Published:Updated:

இளமை சருமத்துக்கு இளநீர்!

நடிகை விஜயலட்சுமியின் பியூட்டி டிப்ஸ்!

இளமை சருமத்துக்கு இளநீர்!

நடிகை விஜயலட்சுமியின் பியூட்டி டிப்ஸ்!

Published:Updated:
##~##

ழைச்சாரல்... நடுக்கும் குளிர்... வெளியில் தலைகாட்டவே தயங்கும் காலை வேளையில், பூக்கள் மலர்ந்தது போல் புன்னகையுடன் வரவேற்கிறார் நடிகை விஜயலட்சுமி.  

'நீங்க அழகாகவும் எளிமையாகவும் இருக்கீங்க. என்ன ரகசியம்?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தேங்க்ஸ்... ரகசியம்னு எதுவும் இல்லை. நான் எப்பவுமே நிறையத் தண்ணி குடிப்பேன். காலையில் எழுந்ததும் பீட்ரூட், கேரட் ஜூஸ். உணவுக்கு அப்புறம் இளநீர். தினமும் காட் லிவர் ஆயில் சப்ளிமென்ட் எடுத்துக்கிறேன். அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தோல், தலைமுடி ரெண்டையும் ரொம்பவே சுத்தமா வெச்சுக்கிட்டா, எல்லோருமே அழகுதான். அதுக்குக் கொஞ்சம் மெனக்கெடணும். ஒரு குழந்தையை வருடுவது மாதிரி தலைமுடியைப் பார்த்துப் பார்த்துக் கவனிப்பேன். நல்ல தரமான ஷாம்பூ, கண்டிஷனர் பயன்படுத்துவேன். பார்லர் ட்ரீட்மென்ட் எனக்குப் பிடிக்காது. தினமும் இளநீர் குடிக்கிறதோட, அப்பப்ப, எடுத்து முகத்துலயும் பூசிப்பேன். நாம சாப்பிடற உணவுதான் சருமத்தில் இருந்து தலைமுடி வரைக்கும் ஊட்டத்தைத் தருது.'

'நீங்க எப்படிப்பட்ட உணவுக்கு ரசிகை?'

'புரதச் சத்து நிறைஞ்ச காலை உணவு, நாள் முழுக்கத் தேவையான ஆற்றலை எனக்குத் தரும். மதியம் எப்போதும் அரிசி சாதம்தான். நிறையப் பேர் அரிசி உணவைச் சாப்பிட வேண்டாம்னு அட்வைஸ் செய்வாங்க. ஆனா நம்ம உடம்புக்குத் தேவையான மாவுச் சத்து அரிசியில் இருந்துதான் கிடைக்குது. என்ன ஒண்ணு, அளவோட சாப்பிடணும். சாதம் கொஞ்சமாகவும், காய்கறிகள் அதிகமாகவும் சாப்பிடுவேன். தினமும் இரண்டு ஸ்பூன் ஃப்ளெக்ஸ் விதைகள் சாப்பிடுவேன். ஜங்க் ஃபுட், ஸ்நாக்ஸ் சாப்பிட மாட்டேன். அதுக்குப் பதிலா டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் சாப்பிடுவேன். வெயிட் போட்டா பிரச்னைனு, சாக்லேட், ஐஸ்க்ரீமைக்கூட இப்ப ஒதுக்கிட்டேன். அப்பப்போ க்ரீன் டீ குடிப்பேன். துளசி ஃப்ளேவர் ரொம்பப் பிடிக்கும்.

இளமை சருமத்துக்கு இளநீர்!

என்னால் தவிர்க்கவே முடியாத உணவுன்னா அது பிரியாணி, இறால். ஆனா அதுவும், அளவோடுதான். வெளிநாட்டு உணவுகளில் தாய்லாந்து உணவு வகை ரொம்பப் பிடிக்கும். இரவு உணவு சப்பாத்தி அல்லது எதாவது டிஃபன்.'

'உடம்பை ஃபிட்டா வெச்சுக்க ஏதாவது உடற்பயிற்சி?'  

இளமை சருமத்துக்கு இளநீர்!

'வாரத்தில் மூணு நாள் தவறாமல் ஜிம் போய் பயிற்சி செய்வேன். ட்ரெட் மில், சைக்கிளிங், ஈ.எஃப்.எக்ஸ்னு ஒவ்வொரு பயிற்சியையும் பதினைஞ்சு நிமிஷம் செய்றதோடு, கை, கால் மற்றும் அடிவயிறுக்கான பயிற்சி பதினைஞ்சு நிமிஷங்கள் செய்வேன். தவிர, தினமும் வீட்டைச் சுத்தி நடப்பேன். மத்தபடி வீட்டு வேலைகளை விரும்பிச் செய்றதும் ஒருவித உடற்பயிற்சிதான். யோகாவில் எக்கச்சக்க பலன் இருக்கு. வர்ற நியூ இயர்ல யோகா கத்துக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.''

'நீங்க எப்படிப்பட்ட கேரக்டர்?'

'கொஞ்சம் கூச்ச சுபாவம் உண்டு. அதுவும் பழகும் வரைக்கும்தான். அப்புறம் வாயாடின்னு சொல்ற அளவுக்கு சகஜமாப் பழகிடுவேன். என்னைப் பொருத்தவரைக்கும், ஃபேமிலியோட இருக்கிறது, காரில் லாங் டிரைவ் போறது, பிடிச்ச மியூசிக் கேட்கிறது, ஃப்ரெண்ட்ஸோட நேரத்தைச் செலவிடுறது, நல்ல சாப்பாடு சாப்பிடுறது, நல்ல சினிமா பார்க்கிறது, பார்க், பீச் போறது, மழையை ரசிக்கிறதுனு சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னை சந்தோஷப்படுத்தும். '

'உங்களுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு?'

'குழந்தைகளோட விளையாடுறது. இசையை ரசிக்கிறது, நேரம் கிடைக்கும்போது குட்டித் தூக்கம் போடுறதுனு இந்த லிஸ்ட் ரொம்பப் பெரிசுங்க. நான் சொல்ல ரெடி. தொடராப் போடுவீங்களா..?'' என்று குறும்பாகக் கேட்கிறார் விஜயலட்சுமி.

- உமா ஷக்தி

படங்கள்: ஆ.முத்துக்குமார்

டிப்ஸ்... டிப்ஸ்!

• பீட்ரூட், கேரட், நெல்லிக்காய் தலா ஒன்றை அரைத்துச் சாறாக்கி, பாதி எலுமிச்சைப் பழச்சாறு கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தால், ஆற்றலும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

• இளநீர், ஃப்ரெஷ் ஜூஸ், க்ரீன் டீ-னு அதிக நீர்ச் சத்து உடம்பில் சேர்ந்தால், நம் சருமம் எப்பவும் இளமையோடு இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism