Published:Updated:

உங்க பாப்பா பத்திரமா?

உங்க பாப்பா பத்திரமா?

பிரீமியம் ஸ்டோரி
உங்க பாப்பா பத்திரமா?
##~##

மழையும், குளிரும் மனதை வருடும் காலம் இது. ஆனால், வெப்பம் குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பதால், கிருமிகளுக்கும் கொண்டாட்டம். வைரஸ், பாக்டீரியா கிருமிகள் மிக வேகமாகப்  பரவும் நேரம் இது.  காய்ச்சல், சளி, தொண்டை வலி, நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு அதிகம் உள்ளாவது குழந்தைகள்தான்.  

 'இந்தப் பருவத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் இருக்கும். பனிமூட்டம் காரணமாக, பல இடங்களில் சூரிய ஒளி குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், நன்கு வளர்ச்சிபெற்றுள்ள கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும். இதனால்தான் சளி, காய்ச்சல், இருமல், ஆஸ்துமா, அலர்ஜி பிரச்னைகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அதிக அளவில் ஏற்படுகின்றன. சருமம் வறண்டுபோய் அரிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படும்' என்கின்றனர் காவேரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் முகமத் ஷபீர், இந்திரா சைல்ட் கேர் மருத்துவமனை டாக்டர் பிரியா சந்திரசேகரன், கோவையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் மரபியல் நிபுணர் எம்.பிரதீப் குமார்.

உங்க பாப்பா பத்திரமா?

ஜலதோஷம், இருமல், காய்ச்சல்

நம் உடலானது ஏதேனும் காயம், கிருமியை எதிர்த்துப் போராடும்போது மூளையில் உள்ள 'ஹைபோதாலமஸ்’ என்ற பகுதி, உடலின் வெப்பநிலையைச் சற்று உயர்த்துகிறது. இது உடலின் எச்சரிக்கை. இதற்காகப் பயப்படத் தேவை இல்லை. மருத்துவரின் பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வதால் சரியாகிவிடும். சளி, இருமலுடன் காய்ச்சலும் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால், குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். எதனால் காய்ச்சல் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

செய்ய வேண்டியவை:

உங்க பாப்பா பத்திரமா?

 ஃப்ரிட்ஜில் இருந்து நேரடியாக எந்த உணவுப் பொருளையும் குழந்தைகளுக்குத் தராதீர்கள். அறையின் வெப்பநிலைக்கு வந்த பிறகு கொடுப்பது நல்லது.

உங்க பாப்பா பத்திரமா?

 சாதாரணக் காய்ச்சலுக்கு மிளகு ரசம் வைத்துக்கொடுக்கலாம்.  

உங்க பாப்பா பத்திரமா?
உங்க பாப்பா பத்திரமா?

 தேன், எலுமிச்சை, இஞ்சிச் சாறு மூன்றையும் சம அளவு கலந்து குடித்தால், இருமலும் சளியும் குணமடையும்.  

உங்க பாப்பா பத்திரமா?

  நொச்சி இலை, துளசி, ஓமவல்லி இதில் ஏதேனும் ஒன்றின் இலைகளைப் போட்டு ஆவி பிடிப்பது நல்லது. சளித் தொல்லை நீங்கி, சுவாசம் சீராகும்.

மலேரியா

ப்ளாஸ்மோடியம் எனப்படும் ஒட்டுண்ணியால் ஏற்படக்கூடிய நோய். கொசு மூலம் பரவுகிறது. மலேரியா காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு, குளிர் நடுக்கம், காய்ச்சல், காய்ச்சல் குறையும்போது அதிகம் வியர்த்தல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படும். மலேரியாவைப் பரப்பும் கொசு, கடித்த ஒருசில வாரங்களிலேயே இதன் தாக்கம் இருக்கும். சில ஒட்டுண்ணிகள், உடலில் சில மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை அமைதியாக இருந்து தாக்கக்கூடும். ஒருவருக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பதை எளிய ரத்தப் பரிசோதனையால் கண்டறியலாம். டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரையை, பரிந்துரைத்த காலம் வரை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், மலேரியாவில் இருந்து விடுபடலாம்.

செய்ய வேண்டியவை:

உங்க பாப்பா பத்திரமா?

 மலேரியாவுக்கு இதுவரை தடுப்பூசி இல்லை. உரிய கொசு தடுப்பு முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 வீட்டின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மூடிவைக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் மழை நீர் தேங்கவிடக் கூடாது.

உங்க பாப்பா பத்திரமா?

 கொசுவலை கட்டித் தூங்குவது நல்லது.

உங்க பாப்பா பத்திரமா?

 குழந்தைகளுக்குக் கை, கால்களை மறைக்கும்படியான ஆடை அணிவிக்கலாம்.

டெங்கு காய்ச்சல்

நன்னீரில் முட்டையிட்டுப் பெருக்கம் அடையும் தன்மைகொண்ட ஏடிஸ் எஜிப்டி கொசுவால் பரவுகிறது. ஓரளவுக்கு வீரியம் குறைந்த (மைல்ட்) டெங்கு காய்ச்சலில் உயர் காய்ச்சல், தோலில் எரிச்சல், தசை மற்றும் மூட்டு வலி இருக்கும். மிக வீரியமான டெங்கு காய்ச்சலின்போது ரத்தக்கசிவு, திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மரணம் ஏற்படலாம். இந்தக் காய்ச்சலுக்கும் தடுப்பூசி இல்லை. டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை காய்ச்சல் இருக்கும், தலைவலி, தசை, மூட்டு வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, உடல் முழுவதும் சிவப்புப் புள்ளிகள் மற்றும் எரிச்சல் ஏற்படுதல், வாந்தி, குமட்டல், மூக்கு, ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். பெரும்பாலானவர்கள் ஒருவாரத்தில் தானாக இந்தக் காய்ச்சலில் இருந்து குணமடைவர். சிலருக்கு, ரத்தத்தில் உள்ள தட்டு அணுக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படும். உரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை:

உங்க பாப்பா பத்திரமா?

