பிரீமியம் ஸ்டோரி
##~##

பேர் சொல்லி அழைக்கலாமே!

ஸ்திரேலியாவில் பருமன் குறைப்பு சிகிச்சைகளை அளிக்கும் நிறுவனம், 'வெஸ்லி வெயிட் மேனேஜ்மென்ட் சென்டர்’. இதன் தலைமை நிபுணர் நிகோலா மூர் கூறியிருக்கும் அட்வைஸ்: ''பிள்ளைகள் குண்டாக இருப்பதாக, பல பெற்றோர்கள் புலம்புவார்கள்.  'சாப்பாட்டைக் குறை, நொறுக்குத்தீனியைக் குறை’ என்று அடிக்கடி சொல்வார்கள். இது எதிர்மறை விளைவை ஏற்படுத்தி, குழந்தைகளின் மனநலத்தையும் பாதிக்கும். அவர்கள் கொழுப்புள்ள உணவுகள், தின்பண்டங்களை விரும்பிக் கேட்டால், ஒரேயடியாக 'சாப்பிடக் கூடாது’ என மறுக்காமல், கொழுப்புச் சத்து குறைந்த வேறு தின்பண்டங்களை வாங்கித் தரலாம். படிப்படியாக அவர்களது உணவுப்பழக்கத்தை மாற்றலாம். குழந்தைகளின் உடல் பருமன் விஷயத்தைக் கவனமாக, நாசூக்காக கையாள வேண்டியது முக்கியம். மேலும், 'டயட்... டயட்’ என்பதை வலியுறுத்தினால், இயல்பான உணவுப் பழக்கத்தில் இருந்து விலகுகிறோம் என்ற மனஉளைச்சலும் கவலையும் அதிகமாகும்'' என்று எச்சரிக்கிறார்.

அக்கம் பக்கம்

 தளர்வைப் போக்கும் தக்காளி ஜூஸ்!

அக்கம் பக்கம்

'உடற்பயிற்சிக்குப் பிறகு ஆற்றலை அதிகரிக்க, வீட்டில் தயாரிக்கப்படும் தக்காளி ஜூஸ்தான் மிகச் சிறந்த எனர்ஜி டிரிங்க்ஸ்’ என்று, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மட்டும் இன்றி அனைவர்க்கும் ஜூஸ் தேவைதான். ஆனால், உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படும் ஆற்றலைக் கொடுக்க, அதாவது இறுகிய தசைகள் தளர்வு பெறவும், ரத்த ஓட்டம் சீராகவும், தக்காளி ஜூஸ்தான் சிறந்தது என்கிறது இந்த ஆய்வு.

 முதியவர்களுக்கு மகத்தான திட்டம்!

அக்கம் பக்கம்

னிமையில் வசிக்கும் முதியவர்கள் மருத்துவ ஆலோசனை பெறவும், மருத்துவமனைக்குச் செல்லவும் மற்றவரின் உதவி தேவையாக இருக்கிறது. இதற்குத் தீர்வு தரும் வகையில், சென்னை, காவேரி மருத்துவமனை, முதியவர்களுக்கான 'ஸ்வீட் 60’ என்ற பிரத்யேக மருத்துவத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 5,000 ரூபாய் செலுத்தி 'ஸ்வீட் 60’ அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம், ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை புறநோயாளியாக மருத்துவர் ஆலோசனை, ஆண்டுக்கு ஆறு முறை தொலைபேசியிலேயே மருத்துவரிடம் பேசி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டால், மருந்து செலவு, அறை வாடகை, மருத்துவப் பரிசோதனைகள் போன்றவற்றில் ஐந்து சதவிகிதக் கட்டணச் சலுகையும் அளிக்கப்படுகிறது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் சேவையும் இலவசம். இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய முதியோர் நல சிகிச்சை நிபுணர் வி.எஸ்.நடராஜன், 'இன்றைக்கு முதுமையில் தனிமையை அனுபவிக்கும் முதியவர்களுக்கு, இந்த மருத்துவத் திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

 'குட்’டீஸ்களுக்கு சிகிச்சை!

அக்கம் பக்கம்

புற்றுநோய் என்றாலே உள்ளுக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும். ஏதும் அறியாத குழந்தைகளைத் தாக்கினால், பயத்தில் முடங்கிப்போய்விடுவார்கள். குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி சிகிச்சை அளிக்கும் வகையில், பிரேசில் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை, புது முயற்சியில் இறங்கியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பிடித்தமான சூப்பர் ஹீரோக்கள் படம் ஒட்டப்பட்டுள்ள பாட்டில்களில் மருந்துகளைக் கொடுக்கின்றனர். அவர்கள் இருக்கும் அறை முழுக்க சூப்பர் ஹீரோக்கள், பிடித்தமான கார்ட்டூன் போஸ்டர்கள் ஒட்டுவதுடன், பிடித்த ஹீரோக்களின் படங்களும் போட்டுக் காண்பிக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்காகவே மருத்துவமனை, பிரத்யேக காமிக்ஸை அச்சடிக்கிறது. அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹீரோ, எப்படி அதை எதிர்த்துப் போராடுகிறார்... எதிரிகளை வீழ்த்தி, மற்றவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுபோன்று கதைகளும் இடம்பெறுகின்றன. இதனால், குழந்தைகள் மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனராம். இது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பெரிய அளவு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வரவேற்கத்தக்கது. இனி, நம்ம ஊரிலும் ட்ரை பண்ணலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு