Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அரிய வகைக் குறைபாடுக்கு அசத்தல் சிகிச்சை!

##~##

ஈராக்கைச் சேர்ந்த ஆறு மாதப் பெண் குழந்தைக்கு, 'ஸ்பிலிட் கார்ட் மால்ஃபார்மேஷன் டைப் 1’ என்ற பிரச்னை இருந்தது. இது லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய அரிய வகைக் குறைபாடு. ஈராக் மருத்துவர்களால் இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கமுடியாத நிலையில், குழந்தையின் பெற்றோர் கடந்த டிசம்பர் மாதம், சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், இடது கால் சற்று நீளமாகவும், முதுகின் கீழ்ப்பகுதியில் ஒரு முடிக்கற்றை வளர்ந்து, முதுகெலும்பைத் துருத்திக்கொண்டு இருப்பதையும் கண்டறிந்தனர். இதனால், முதுகெலும்பின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்து துருத்திக்கொண்டிருந்த எலும்பை நீக்கியுள்ளனர். பால் குடிப்பது, சிறுநீர்- மலம் கழிப்பது, கால்களை அசைப்பது போன்றவை இந்த அறுவைசிகிச்சையால் சரியாகியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இனி, 'பாஸ்’ இருந்தால்தான் பார்க்கலாம்!

தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உள்நோயாளிகளை உறவினர்கள் பார்க்கமுடியும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் அப்படியல்ல. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே சென்று உள் நோயாளியை சந்திக்க முடியும். சில தலைமை அரசு மருத்துவமனைகளில் நேரக்கட்டுப்பாடு இருந்தும், அது நடைமுறையில் இல்லை. தற்போது இதைக் கடுமையாக்கி, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள் நோயாளிகளை உறவினர்கள் சந்திக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில், உறவினர்களுக்கு 'பாஸ்’ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்கம் பக்கம்

சென்னை மருத்துவமனை சாதனை!

இடுப்புக்குக் கீழே ஒட்டிப்பிறந்த ஆண் இரட்டையர்களை, சென்னை அப்பல்லோ மருத்துவர்கள், 18 மணிநேர தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிரித்துள்ளனர். பெரும்பாலும் இரட்டையர்களில் பெண் குழந்தைகளே ஒட்டியவாறு பிறப்பார்கள். இதுவரை நான்கு ஆண் இரட்டையர்களே பிறந்துள்ளார்கள். இதில் இவர்கள் ஐந்தாவது. 'தான்சானியா’ நாட்டினைச் சார்ந்த எரிகானா, மற்றும் எல்யூடி, என்ற இந்த இரட்டையர்களைப் பிரிக்க, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். இந்த அறுவைசிகிச்சையை நரம்பியல், எலும்பு, பிளாஸ்டிக் சர்ஜரி எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த 20 மருத்துவர்கள் குழு மேற்கொண்டது. பிரிக்கப்பட்ட பிறகு குழந்தைகள் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். இவர்கள் உடல்நிலையும் படிப்படியாகச் சீரடைந்து வருகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டையரை வெற்றிகரமாகப் பிரித்ததன் மூலம் 'இந்தியாவின் மருத்துவ நகரம்’ என்ற பெருமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது சென்னை.