Published:Updated:

போராட்டம் இல்லாத வாழ்க்கை, போரடிக்கும்..!

போராட்டம் இல்லாத வாழ்க்கை, போரடிக்கும்..!

போராட்டம் இல்லாத வாழ்க்கை, போரடிக்கும்..!

போராட்டம் இல்லாத வாழ்க்கை, போரடிக்கும்..!

Published:Updated:
##~##

இடம்: இருங்காட்டுக் கோட்டை. விர்ரென்று காற்றைக் கிழித்து புயல் வேகத்தில் சீறிப் பாயும் மின்னல் கீற்றாகப் பறக்கும் ரேஸ் காரை நம் முன் வந்து நிறுத்துகிறார் ஃபெரோஸ்கான். காரின் வேகம் நம்மை ஒருகணம் உறையவைக்கிறது. கார் ஓட்டி சாகசம் செய்து, சாதனை படைக்கும் நம்பிக்கை நட்சத்திரம், பெரோஸ்கான்.

 பிறப்பிலேயே 'ஹீமோபீலியா’ என்ற ரத்தம் உறையாமைப் பிரச்னை இருந்தாலும், பயத்துக்கு 'குட்பை’ சொன்னவர். வாழ்வில் ஏதேனும் சாதிப்பேன் என, கார் ரேஸ் களத்தில் குதித்த ஃபெரோஸ்கானுக்கு அடுத்தடுத்து வெற்றிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2012-ல் ஜே.கே.டயர்ஸ் நேஷனல் சாம்பியன்ஷிப், 2013-ல் எம்.ஆர்.எஃப். நேஷனல் சாம்பியன்ஷிப். இப்போது சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராகிவருகிறார் ஃபெரோஸ்கான்.

போராட்டம் இல்லாத வாழ்க்கை, போரடிக்கும்..!

'ஆறு வயசில் என் அப்பாவோட, ரேஸ் ட்ராக் போக ஆரம்பிச்சேன். அப்பவே பெரிய ரேஸர் ஆகணும்னு ஆசை. எனக்கு ரத்தம் உறையாமைப் பிரச்னை இருந்தும், ரேஸ் ட்ராக்கில் நுழைய நான்

போராட்டம் இல்லாத வாழ்க்கை, போரடிக்கும்..!

ஒருமுறைகூட பயந்தது இல்லை. 'எது நடந்தாலும் பார்த்துக்கலாம்’ என்ற என்னோட மனதைரியம்தான் இத்தனை சாதனைகளுக்கும் அடித்தளம். பிரச்னை பற்றிக் கவலைப்படாமல் இந்த அளவுக்கு வந்திருக்கேன்னா, அதுக்கு முதல் காரணம்- என் அப்பா, அம்மாதான். ஹீமோபீலியா பிரச்னை இருக்கிற குழந்தைகளை, மற்ற குழந்தைங்க மாதிரி, விளையாடவிட மாட்டாங்க. ஏன்னா, சின்னக் காயம் ஏற்பட்டாக்கூட  டாக்டர்கிட்ட போய் ஊசி போட்டுக்கிற வரைக்கும் ரத்தம் கொட்டிக்கிட்டே இருக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும், உடம்புக்குள்ள எங்காவது ரத்தக் கசிவு ஏற்பட்டு, உயிர் போறமாதிரி வலி எடுக்கும்.  இதுக்குப் பயந்தே குழந்தைகளைப் பொத்திப்பொத்தி வளர்ப்பாங்க.

ஆனா, எங்க அப்பா, அம்மா ரொம்பவே வித்தியாசமானவங்க.  எனக்கு, தன்னம்பிக்கை ஊட்டுவது மாதிரி, வெளியில் விளையாடவிடுவாங்க.  அவங்களுக்கும் உள்ளுக்குள்ள கவலை, பயம் இருந்தாலும், அதை வெளிக்காட்டினதே இல்லை.  நான் சின்னப் பையனா இருக்கிறப்பவே, மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட என் அப்பா கத்துக்கொடுத்தார். என் ஆர்வத்தைத் தூண்டி, உற்சாகப்படுத்திட்டே இருந்தாங்க.  இன்னைக்கு கார் ரேஸ்ல நான் வாங்கும் ஒவ்வொரு பாராட்டுக்கும் விருதுக்கும் பின்னால, என் பெற்றோரின் கடின உழைப்பு இருக்கு. என் அப்பா அயூப்கானும், நேஷனல் சேம்பியனா இருந்தவர்தான்' என்றார் பெருமிதத்துடன்.

'கார், பைக் ரேஸ்னா கண்டிப்பாக் காயம்படும். பலமா அடிபட்டபோதும்கூட ரேஸ் மேல் எனக்கு இருக்கிற ஆர்வம் குறையலை. எப்போ எல்லாம் வலி ஏற்படுதோ, உடனே இன்ஜெக்ஷன் போட்டுப்பேன். ரேஸ் டிராக்ல நுழையுறதுக்கு முன்னாடி, பாதுகாப்பு அம்சம் எல்லாம் சரியா இருக்கானு மட்டும்தான்

போராட்டம் இல்லாத வாழ்க்கை, போரடிக்கும்..!

எல்லோரும் பார்ப்பாங்க. ஆனா, அதோட எனக்கான மருந்துகள் எல்லாம் இருக்கானு பார்த்து, பாதுகாப்புக்காக முன்னாடியே ஊசி மருந்து போட்ட பிறகுதான் பயணத்தையே தொடங்குவேன்.

'நமக்கு ஒரு பிரச்னை வருதுன்னா, அதைப் பார்த்து நாம பயந்திடக் கூடாது.  எதிர்த்துப் போராட ஆரம்பிச்சோம்னா, அது  நம்மைப் பார்த்து பயந்து ஓடிடும்’ இதுதான் நான் கடைப்பிடிக்கிற வாழ்க்கைத் தத்துவம்.  எந்தப் பிரச்னை வந்தாலும், அதை நினைச்சுப் பார்த்துப்பேன். போராட்டமே இல்லாத வாழ்க்கை, போரடிச்சிடும். எவ்வளவு பிரச்னைகளை நான் எதிர்கொள்கிறேனோ அத்தனையிலுமே எனக்குத்தான் வெற்றி. ஒருமுறைகூட என் பிரச்னைகளை வெற்றிபெற விட்டதே இல்லை. இனியும் அது நடக்காது.

நம்ம எல்லோருக்கும் கிடைச்சது இந்த ஒரு வாழ்க்கைதான். அதுல ஒருசில குறைகளோடு சிலர் பிறந்திருப்போம். அதைப் பத்திக் கவலைப்பட ஆரம்பிச்சா, நாம பிறந்ததுக்கான அர்த்தத்தை மறந்திடுவோம். எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும், சாதிக்கணும் என்ற வெறி மட்டும் மனசுல இருந்துட்டா போதும், யாராலும் நம் வெற்றிகளைத் தடுக்க முடியாது.

இந்தப் பிரச்னை இருக்கிற குழந்தைகளை, பெற்றோர்கள் விளையாட அனுமதிக் கணும். அவர்களைத் தனிமையில் ஒதுக்கி வைக்கும்போது, தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இதனால் அவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படும். நிறைய குழந்தைகளுடன் ஓடி விளையாடும்போதுதான், அவர்கள் மனதில் உள்ள பாரம் குறையும். தன்னம்பிக்கை பிறக்கும்' என்கிறார் உற்சாகமாக.

ஹீமோபீலியா பிரச்னை உள்ளவர்களுக்கு... பெரோஸ்கான், நிச்சயம் ஒரு ரோல்மாடல்!

- க.பிரபாகரன்

படங்கள்: தி.குமரகுருபரன்

 வலிக்கு ஊசிதான் தீர்வு!

போராட்டம் இல்லாத வாழ்க்கை, போரடிக்கும்..!

சென்னை, தரமணியில் உள்ள வாலன்டரி ஹெல்த் சர்வீஸ் மருத்துவமனையில், ஹீமோபீலியா சொசைட்டி மெட்ராஸ் சாப்டர் என்ற பெயரில் மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்கும் ராஜேஸ்வரி பிரபாகரனிடம் பேசினோம்.

'ஹீமோபீலியா என்பது பிறவியிலேயே ஏற்படக்கூடிய பரம்பரைக் குறைபாடு. பெண்களைவிட, ஆண்களைத்தான் இது பெரும்பாலும் பாதிக்கும். தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்தப் பிரச்னை இருக்கும். உடம்பில் எங்கேயாவது அடிபட்டால் ரத்தம் உறைவதற்கு, புரதச் சத்து முக்கியம். இது, ரத்தத்தில் 'க்ளாட்டிங் ஃபேக்டர் 8, க்ளாட்டிங் ஃபேக்டர் 9’ எனப் பல வடிவங்களில் உள்ளது. இந்த ஃபேக்டரில் குறை உண்டாகும்போதுதான், ரத்தம் உறையாமைப் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து எழுதினால்கூட, கை மூட்டுகளின் உள்ளே ரத்தம் கட்டிக்கொண்டு வலியை உண்டாக்கும். நீண்ட தூரம் நடந்தால், கால் மூட்டு மற்றும் உடலின் பல்வேறு இணைப்புகளில் உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசிந்து வலியைத் தரும். வலி ஏற்பட்டால், அதைச் சரிப்படுத்த ஊசி மருந்துகள் உள்ளன. ஆனால், நிரந்தரமாகக் குணமாக்க மருந்து ஏதும் இல்லை. வலி ஏற்பட்டால், கட்டாயம் இந்த ஊசி மருந்தைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு முறை எடுத்துக்கொள்ளும் மருந்து, எட்டு மணி நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். இந்த மருந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதிசெய்யப்படுவதால், இதன் விலை அதிகம். பயம் காரணமாக, இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளை, பெற்றோர்கள் விளையாட அனுமதிப்பது இல்லை. ஆனால், நீச்சல் போன்ற பாதிப்பு இல்லாத பயிற்சிகளைச் செய்ய அனுமதிக்கலாம்' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism