Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:
அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்

 நெற்றியில் மூக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்கம் பக்கம்

சீன நாட்டைச் சேர்ந்த 'சிய ஓலியன்’ என்ற இளைஞருக்கு கடந்த ஆண்டு ஒரு விபத்தில் முகம் பாதிக்கப்பட்டு, மூக்கு சிதைந்துவிட்டது. மூக்கில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக அவரது மூக்கைச் சரிசெய்ய முடியாத நிலையில் மருத்துவர்கள் வேறு வழியின்றி அதை அகற்றினர். அவருக்கு புதிதாக மூக்கு போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தனர்.  இதற்காக,  சிய ஓலியனின் விலா எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட உறுதியான அதேசமயம் வளைந்துகொடுக்கக்கூடிய சவ்வுப்பகுதியையும், தலைப் பகுதியில் உள்ள சருமத்தையும் சேர்த்து தலையில் புதிய மூக்கை உருவாக்கியுள்ளனர். தலையில் மூக்குள்ள சிய ஓலியன் விந்தையாகப் பார்க்கப்பட்டாலும், எதிர்கால மருத்துவ முன்னேற்றத்துக்கு நம்பிக்கையாகக் காட்சித்தருகிறார். விரைவில் தலைப் பகுதியில் இருக்கும் மூக்கு... மூக்கு இருக்கவேண்டிய  பகுதியில் பொருத்தப்பட உள்ளது.

அக்கம் பக்கம்

இல்லற வாழ்வுக்கு நல்லது இரவுத் தூக்கம்!

அக்கம் பக்கம்

இரவில், குறைவாகத் தூங்குபவர்களுக்கு, உயிர் அணுக்களின் எண்ணிக்கைக் குறைந்துவிடும் அபாயம் உள்ளதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். 13 வயதிலிருந்து 20 வயதுக்குட்பட்ட 953-பேரிடம் அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வில், மிகவும் குறைந்த நேரம் தூங்கியவர்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். குறைந்த நேரம் தூங்குபவர்களுக்கும், தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்களுக்கும் விந்தணுவின் எண்ணிக்கை 25 சதவீகிதத்துக்கும் கீழ் குறைந்துவிடுகிறதாம்! தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. எனவே, இரவில் நன்றாகத் தூங்குங்கள் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அக்கம் பக்கம்

மூளை வளர்ச்சிக்கு 'முட்டை’!

அக்கம் பக்கம்

'கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது’ என்பது அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மேரி காடில் தன் ஆய்வில் கண்டறிந்துள்ளார். கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, முட்டையில் உள்ள 'கோலைன்’ என்ற பொருள் முக்கிய பங்காற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோலைன், சிசுவின், 'நியூரோ எண்டோகிரைன்’ சுரப்பியைச் சீராக்கி, ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் மூளையின் நினைவாற்றலும் கற்கும் திறனும் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் ரத்த ஓட்டம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வராமலும் தடுக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது!

அக்கம் பக்கம்

ஸ்மார்ட் சிகிச்சை!  

அக்கம் பக்கம்

சென்னை லைஃப் லைன் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ராஜ்குமார் 'கூகுல் ஸ்மார்ட் கண்ணாடி’ அணிந்து கொண்டு, 45 வயது ஆணுக்கு லேப்ரோஸ்கோப்பி கருவி மூலம் குடல் இறக்க நோய்க்கான அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்துள்ளார். இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்தது இந்தியாவில் இது முதன் முறையாகும். இந்த அறுவைசிகிச்சை காட்சிகள் இரண்டு பிளாக் தள்ளியிருந்த மருத்துவ மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. கூகுல் கண்ணாடி அணிந்து அறுவைசிகிச்சை செய்வது உலக அளவில் இது மூன்றாவது முறையாகும். இதுபற்றி டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், ''மருத்துவத் துறைக்குக் கிடைத்த அற்புதமான சாதனம்தான் 'கூகுல் ஸ்மார்ட் கண்ணாடி’. இதன் மூலம் இந்தியாவில் அறுவைசிகிச்சையின் தரம் உயரும். மேலும் மருத்துவ மாணவர்கள் அறுவை சிகிசைகளை நேரடியாக வீடியோமூலம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு உடனுக்குடன் அறுவை சிகிச்சையை வீடியோ மூலம் கற்பிக்கும் முறையைச் செயல்படுத்துவதுதான் எங்கள் அடுத்தத் திட்டம்' என்றார்.

அக்கம் பக்கம்

இதயம் புதிது!

அக்கம் பக்கம்

பெங்களூரைத் நேர்ந்த 26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியருக்கு இதயத்தின் வென்ட்ரிக்கிள் அறையில் 'சினோவியல் செல் சரகோமா’ என்ற அரியவகை புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டது. இதயத்தில் ஏற்படும் கட்டிகளை அகற்றுவது சிரமமானது. இதற்கு கதிர்வீச்சு மற்றும் கீமோதெரப்பியாலும் பலனில்லை. அறுவைசிகிச்சை செய்யவும் 15 சதவிகிதம்தான் வாய்ப்பு. இவருக்கு பெங்களூரில் ஒருமுறை அந்தக் கட்டியை அகற்றியுள்ளனர். அதன்பிறகு, 'சைபர்நைஃப்’ கருவியைக்கொண்டு கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதனால் பிரச்னை ஓரளவுக்குக் கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும்,  மூச்சுத் திணறல் அதிகரிக்கவே, சென்னையில் உள்ள 'ஃப்ரான்டியர் லைஃப் லைன்’ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்துபார்த்ததில் அந்தக் கட்டி, முன்பைக்காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக வளர்ந்ததோடு, திரும்பத் திரும்ப கட்டி வளர்ந்துகொண்டே இருப்பதால், கட்டியை அகற்றுவது பலனளிக்காது.  எனவே இதய மாற்று அறுவைசிகிச்சை ஒன்று மட்டும்தான் தீர்வு என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக இருக்கிறார் அந்த இன்ஜினியர்!

அக்கம் பக்கம்

'வாய்’ சொல்லும் ஆரோக்கியம்!

அக்கம் பக்கம்

வாயைக் கொண்டே நம்முடைய உடல் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளும் புதிய சென்சார் கருவியை தைவான் பல்கலைக் கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய இந்தக் கருவியை பல்லிலோ அல்லது செயற்கைப் பல்லின் உள்ளேயோ பொருத்திக்கொள்ளலாம். 'டூத் சென்சார்’ என்ற இந்தக் கருவி 93.8 சதவிகிதம் துல்லியமாக வாயின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது. கண்காணித்த செய்திகளை உடனடியாக ப்ளூடூத் மூலம் கம்ப்யூட்டருக்கு அனுப்பிவிடுகிறது. இந்தக்கருவி வருங்காலத்தில் பல் மருத்துவத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அக்கம் பக்கம்

'பறக்கும்’ மருத்துவமனை!

அக்கம் பக்கம்

சமீபத்தில் கொல்கத்தாவுக்கு வந்திருக்கும் விமானம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 'ஆர்பிஸ்’ (ORBIS) என்ற அந்த விமானம்தான் உலகின், முதல் 'பறக்கும் கண் மருத்துவமனை’. இதுதவிர, வேறெந்த பறக்கும் மருத்துவமனையும் கிடையாது. கொல்கத்தா வந்த முதல் நாளில் மட்டும் இந்த விமான மருத்துவமனையில், 30 அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் கண் மருத்துவமனையானது, இதுவரை 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பறந்துள்ளது. லட்சக் கணக்கானோர் இந்த மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இந்த மருத்துவமனையில் கண் அறுவைசிகிச்சை செய்வதைக் காட்டிலும், கண் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதே நோக்கம் என்று ஆர்பிஸ் இன்டர்நேஷனலின் மக்கள் தொடர்பு மேலாளர் ஃபிளவியா தெரிவித்துள்ளார்.

அக்கம் பக்கம்

புற்றுநோய் திசுவைபொசுக்க புதிய கத்தி!

புற்றுநோய் திசுக்களை மட்டும் துல்லியமாக அகற்ற ஒரு புதிய கத்தியை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஒரு கத்திபோன்ற கருவி பயன்படுத்தப்படும். இந்தக் கருவியைக் கொண்டு மருத்துவர்கள் புற்றுநோயால் பாதித்த திசுக்களை அகற்றும்போது, புற்றுநோய் திசுவுடன் நல்ல திசுக்களும் பொசுங்கிவிடும். ஆனால், இந்தப் புதிய கத்தியைக் கொண்டு அறுவைசிகிச்சை செய்யும்போது புற்றுநோய் திசு மட்டுமே பொசுக்கப்படுகிறது. இந்தக் கத்தி மூலம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் தாக்கும் அபாயம் பன்மடங்கு குறையும் என் கிறார்கள் விஞ்ஞானிகள்.