 ஏடிஸ் கொசு பகல் நேரத்தில்தான் கடிக்கும். கொசுக்கள் நுழையாதபடி அறைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 வீட்டைச் சுற்றிலும் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 காய்ச்சல் வந்தவர்கள் ரத்தத் தட்டு அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

உங்க பாப்பா பத்திரமா?

லெப்டோஸ்பைரோசிஸ்

பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய காய்ச்சல் இது. இந்த பாக்டீரியா கிருமி, எலியின் சிறுநீர் மூலம் மனிதர்களுக்குப் பரவும். எலியின் சிறுநீரை மிதிப்பவர்களை இந்தக் கிருமி தாக்கும். மழைக் காலத்தில் மழைநீரோடு எலியின் சிறுநீர் கலக்கும்போது மிக வேகமாகப் பரவும். இந்தக் கிருமி தொற்று ஏற்பட்டவர்களுக்கு உயர் காய்ச்சல், குளிர், தசை வலி, வாந்தி, மஞ்சள் காமாலை, கண் சிவத்தல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதன் அறிகுறிகள் மற்ற காய்ச்சலைப் போல இருக்கவே மலேரியா, டெங்கு என தவறாக நினைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆன்டிபயாடிக் மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வதால் இந்தக் காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

செய்ய வேண்டியவை:

உங்க பாப்பா பத்திரமா?

 இந்தக் காய்ச்சலைத் தவிர்க்க, எங்கு போனாலும், செருப்பு அணிந்து செல்ல வேண்டும்.  

உங்க பாப்பா பத்திரமா?

 மழை நீரில் கால் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 மழைநீர் தேக்கம், சேறு, சாக்கடை போன்ற வெளி இடங்களுக்குச் சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவ வேண்டும்.

வயிற்றுப்போக்கு / காலரா

நீரில் பரவக்கூடிய தொற்றுநோய். காலரா ஒருவரை நேரடியாகத் தாக்குவது இல்லை. கழிவு நீரில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கலக்கும்போது, காலரா தொற்றுள்ள கழிவுகளின் மீது ஈ அமர்ந்து, அதன் கால்களில் கிருமி தொற்றிக்கொள்ளும். அந்த ஈ, நாம் சாப்பிடும் உணவு, நீரில் உட்காரும்போது அதில் காலரா கிருமி பரவும். இது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தி, உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை வெளியேற்றிவிடும்.

அதிகப்படியான நீர் வெளியேறும்போது, அதனுடன் சோடியம் உள்ளிட்ட உப்புக்களும் வெளியேறுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர் ஏற்றம், அதாவது ரீஹைட்ரேஷன் தான் தீர்வு. மழைக் காலத்தில் காலரா வேகமாகப் பரவும் என்பதால், பாதுகாப்பான உணவு, குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.  சாப்பிடுவதற்கு முன்பு, காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு, குழந்தைகளுக்கு உணவு புகட்டுவதற்கு முன்பு, கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவுவதால், கிருமித் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.  

- உமா ஷக்தி, படங்கள்: பா.கார்த்தி, ர.சதானந்த்

 மழைக் காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க குழந்தைகள் நல டாக்டர் எம்.முகமத் ஷபீர் அளிக்கும் டிப்ஸ்:

உங்க பாப்பா பத்திரமா?

 குழந்தைகள் மழையில் நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 குழந்தைகள் உடல் கதகதப்பாக இருக்கும்படியான ஆடைகள் அணிவிக்க வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 அதிக மழை பெய்தாலும், தினசரி குழந்தைகளைக் குளிக்க வைக்க வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 சுத்தமான, அப்போது தயாரிக்கப்பட்ட உணவையே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 இந்தப் பருவத்தில் வைரஸ் தொற்று மிக விரைவாக இருக்கும் என்பதால், குழந்தைகள் வெளியேசென்று வீட்டுக்கு வந்ததும் உடனடியாக கை- கால்களைக் கழுவச் செய்ய வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 குழந்தைகள் உள்ள வீட்டின் பெரியவர்களும், வெளியே சென்றுவந்ததும் கை- கால்களை சுத்தமாகக் கழுவ வேண்டும். இது நோய்க் கிருமித் தொற்றைத் தவிர்க்கும்.

உங்க பாப்பா பத்திரமா?

 குழந்தையைத் தொடுவதற்கு முன்பு கைகளைக் கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

உங்க பாப்பா பத்திரமா?

 பெரியவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் குழந்தை அருகில் செல்வதைத் தவிர்ப்பது குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்க்கும்.

உங்க பாப்பா பத்திரமா?

 ஆஸ்துமா, அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. இது குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

உங்க பாப்பா பத்திரமா?

 வட இந்தியாவில் தற்போது மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது.

உங்க பாப்பா பத்திரமா?

 பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகமிகக் குறைவாகவே இருக்கும். எனவே, இந்தக் குழந்தைகளை ஷாப்பிங் மால், கடற்கரை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு