அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை கிடைத்தாலும், கூடவே யோகா, நேச்சுரோபதி, பிஸியோதெரஃபி, கவுன்சிலிங், ஆயுர்வேதம் மற்றும் உணவுமுறை என்று ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை முறைதான் நோயாளிகளின் சுக வாழ்க்கைக்கு உத்தரவாதம்.''

- உமா ஷக்தி, நா.சிபிச்சக்கரவர்த்தி,

படங்கள்: வீ.நாகமணி, ஜெ.வேங்கடராஜ்.