Published:Updated:

புற்றுநோயைப் புறந்தள்ளிய பெண்மணி!

தாய்ச்சி பயிற்சித் தரும் புத்துணர்ச்சி!

##~##

''என்னுடைய மன தைரியத்தை சோதித்துப்பார்க்க இறைவன் எனக்கு வைத்த டெஸ்ட்தான் புற்றுநோய்’. விடுவேனா நான், அது கூடவே போராடியதில் எனக்குதான் வெற்றி' என்று சந்தோஷமும் சிரிப்பலையுமாக, கேன்சர் பாதிப்பு கொஞ்சமும் முகத்தில் பிரதிபலிக்காத வண்ணம் பேசினார் பழநியைச் சேர்ந்த 66 வயதான கல்லூரிப் பேராசிரியையும், வானவியல் ஆய்வாளருமான மோகனா சோமசுந்தரம். 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர், அறிவொளி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர், தேசிய அளவிலான மதிப்பீட்டாளர் என, 35 வருடங்களாக சமூகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். 'வேதியியல் கதைகள்’, 'தூங்காத கண்களுக்கு’ போன்ற அறிவியலைப் பற்றிய அற்புத நூல்களை எழுதி, சிறந்த எழுத்தாளருக்கான முத்திரை பதித்தவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புற்றுநோயைப் புறந்தள்ளிய பெண்மணி!
புற்றுநோயைப் புறந்தள்ளிய பெண்மணி!

'கேன்சரால் பாதிக்கப்பட்டு பச்சிளம் தளிர்கள் வாடி வதங்குவதை என் கண் முன் பார்த்தவள் நான். வாடுவதைக் கண்டு, இன்னும் நான் போராட வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது என்ற எண்ணம்தான் என்னை மீட்டெடுத்தது.

2010-ல் இடது பக்கம் மார்பகத்துக்கு மேல் லேசாக சுருக்கென ஒரு வலி வந்துச்சு. தொட்டுப் பார்த்தபோது, கட்டி உருவாகிறது எனக்குத் தெரிஞ்சது. அப்போ பெரிசாக் கண்டுக்காம விட்டுட்டேன். வலியும் கூடிக்கிட்டே இருக்க, சில மாசத்துல, கட்டி வளர்ந்திருந்தது. 'ட்ரூ கட்’ டெஸ்ட் எடுத்தபோதே, எனக்கு கேன்சர்தானு உறுதியாச்சு. ஆனா, என் குடும்பத்தார் என்னிடம் இதைச் சொல்லாமல் மறைச்சிட்டாங்க. ஆனாலும், என்னால் ஓரளவு யூகிக்க முடிஞ்சது. கோவையிலுள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து கொடுக்கும் வரை, ஆபரேஷனில் என்னென்ன செய்வீர்கள் என்ற எல்லா விவரத்ங்களையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். ஆபரேஷன் முடிஞ்சதும், கொஞ்சம்கூட வலி தெரியலை. அங்கிருந்த டாக்டர், நர்ஸுங்களே, 'நிஜமாவே வலிக்கலையா?’னு கேட்டாங்க.  'வலி வருவதற்கு ஏதேனும் மாத்திரை இருந்தால் கொடுங்க’னு சொன்னேன்.

என்னைப் பார்க்க வந்தவங்ககூட, நான் லேப்டாப்பில் கட்டுரைகளை டைப் செஞ்சுட்டிருக்கிறதைப் பார்த்து வாயடைச்சுப்போயிட்டாங்க.  மறுநாளே இரு வேளை வாக்கிங் போனேன். நாம் சோகமா இருந்தால், வர்றவங்களும் நம்மக்கிட்ட சோகத்தை மட்டுமே தந்திட்டுப் போவாங்க. அதை நான் விரும்பலை. மருத்துவமனையில் இருந்த கொஞ்ச நாட்களையும் சோகமாக, இறுக்கமாக இல்லாமல், அங்கிருந்தவங்ககிட்ட நம்பிக்கையை உண்டாக்கும் விதத்தில் பேசிட்டிருந்தேன்.  

புற்றுநோயைப் புறந்தள்ளிய பெண்மணி!

என்னுடைய மன தைரியத்தைத் தாங்க முடியாமல் கேன்சர் என்னைவிட்டு ஓடிப்போயிடுச்சுனுதான் சொல்வேன். இன்னிக்கும் கேன்சருக்காக தொடர்ந்து மருந்து எடுத்துட்டிருக்கேன். 'தூங்க வேண்டும்’ என்ற எண்ணம் வந்தால் மட்டுமே, படுக்கப் போவேன். நல்ல ஆரோக்கியமான உணவும், தொடர்ந்து மூன்று வருடமாக செய்கிற தாய்ச்சிப் பயிற்சியும்தான் என் புத்துணர்ச்சிக்கு முக்கியக் காரணம். என் வயதையும், நோய் வந்த உடம்பையும் மீட்டது தாய்ச்சி.

ஆபரேஷன் பண்ணிகிட்டப்ப, மத்தவங்க துணையில்லாம என்னால், படிக்கட்டு ஏறி-இறங்க முடியாது. வெளியூருக்குப் போனால்கூட, ரொம்ப சோர்ந்து போயிடுவேன். ஆனால், 'தாய்ச்சி’ செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறம், வண்டி ஓட்டும் அளவுக்கு உடம்பில் வலிமை கூடிடுச்சு. எனக்கு அறுவைசிகிச்சை செஞ்சப்ப, இடது கையில் கொஞ்சம் தசைகளை கட் பண்ணதால், 60 சதவிகிதம்தான் என்னால் செயல்பட முடிஞ்சது.  ஆனால், இப்போ, வலது கை மாதிரியே இடது கையும் 100 சதவிகிதம் நல்லா அசைக்க முடியுது. இதுக்கெல்லாம் காரணம், தாய்ச்சியும், அது தந்த தன்னம்பிக்கையும்தான்.

''புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களுக்கு, 'தாய்ச்சி’ பயிற்சி அவர்களின் வாழ்நாளை மேலும் ஆரோக்கியமாக நீட்டிக்கும்'' என்கிறார் பழநியில், மோகனாவுக்கு தாய்ச்சிக் கலையைக் கற்று தந்த, ஆலன் திலக் கராத்தே - தாய்ச்சி பள்ளியின் பயிற்சியாளர் ரவி.

'தாய்ச்சி, சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அற்புதக் கலை. சீனாவில் 100 வயதைத் தாண்டியவர்களும் இந்தப் பயிற்சியை செய்கிறார்கள். இந்தப் பயிற்சியை மேற்கொள்வதால் எலும்புகள் வலுவடையும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, தன்னம்பிக்கையை ஊட்டும். கீமோதெரப்பி சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளை ஓடஓட விரட்டிவிடும் தன்மை தாய்ச்சிக்கு உண்டு. இது கேன்சர், சர்க்கரை நோய், மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி போன்ற அனைத்து பிரச்னைகளையும் குணப்படுத்தும் அதிசய திறன்கொண்டது. குறிப்பிட்ட மணி நேரம் தொடர்ந்து செய்யும்போது, மனம் ஒருநிலைப்படும்.’ என்கிற பயிற்சியாளர் ரவியும் முதுகுத் தண்டுவட சவ்வு விலகலால் பாதிக்கப்பட்டு, தாய்ச்சியால் மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- க.பிரபாகரன்

படங்கள்: த. ரூபேந்தர்