Published:Updated:

வீடு தேடி வரும் ஃபேமிலி டாக்டர்!

வீடு தேடி வரும் ஃபேமிலி டாக்டர்!

வணக்கம்.

##~##

நேற்றுத்தான் பிறந்தது போல நினைவு. 'டாக்டர் விகடன்’ இதழுக்கு இது மூன்றாவது பிறந்த நாள். கைவீசி நடை பழகிய குழந்தை, மழலை மொழி பேசி, உலா வரத் தொடங்கும்போது, குடும்பத்தினர் அனைவரின் அன்பும் கவனமும் அதன் மேல்தான் இருக்கும். அதுபோலத்தான், 'டாக்டர் விகடன்’ மீது, வாசகர்களின் அன்பும் வாழ்த்துகளும் குவிந்துகொண்டே இருக்கின்றன. அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுகாதாரம் மற்றும் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை, தகுதியான மருத்துவ நிபுணர்களின் பேட்டிகளை வழங்கிவந்த 'டாக்டர் விகடன்’ கடந்த ஆண்டில் இன்னும் சிறப்பான பங்களிப்பைத் தரவேண்டி, ஹெல்த், உணவு, குடும்பம், ஃபிட்னெஸ், அழகு என்ற ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முக்கியமான மருத்துவச் செய்திகள், அவற்றை அடிப்படையாகக்கொண்ட தலைசிறந்த மருத்துவநிபுணர்களின் நேர்காணல்கள், உணவு மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்களின் வழிகாட்டும் கட்டுரைகள் என்று ஆரோக்கியச் செய்திகளை அள்ளி வழங்கி வருகிறோம். மாற்று மருத்துவமாக நாம் வழங்கிவரும் சித்த மருத்துவக் குறிப்புகளும், சித்த மருத்துவர் தரும் உணவுக்குறிப்புகளும் டாக்டர் விகடனின் சூப்பர் ஹிட்!

ஒவ்வொரு இதழுடனும் வெளிவரும் இணைப்பிதழ், உங்கள் வீட்டின் செல்லக் குழந்தையாகிவிட்டது. குழந்தை நலம், முதியோர் நலம், பெண்கள் நலம் மற்றும் ஊட்டச் சத்து மிகுந்த உணவுகள் என்று பார்த்துப் பார்த்துத் தயாரிக்கப்படும் இணைப்பிதழுக்கு, நீங்கள் தரும் ஆதரவு பிரமிக்கவைக்கிறது.

வாசகர்களாகிய உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்தின் மீதும், 'டாக்டர் விகடன்’ கொண்டிருக்கும் அதீத அக்கறையின் இன்னும் ஒரு வெளிப்பாடுதான், முக்கிய நகரங்கள்தோறும் நாங்கள் நடத்தும் 'மருத்துவ முகாம்’கள்.

வீடு தேடி வரும் ஃபேமிலி டாக்டர்!

உங்கள் உணர்வுடனும் உணவுடனும் உடல்நலத்துடனும்... உங்கள் வாழ்க்கையுடனே இரண்டறக் கலந்திருக்கும் 'டாக்டர் விகடன்’, இன்னும் நல்ல விஷயங்களைத் தேடித் தேடித் தரக் காத்திருக்கிறது. உங்கள் ஆரோக்கிய வாழ்வே, எங்கள் நோக்கம்!

3-ம் ஆண்டுச் சிறப்பிதழாக மலர்ந்து உங்கள் கைகளில் தவழ்ந்திடும் இந்த இதழில், வீட்டிலேயே இருக்கும் டாக்டரான 'அஞ்சறைப் பெட்டி’யில் இருக்கும் அருமருந்துகளைப் பற்றி பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன் எழுதும் 'ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்’ தொடர், பிரபலங்களின் ஆரோக்கியம் குறித்துப் பேசும் 'நல்லா இருக்கீங்களா’ என்னும் பகுதி, பெயரே தெரியாத புதுப்புது வியாதிகள் வந்து பயமுறுத்தும் இந்தக் காலச் சூழலில், நோய்களின் அறிகுறிகளைச் சொல்லும் 'அறிகுறிகளை அறிவோம்’ என்னும் தொடர் பகுதி... என்று உங்கள் வாசிப்புக்கும் வாழ்க்கைக்குமான பகுதிகள் காத்திருக்கின்றன.

வாசித்துப் பாருங்கள்... வாழ்க்கையில் உடல் நலமும் மன வளமும் ஒருங்கே பெற்று வாழுங்கள்!

- ஆசிரியர்