Published:Updated:

குழந்தைகளை பாதிக்கும் காவஸாகி!

குழந்தைகளை பாதிக்கும் காவஸாகி!

குழந்தைகளை பாதிக்கும் காவஸாகி!

குழந்தைகளை பாதிக்கும் காவஸாகி!

Published:Updated:
##~##

நான்கு வயதுச் சிறுவன் லோகநேத்ரனுக்கு, திடீரென உதடு, நாக்கு என உடலெங்கும் சிவந்து, தடித்துப்போனது. என்னவோ ஏதோவெனப் பதறிய பெற்றோர், சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி அறக்கட்டளை மருத்துவமனைக்கு அவனை அள்ளிக்கொண்டு ஓடினர். பரிசோதித்த டாக்டர், நேத்ரனுக்கு காவஸாகி என்ற நோய் இருப்பதை உறுதிபடுத்தினார். தேவையான சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டு, இப்போது நேத்ரன் நலமாக இருக்கிறான்.

புதுப்புது நோய்கள் பெருகிவரும் இன்றைய காலக்கட்டத்தில், காவஸாகி நோயைப் பற்றி விரிவாய் பேசினார்கள், டாக்டர்கள் பாலசுப்ரமணியன், தனலெட்சுமி, சுமந்த் அம்பேரயானி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வெகு காலமாகவே, இந்த நோய் இருக்கிறது. அப்போது, பெரிய அளவில் இதுகுறித்து விழிப்பு உணர்வு இல்லாமல் இருந்தது. 18 வயதுக்கு உட்பட்டவர்களைத்தான் இந்த நோய் தாக்கும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்தான் மிக அதிகம் தாக்கும்.

குழந்தைகளை பாதிக்கும் காவஸாகி!

உடல் முழுவதும் உள்ள ரத்தக்குழாய்களில் இது வீக்கத்தை ஏற்படுத்தும். இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும்போது, இதய செயல்பாடுகள் மொத்தமும் தடைபடும். இதேபோல, கல்லீரல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படலாம். மூளைக்காய்ச்சல் ஏற்படலாம்.

குழந்தைகளை பாதிக்கும் காவஸாகி!

சிறுநீரகத்தொற்று இல்லாமலே ரத்தப் பரிசோதனையில் சிறுநீரகத்தொற்று இருப்பதாகக் காட்டும். ஒருவருக்கு 30 வயதிலேயே ஹார்ட் அட்டாக் வருவதற்கு, சிறுவயதில் அவருக்கு காவஸாகி நோய் இருந்து, அது இதய ரத்தக் குழாய்களைத் தாக்கி ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தியிருக்கவும் வாய்ப்பு உண்டு.

காவஸாகி நோய் வருவதற்கு, சில வைரஸ்களும் பாக்டீரியாக்களும், mycoplasmaஎன்ற கிருமியும்கூட காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், முழுமையான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. முந்தைய தலைமுறையில் யாருக்கேனும் இந்த நோய் இருந்திருந்தாலும் வரலாம். மற்றபடி, சுகாதாரத்திற்கும் காவஸாகி வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஐந்து நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். கண், உதடு, நாக்கு மற்றும் உடல் முழுவதும் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் சிவந்து தடிக்கும். இதற்கு 'ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்’ என்றே பெயர். கை, கால்களில் தோல் உரியும். சிலருக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வராமல், சில நாட்கள் இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாகவும் வரலாம்.

ஒரு குழந்தைக்கு காவஸாகி இருக்கிறதென சந்தேகம் ஏற்பட்டால், முதலில் ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். அதில் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஈ.எஸ்.ஆர், சி.ஆர்.பி போன்றவை அதிக அளவில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளோடு, குழந்தையின் உடலில் காவஸாகியின் அறிகுறிகளும் தென்பட்டால், காவஸாகி இருக்கிறதென முடிவுக்கு வரலாம். எக்கோ டெஸ்ட் எடுத்துப் பார்த்து இதயத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்வது அவசியம்.

காவஸாகி இருப்பது உறுதிசெய்யப்பட்டால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். லேட்டஸ்ட் டெக்னாலஜி அடிப்படையில் ஐ.வி.ஐ.ஜி (Intravenous immunoglobulin) சிகிச்சைமுறை மேற்கொள்ளப்படும். ஒருவர் காவஸாகிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலும்,  திரும்பவும் வரலாம். எனவே சிகிச்சை முடிந்த 45 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவரை சந்தித்து, அனைத்து டெஸ்ட்களையும் மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக இதய ஸ்கேன் டெஸ்ட் பார்க்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருமுறையும், அதைத் தொடர்ந்து வருடம் ஒருமுறை இதயத்தை ஸ்கேன் டெஸ்ட் செய்யவேண்டும்.

- உ . அருண்குமார்

படம்: செ. திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism