Published:Updated:

நன்றி சொல்ல வார்த்தை இல்லை!

இலவச மருத்துவமுகாமில் வாசகர்களின் நெகிழ்ச்சி!

நன்றி சொல்ல வார்த்தை இல்லை!

இலவச மருத்துவமுகாமில் வாசகர்களின் நெகிழ்ச்சி!

Published:Updated:
##~##

உங்கள் நலனில் அக்கறைகொண்ட 'டாக்டர் விகடன்', உங்கள் பகுதிக்கே வந்து, உங்கள் உடல் நலம் குறித்து விசாரிப்பதுடன், இலவச சிறப்பு மருத்துவ முகாம்களையும் நடத்திவருவதை அறிவீர்கள். 

அக்டோபர் 20-ம் தேதி தஞ்சையில், டாக்டர் விகடனும், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் இதயநோய் சிகிச்சை முகாம் சிறப்பாக நிகழ்ந்தது. 450-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள் நலன், மகளிர் நலன், எலும்பு மூட்டு சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, இதய மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை, சர்க்கரை, சிறுநீரகவியல், ரேடியாலஜி மருத்துவ நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், டெக்னீஷியன்கள் என 40-க்கும் மேற்பட்ட டீம் பங்கேற்று இலவச சிகிச்சை அளித்தனர். முகாமில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் உடல் எடை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. தேவைப்படுபவர்களுக்கு, ஈ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது.  

நன்றி சொல்ல வார்த்தை இல்லை!

முகாமுக்கு வந்திருந்த ஒரத்தநாடு, கிளாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாப்பா என்பவர், 'இங்க இலவச மருத்துவ முகாம் நடக்கிறதா பத்திரிகையில் பார்த்திட்டு வந்தேன். டாக்டரைப் பார்த்தேன். எல்லா டெஸ்ட்டும் செஞ்சாங்க. ரொம்ப நாளா சர்க்கரை நோய் இருந்தது தெரியாமப்போச்சு. இப்பதான் கண்டுபிடிச்சாங்க. தினமும் சாப்பாட்டுல எப்படிப் பத்தியமா இருந்து சர்க்கரையைக் குறைக்கலாம்னு டயட்டீஷியன் விளக்கமா அட்டவணையே போட்டுக்கொடுத்தாங்க. ரொம்ப உதவியா இருந்துச்சு' என்றார்.

நன்றி சொல்ல வார்த்தை இல்லை!

திருநாகேஸ்வரத்தில் இருந்து வந்திருந்த உத்திராபதி, 'நான் ஏழு வருஷமா இதயநோயால் அவஸ்தைப்படறேன். பாண்டிச்சேரி, கும்பகோணத்துக்குப் போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். இருந்தாலும் படபடப்பு இருந்துட்டே இருக்கு. இங்க, எனக்கு ஈ.சி.ஜி., எக்கோ டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தாங்க. டெஸ்ட் ரிப்போர்ட்டை இதயநோய் மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணர்னு ரெண்டு டாக்டருங்க செக் பண்ணிப் பார்த்தாங்க. ரொம்ப தூரத்துல இருந்து வந்தாலும், அஞ்சு பைசா செலவில்லாம, ரெண்டு மணி நேரத்துல அத்தனை டெஸ்ட்டையும் எடுத்து, டாக்டரையும் பார்க்கவெச்சது பெரிய விஷயம். நன்றி சொல்ல வார்த்தை இல்லை தம்பி' என்றார்.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் மூத்த இதய மருத்துவரான கேசவமூர்த்தி கூறுகையில், 'முகாமில் கலந்து கொண்டவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. இதற்குக் காரணம் மனஉளைச்சல்தான். சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூடக் கோபப்படுவதும், பதற்றப்படுவதும்தான் உயர் ரத்த அழுத்தத்துக்கு அடித்தளம். இதுதான் பின்பு இதயத்தைப் பாதிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்த்து, ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று இங்கு வந்தவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினோம்' என்றார்.

- ஏ.ராம், எம்.புண்ணியமூர்த்தி, செ.வெங்கடகிருஷ்ணன்

படங்கள்: கே.குணசீலன், கு.கார்முகில்வண்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism