Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

இதயத்தை அதிர வைக்கும் செய்தி!

அக்கம் பக்கம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதய நோய்க்கான காரணிகள் பற்றி 'சஃபோலா லைஃப்’ ஒரு மிகப்பெரிய கணக்கெடுப்பை நடத்தியது. மூன்று ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்பட 12 நகரங்களைச் சேர்ந்த     1.86 லட்சம் பேரிடமும், சென்னை யில் மட்டும் 11,610 பேரிடமும் தகவல்கள் பெறப்பட்டன. இந்தத் தகவல் அடிப்படையில் 73 சதவிகிதம் பேருக்கு இதய ரத்தக்குழாய் தொடர்பான பாதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், 73 சதவிகிதம் பேருக்கு இதய நோய்க்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 18 சதவிகிதம் பேருக்கு சர்க்கரை நோய் இருந்தது. 51 சதவிகிதம் பேர் உடல் பருமனானவர்கள். இவர்களில் நான்கு சதவிகிதம் பேருக்கு கொலஸ்ட்ரால் அளவு உச்சகட்டத்த்தில் உள்ளது. இதில் 40 சதவிகிதம் பேர் பதப்படுத்தப்பட்ட, அதிகம் சுத்தீகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், 31 சதவிகிதம் பேர் வாரத்துக்கு இரண்டு முறையாவது எண்ணெயில் பொறித்த உணவுகளையும் அதிக அளவில் எடுத்துக்கொள்கின்றனர். 65 சதவிகிதம் பேர் வாரத்துக்கு மூன்று அல்லது அதற்குக் குறைவாகவோ உடற்பயிற்சி செய்பவர்களாக உள்ளனர். 47 சதவிகிதம் பேருக்கு நல்ல கொழுப்பான எச்.டி.எல். அளவு மிகக் குறைவாக உள்ளது. இது பற்றி, அப்பல்லோ மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சை நிபுணர் எம்.சோமசுந்தரம், 'துடிப்பற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தமான சூழ்நிலை, உணவு விஷயத்தில் கட்டுப்பாடின்மை போன்றவற்றால் இளைஞர்கள் மத்தியில் இதய நோய் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் இன்று 30-44 வயதுக்குட்பட்ட இளம் இதயங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன' என்கிறார்.

ரத்த அழுத்தத்துக்கு பீட்ரூட் சாறு

அக்கம் பக்கம்

பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர்ரத்த அழுத்தத்தை தணிக்கும் ஆற்றல் கொண்டது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு தேநீர் கோப்பை அளவு, (250 மி.லி) பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம்.எம். அளவு குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும், பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பீட்ரூட்

அக்கம் பக்கம்

சாறு குடித்தவர்களுக்கு மூன்று முதல் ஆறு மணி நேரத்தில் உயர் ரத்த அழுத்தம்  கணிசமான அளவு குறைந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நகமும்... மனநலமும்...

நகம் கடிக்கும் பழக்கத்துக்கும் மனநல பாதிப்புக்கும் சம்பந்தம் உண்டு என்கின்றனர் அமெரிக்காவின் மனோதத்துவ நிபுணர்கள். மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதைச் சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான். காரணமில்லாத பயம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்வதாக இந்த நிபுணர்கள் கூறுகின்றனர். 'எப்போதாவது நகம் கடிப்பவர்களை மனநலம் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று கூறமுடியாது. இந்தப் பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர்'' என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனநல மருத்துவ வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்திருக்கிறார்.

பல் ஆராய்ச்சிக்கு பளிச் திட்டம்!

அக்கம் பக்கம்

இந்திய பல் மருத்துவ மாணவர்களை ஊக்கப்படுத்தி, ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்துவதற்காக சர்வதேச பல் ஆராய்ச்சி கூட்டமைப்புடன் (ஐ.ஏ.டி.ஆர்.) இணைந்து ஸ்டூடென்ட் ட்ரெய்னிங் அன்டு ரிசர்ச் (ஸ்டார்) என்ற திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுஉள்ளது. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பங்கஜ் குமார் பன்சால் இதைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மூத்த பல் மருத்துவரும், இந்த அமைப்பின் பொதுச் செயலருமான எஸ்.எம்.பாலாஜி பேசுகையில், 'உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு பல் மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் உள்ளன. ஆனால், பல் மருத்துவத் துறையின் ஆராய்ச்சியில் இதுவரை ஒரு சதவிகிதம்கூட இந்தியா பங்கு அளிக்கவில்லை. இந்தியாவில் போதுமான அளவுக்கு வசதிகள், நோயாளிகள், ஆராய்ச்சிக்கான வளங்கள் இருந்தும், சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை. நம்முடைய மாணவர்களுக்கு வழிகாட்டி, ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிட உதவும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார். நிகழ்ச்சியில் ஐ.எஸ்.ஆர்.டி. செயல் இயக்குநர் கிரிஸ்டோபர் எச். பாக்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism