Published:Updated:

சருமம் ஷொலிக்க... சப்போட்டா ஃபேஜியல்

சருமம் ஷொலிக்க... சப்போட்டா ஃபேஜியல்

##~##

ரு வார்த்தை பேசுவதற்குள் ஸ்விட்ச் போட்டது போல் பளீர் பளீரெனச் சிரிக்கிறார் நடிகை மஹிமா. 'என்னமோ நடக்குது’ பட ஷூட்டிங்கில் இருந்தவரிடம், மகிழ்ச்சியான மாலை வேளையில் பேசினோம்.

'நடிகைன்னா, அவங்க அழகை எப்படிப் பாதுகாக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க எல்லோருக்குமே ஆசை. உங்க அழகின் ரகசியம் என்ன?'

'உடம்பு ஆரோக்கியமா இருந்தா, அதுவே நம்மை அழகாக் காட்டும். அம்மா சமைச்சுத் தர்ற கேரள உணவு, எனக்கு ரொம்ப இஷ்டம். அது பிடிக்கும், இது பிடிக்காதுன்னு எதையுமே தவிர்க்க மாட்டேன். உடம்புக்கு எதெல்லாம் நல்லதுன்னு, அம்மா பார்த்துப் பார்த்துச் சமைப்பாங்க. அதுல இருக்கும் ருசியும் சத்தும் பெரிய பெரிய ஹோட்டல்ல தேடினாலும் கிடைக்காது.

சருமம் ஷொலிக்க... சப்போட்டா ஃபேஜியல்

பொதுவா காரம், தூக்கலான உப்பு, புளிப்பு பிடிக்காது. மிதமா இருந்தாத்தான் பிடிக்கும். கொஞ்ச நாள் டயட்டுக்காக அரிசி உணவைத் தவிர்த்திட்டேன். ஆனா, என்னால் அதைத் தொடர முடியலை. காரணம் சின்ன வயசுலேர்ந்து நம்ம உடம்பு அரிசி உணவையே சாப்பிட்டுப் பழகியிருக்கு. வெயிட் போடும்னு பயந்து உடம்புக்குத் தேவையான சத்து கிடைக்காம இருந்துடக் கூடாது. இத்தனைக்கும் டயட்டீஷியன் கொடுத்த ரெசிபிகளைத்தான் கடைப்பிடிச்சேன். எனக்கு அது சரிவரலைன்னதும் விட்டுட்டேன். எதையுமே அதிகமா சாப்பிடாம அளவா சாப்பிடறது நல்லது. தேவையான உணவுகளை, சரியான நேரத்துக்குச் சாப்பிட்டா போதும். உடம்பு ஆரோக்கியமா இருக்கும்.'

'சருமப் பராமரிப்புக்கு என்ன செய்யறீங்க?'

'பிளாக் ஹெட்ஸ் எடுக்க மட்டும்தான் பியூட்டி பார்லர் போவேன். ஏன்னா ஏதாவது கெமிக்கல் பிரச்னையாகிடுச்சுன்னா முகம் பாதிப்படைஞ்சிடும். முடிஞ்ச வரைக்கும் வீட்டுப் பராமரிப்புதான். வீட்டுலேயே பழக்கூழ் பேக் போட்டு ஃபேஷியல் பண்ணிப்பேன். சப்போட்டா பழம் சருமத்துக்கு ரொம்ப நல்லது. அதைச் சாப்பிட்டா, நல்ல இரும்புச் சத்து கிடைக்கும். அதையே நல்லா மசிச்சு முகத்துல பேக் போட்டு 10 நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, முகம்  ஜொலிக்கும். தவிர எலுமிச்சைச் சாறை பஞ்சுல தோய்ச்சு, லேசா முகம் முழுக்கத் தடவி ரெண்டு, மூணு நிமிஷம் கழிச்சு முகம் கழுவிடணும். சிலருக்கு லேசா எரிச்சலும் இருக்கலாம். ஆனா, இதுதான் இயற்கையான ஒரு ப்ளீச்.  

தண்ணி நிறையக் குடிப்பேன். சரும ஆரோக்கியத்துக்கு ரொம்பவே நல்லது. ஆரஞ்சு ஜூஸ், இளநீர், மோர் இப்படி... அந்தந்த சீஸனுக்கு என்னென்ன கிடைக்குதோ, அதைக் குடிப்பேன். கொய்யாப் பழம் ரொம்பப் பிடிக்கும். அது ஸ்கின்னுக்கு ரொம்ப நல்லது.''

'உடம்பை எப்படி ஃபிட்டா வைச்சிருக்கீங்க? வொர்க்அவுட்ஸ், யோகானு ஏதாவது செய்யறீங்களா?'

'நான் பரத நாட்டியம் கத்துக்கிட்டிருக்கேன். வெஸ்டர்ன், பரதம்னு நல்ல பயிற்சி இருக்கு. டான்ஸ் ஆடுவதால், உடம்பு ஸ்லிம்மா இருக்கும். அது என்னோட மனசையும் லேசா வைச்சிருக்கு.'

சருமம் ஷொலிக்க... சப்போட்டா ஃபேஜியல்

 மஹிமாவின் ஹேர் கேர் டிப்ஸ்!

• தினமும் தலை குளித்து, தலையை நல்லா உலரவைக்கணும். நேரம் இல்லாமப்போனா, ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது கட்டாயம் தலைக்குக் குளிக்கணும். தலைமுடி சுத்தமா இருக்கும். உடல் சூடும் குறையும்.

• தினமும் இரவு ஏதாவது ஒரு எண்ணெய் தேய்ச்சு, தலைக்கு நல்லா மசாஜ் செஞ்சிட்டு மறுநாள் தலையை அலசுங்க. தலையில் நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். பொடுகுப் பிரச்னை இருக்காது.

• எப்போதும் மைல்டான ஷாம்பு போடுங்க.  

• பார்லருக்குப் போவதைத் தவிர்த்து, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வது ரொம்பவே நல்லது.

- உமா ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு